Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 19, 2013 9 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Sunday, November 14, 2010
அனைத்து மாவட்ட தலைவர் / செயலாளர்களுக்கு


எதிர்வரும் டிசம்பர் 11-ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு சம்பந்தமான பணிகளில் முழுமையான கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம். இதற்காக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி பணிகளை உற்சாக படுத்தியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த மாநாட்டிற்காக மாவட்ட / பிரைமரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தங்களுக்கு 15-10-2010 அன்று சுற்றறிக்கை அனுப்பியிருந்தோம். தலைவர் பேராசிரியர் அவர்கள் அன்றாடம் மணிச்சுடர் நாளிதழில் மாநாட்டு பணிகள் குறித்து எழுதி வருகிறார்கள். அவற்றையெல்லாம் தாங்கள் பார்த்திருப்பீர்கள்.

இத்துடன் மாநாடு பற்றி உள்ளூர் கேபிள் டிவி களில் விளம்பரம் செய்வதற்காக ஒரு நிமிட விளம்பர சிடி இணைத்துள்ளோம். அதனை காப்பி எடுத்து தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரைமரிக்கும் அனுப்பி அவற்றை கேபிள் டிவி-க்களில் விளம்பரம் செய்ய ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாட்டின் வெற்றிக்காகத் தாங்கள் முழு மூச்சுடன் பாடுபட வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக உங்கள் மாவட்டம் முழுவதும் சுவர் மற்றும் பிளக்ஸ் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்பதில் முழு கவனம் செலுத்துமாறு வேண்டுகிறோம்.

மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பை முன்வைத்து நடத்தப்படும் இம்மாநாட்டில் பிரசுரங்கள் அச்சிட்டு ஜமாஅத்துக்களில் வினியோகிக்கப்பட்டுள்ளனவா என்பதையும், முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் விருதுக்காக பரிந்துரை விண்ணப்பங்கள் ஜமாஅத்துகளிடம் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும் தயவு செய்து கவனிக்க வேண்டுகிறோம். அந்த விருதுக்கான தகுதியுள்ள மஹல்லா இருப்பின் அதை உடனடியாகப் பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறோம்.

மாநாட்டுப் பேரணியில் சீருடை அணிந்த இளைஞர்கள் அணிவகுத்து வர உள்ளனர். வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அல்லது வெள்ளை கைலி அணிந்து வர வேண்டும் அவர்களுக்கு தலைமையிலிருந்து பச்சை தொப்பி வழங்க இருப்பதால் உங்கள் மாவட்டத்திலிருந்து வருகின்ற சீருடை இளைஞர்கள் எத்தனை பேர் என்ற தகவலைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இந்த மாநாட்டிற்குத் தங்கள் மாவட்டத்திலிருந்து வரக்கூடிய வாகனங்கள் பற்றி இம்மாத இறுதிக்குள் தாங்கள் தகவல் தந்தால்தான் அதற்குரிய இட ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

வரவேற்புக்குழு உறுப்பினர் பட்டியல் மணிச்சுடரிலும், முஸ்லிம் லீக் இணையதளத்திலும் அன்றாடம் வெளியிடப்படுகின்றது. உங்கள் மாவட்டத்திலிருந்தும் அதிகமான எண்ணிக்கையில் வரவேற்புக்குழு உறுப்பினர்கள் இடம் பெற செய்ய வேண்டுகிறோம். உங்கள் மாவட்டத்தில் மாநாடு சம்பந்தமாக செய்யப்படும் பணிகள் குறித்து அவ்வப்போது மாநிலத் தலைமைக்கு தகவல் தர அன்புடன் வேண்டுகிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், நம் முயற்சிகளுக்கு நிறைவான வெற்றியை தந்தருள்வானாக ஆமீன்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்