Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, December 15, 2010
சமச்சீர் கல்வியில் சிறுபான்மை மொழிப் பாடங்கள் அரசானை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி


சமச்சீர் கல்வியில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு இடம் அளித்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு..

சமச்சீர் கல்வித் திட்டத்தில் சிறுபான்மையினர் மொழிகளான உர்து, அரபி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போற்றவற்றுக்கு உரிய இடம் தந்து பாடத்திட்டத்தில் இணைத்து, அம்மொழிப்பாடங்களையும் கட்டாயமாகப் பயில்வதுடன், அவற்றில் தேர்வுகள் எழுதிடவும், மதிப்பெண்கள் வழங்கிடவும் வழி செய்யுமாறு தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

சென்ற 11-ம் தேதி தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் இந்தக் கோரிக்கை தமிழக முதல்வர் அவர்களிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது.

சிறுபான்மை மக்களின் உரிமைப் பாதுகாவலராகவும், அவர்களின் உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்து நன்மைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவராகவும் திகழும் தமிழக முதல்வர் அவர்கள், சிறுபான்மையினரின் மொழிப்பாடத்திற்குரிய அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்று அறிவித்தார்கள்.

அவர்களின் அறிவிப்பு, இன்றைக்கு அரசாணையாக பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு சிறுபான்மை சமுதாயங்களின் சார்பில் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

கலைஞர் அவர்களின் நல்லாட்சி எல்லாக் காலத்திலும் நீடிக்கவும் நிலைக்கவும் தமிழக சிறுபான்மை சமுதாயங்கள் எப்பொழுதும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்னும் உறுதி மொழியையும் ஏற்கிறோம்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்