Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Wednesday, February 08, 2012 16 Rabiul Al-Awal 1433

Flash News

.....கல்வி-வேலை வாய்ப்புக்களில் மிஸ்ரா குழு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழகத்தில் 3.5.சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்திட கோரியும் நாடெங்கிலும் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்திட மாநில செயற்குழுவில் முடிவு...

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<Previous
Wednesday, February 08, 2012
சங்கரன் கோவில் கலவரம் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழக அரசிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்.


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் நகர் பகுதியைச் சார்ந்தவர்கள் காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தீர்த்த நீர் எடுத்துச் கொண்டு கழுகுமலை சாலை வழியாக ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் இஷா ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் ஊர்வலத்திலிருந்து பள்ளிவாசலுக்குள்ளே செருப்புக்கள் வீசப்பட்டுள்ளன. காவல் துறையினரில் கட்டுப்பாட்டை மீறி கலவரமாக மாறி சாலைகளில் இரு புறமும் இருந்த கடைகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கழுகுமலை சாலையில் உள்ள பள்ளிவாசல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு லாரிகள், இரு கார்கள், மூன்று ஆட்டோக்கள், பத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து நாசமாக்கப்பட்டதோடு, பல கடைகளும் சூரையாடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. இச்சம்பவத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ரூபாய் ஒரு கோடிக்கும் மேலான சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மத துவேசங்களுக்கு இடம் அளிக்காமல் தமிழகத்தில் மத நல்லிணக்கம் தழைத்திட கலவரத்தை தூண்டியவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திட தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சொத்துக்களை இழந்து தவிர்க்கும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவர்களுக்கும் நிவாரணம் வழங்கிட தமிழக அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<Previous

Image Gallery










































More Links


All India


Live Video



Flash News







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்