Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Sunday, December 12, 2010
இறைவனுக்கு நன்றி! கே.எம்.கே.


மாதங்கள் பலவாகத் தொடர்ந்து நடந்த முயற்சிகள் யாவும், இறைவனின் திருவருளால், நேற்று, சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் திருவினையாக்கும்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடு-மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம்-மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு """"நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’’ விருது வழங்கும் விழா ஆகிய அனைத்தும் நிறைவாக நடைபெற்றுள்ளன.

துஆ ஒருபோதும் தோற்பதில்லை என்று இன்று நேற்று அல்ல; தொன்று தொட்டு கூறப்பட்டு வரும் ஆத்மீக உலகத்து உண்மையாகும். இந்த உண்மைக்கான உன்னதமான அத்தாட்சியை நேற்றைக்கு தாம்பரம் பகுதியில் நாடே பார்த்தது; நானிலம் முழுவதிலும் உள்ளவர்களும் ‘மூன்’ தொலைக்காட்சி மூலமும், முஸ்லிம் லீக் வெப்சைட் நேரலை ஒளிபரப்பு மூலமும் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறார்கள்.

நிறைவு விழாவுக்கு வருகை புரிந்து, முஸ்லிம் சமுதாயம் வழங்கிய விருதினை ஏற்று, எல்லாரும் நிறைவடையும் முறையில் நிறைவுரை ஒன்றையும் நிகழ்த்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த """"நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’’ டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், அரசியல் நாகரிகத்திற்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டாய்த் திகழும் மாண்புமிகு துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவர்களுடன் அணி அணியாய் வந்து முஸ்லிம் லீக் மாநாட்டை பெருமைப்படுத்திய அமைச்சர் பெருமக்கள், தி.மு.க. முன்னோடிகள் மற்றும் தொண்டர் குழாம் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

உலகின் பல நாடுகளில் வாழ்ந்துகொண்டுள்ள தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக கடல் கடந்த நாடுகளில் இரு ந்து வருகை புரிந்த காயிதெ மில்லத் பேரவை முன்னணித் தலைவர்கள்-தோழர்கள் எல்லோருக்கும் நன்றி கூறுவோம்.

தமிழகம் எங்கும் உள்ள மஹல்லா ஜமாஅத்களின் பிரதிநிதிகளாக வருகை புரிந்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றி கூறுவோம். சங்கை மிகுந்த சன்மார்க்க அறிஞர்களும், சமுதாயப் புரவலர்களும், ஆன்மீகச் சான்றோரும் நிறைவாக வருகை புரிந்து மாநாட்டின் நிறைவுக்கு உதவியதற்காக அவர்கள் எல்லோருக்கும் நன்றி கூறுவோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்கள், தேசியத் தலைவர் மாண்புமிகு இ.அஹமது, கேரளத் தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், கேரளத்து சிங்கக்குட்டி குஞ்ஞாலிக் குட்டி, டெல்லி குர்ரம் அனீஸ் உமர், தேசியப் பொருளாளர் ஆகா. சாஹிப், மாநிலங்களின் முஸ்லிம் லீக் முன்னோடிகள் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பல நாட்கள் கடிய உழைப்பு மேற்கொண்டு பலப்பல சிரமங்களை மேற்கொண்டு, மாவட்டங்கள் தோறும் மாநாட்டுப் பணிகளைச் சிறப்பாகச் செய்து, இளைஞர்களை அணிதிரட்டி, மாநாட்டில் லட்சோப லட்சம் தொண்டர்களாக வருகை புரிந்து முஸ்லிம் சமுதாயத்தின் பெருமையை நிலைநிறுத்தி உள்ள என்னரும் முஸ்லிம் லீக் சகோதரர் களுக்கு நன்றி! நன்றி! நன்றி! இவற்றை எல்லாம் ஒருங்கு திரட்டும் பணியில் விழாக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்று மகத்தான முறையில் மாநாட்டு விழாவை நடத்திக் காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி அப்துர் ரஹ்மான் தலைமையிலான விழாக் குழுவின ருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டும் நன்றியும் உரித்தாகும். மாநாடு வெற்றி பெற வேண்டுமென வருகை புரிந்தோர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, மாநாடு வெற்றிக்கு வீடுகளிலும் மஸ்ஜிதுகளிலும் மதரஸாகளிலும், தைக்காகளி லும், தர்காகளிலும், யாருக்கும் தெரியாமல் ஊரில் உள்ள ஒருவருக்கும் புரியாமல் தனித்திருந்து கொண்டும் துஆ செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி. புனித ஹஜ்ஜிலும் துஆ; போகுமிடங்களிலும் - செல்லுமிடங்களிலும் துஆ; தஹஜ்ஜத் தொழுகையில் துஆ; வெள்ளி ஜும்ஆவில் துஆ; எங்கும் துஆ, எதிலும் துஆ; எல்லோரிடத்திலும் துஆ; எப்பொழுதும் துஆ என்று இருந்தவர்கள் அத்துணை பேருக்கும் அளப்பரிய நன்றி.

எல்லாம் வல்லவனே! உனக்காக வாழ்கிறோம்; உன்னருளை வேண்டுகிறோம்; உனது திருப்பொருத்தத்தை யாசிக்கிறோம்; இதனால்தான் எல்லோரையும் உனக்காக நேசிக்கிறோம்; இந்த தேசத்தின் வெளிப்பாடாக சமுதாய ஒற்றுமைக்கு, சமய நல்லிணக்கத்துக்கு மாநாடு நடத்தி யுள்ளோம்!

அருளின் கதவுகளை அடைக்காத ஆண்டவனே! சமுதாயம் நலமடைய, சமுதாயத்துக்கு உதவி வரும் நல்லோர் நலமடைய, நாடும் நாமும் ஏற்றுப் போற்றும் நல்லவர்கள் நலமடைய உன்னருளைத் தொடர்ந்து வழங்குவாயாக!

வணக்கம் எங்களுக்கு வாழ்க்கை

எல்லாருடனும் காட்டும் இணக்கம்

எங்களின் வழக்கம்!

நல்லிணக்க வழக்கத்தை

நாட்டின் வாழ்க்கையாக்குவோம்!

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்