Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, May 24, 2013 15 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Tuesday, March 01, 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்/செயலாளர் கவனத்திற்கு...


தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று நமக்கு மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாகிப் அவ்வப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற கோரிக்கைகளை ஏற்று தி.மு.க. அரசு பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றது. இவைகளை விளக்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும். தி.மு.க. அரசின் முஸ்லிம்களுக்கான சாதனைப் பட்டியல் தொகுப்பு நூல் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் விரைவில் வெளிவர இருக்கின்றது. அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தேர்தலுக்கான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழுவை தேர்வு செய்து மாநில தலைமை நிலையத்திற்கு அனுப்பிட அனைத்து மாவட்ட தலைவர், செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இக்குழுவில் மாவட்டத் தலைவர், செயலாளர், பொருளா ளர் ஆகிய மூவரோடு மேலும் நான்கு நபர்களை தேர்வு செய்து ஏழு நபர்களைக் கொண்ட மாவட்டத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களின் முழு முகவரி, அலைபேசி எண் விபரத்தை மாநில தலைமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பிரச்சாரக்குழு மற்றும் இளம் பேச்சாளர்களின் பட்டியல் விரைவில் அறிவிக் கப்படும். அதே போல அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து நபர்களைக் கொண்ட மாவட்ட பிரச்சாரக் குழுவை மாவட்ட தலைவர், செயலாளர் தேர்வு செய்து தலைமை நிலையத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தேர்தல் பணிக்குழு, மாவட்டத் தேர்தல் பிரச்சாரக்குழு பட்டியலை அனைத்து மாவட்ட தலைவர், செயலாளர்களும் 10-03-2011 தேதிக்குள் மாநில தலைமை நிலையத்திற்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்