Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, December 24, 2010
முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்து


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:

கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

அன்பு என்னும் அரியதொரு பண்பால் மானிடரை அரவணைத்துச் செல்லும் சிறந்த நெறி கிறித்துவம் ஆகும்.

ஏசுபெருமானின் வழிநின்று பிறர் வாழ தமது உடல், பொருள் ஆவியைத் தியாகம் செய்து வரும் திருக்கூட்டம் கிறிஸ்துவத்தில் எப்பொழுதும் இருக்கிறது.

கல்விச் சேவையிலும், மருத்துவத் தொண்டிலும், ஏழ்மையைப் போக்கும் சமூகப் பணியிலும் கிறிஸ்துவச் சான்றோர் உலகம் போற்றும் வகையில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

1962 முதல் உலக சமயங்களுக்கு இடையில் கலந்துரை யாடல் நடத்தியும், உறவாடுதலை வளர்த்தும், சமூக நல்லி ணக்கத்தைத் தழைக்கப் பாடுபடும் பண்பாடும், பாரம்பரிய மும் கிறிஸ்துவ நெறிச் செல்வர்களிடம் நிறைந்து காணப்படு கின்றது.

அன்பர் பணி செய்ய தன்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே - என்றார் தாயுமானவர்.

அத்தகைய அன்பர் பணி அகிலமெங்கும் நடக்கவும், எல்லோருக்கும் வேண்டிய இன்பநிலை வாய்க்கவும் இறையருள் நிறைக.

எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்