Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, December 24, 2010
அனைத்து மாவட்ட தலைவர்/செயலாளர்களுக்கு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு 11.12.2010 அன்று சென்னை தாம்பரத்தில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இம்மாநாடு எல்லா வகையிலும் சிறப்புடன் அமைய ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

இம்மாநாட்டின் வெற்றியை மேடையிலேயே பார்த்திருப்பீர்கள். நம் தீர்மானங்கள் பலவற்றை சிறப்புரையாற்றும்போதே ஏற்றுக்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், மாநாட்டில் அறிவித்ததை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பித்து வருவதை நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அறிந்திருப்பீர்கள்..

தாய்ச்சபையின் இந்த சாதனை, சமுதாயத்தை சென்றடைய தமிழ்நாடு முழுவதும் மாநாட்டு தீர்மான விளக்க கூட்டங்கள் நடத்தப்படுவது அவசியம். எனவே பிரைமரிகளோடு தாங்கள் தொடர்பு கொண்டு பொதுக்கூட்டங்கள் நடை பெறும் இடங்களை முடிவு செய்து தலைமைக்கு உடன் தெரிவிக்க வேண்டுகிறோம்.

மாநாட்டு பணிகளில் முழு ஈடுபாடு கொண்ட அனைவரும் விட்ட இடத்திலிருந்து இயக்க பணிகளை செய்ய வேண்டும் என தலைவர் பேராசிரியப் பெருந்தகை அவர்கள் மணிச்சுடரில் எழுதியிருப் பதைப் படித்திருப்பீர்கள்.

அந்த வகையில் உறுப்பினர் சேர்ப்பு/பிரைமரி அமைப்பில் முழு கவனம் செலுத்துப்படுவது கடமையாகும். இதுவரை மாவட்ட தேர்தல்கள் நடைபெறாத மாவட்டங்கள் 2011 ஜனவரி 16 ம் தேதிக்குள் மாவட்ட தேர்தல்களை நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்து உடன் தகவல் தர அன்புடன் வேண்டுகிறோம். வஸ்ஸலாம்

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் >
மாநிலச் பொதுச் செயலாளர் >
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்