Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, May 23, 2013 13 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, May 16, 2011
புதிய ஆட்சிக்கு வாழ்த்து கூறுவோம் - கே.எம்.கே


13.4.2011ல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடந்து, ஒரு மாத காலம், பலப்பல எதிர் பார்ப்புகள், ஆரூடங்கள், கருத்துக் கணிப்புகள், கருத்துத் திணிப்புகள் என்று தொடர்ந்து வெளிவந்து, தமிழக அரசியல் கட்சிகளையும் மக்களையும் திக்குமுக்காடச் செய்த பின் 13.5.2011ல் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. அ.இ.அ.தி.மு.க. அணியினர் அமோக வெற்றி பெற்று, அ.இ.அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக் கும் நிலை உருவாகியுள்ளது. தொங்கு சட்டமன்றம் என்று தமிழகத்தில் எப்பொழுதும் ஏற்பட்டதில்லை. அதே பாரம்பரியம் இந்தத் தேர்தலிலும் தமிழக மக்களால் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் உள்ள பாராளுமன்ற ஜனநாயக முறைப்படி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகக் கருதப்படுகிறது. ஜனநாயகப் பண்புகளையும், மாண்புகளையும், நடைமுறை களையும் நாட்டுமக்கள் நண்குணர்ந்திருக்கிறார்கள். ஜனநாயக முறையில் சட்டப்படி, அமைதியாக அறஞ் சார்ந்த நெறியின் அடிப்படையில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. நமது இந்தியத் திருநாட்டில் ஜனநாயகத்தின் மகத்துவத்தை நம் நாட்டுமக்கள் நன்கு உணர்ந்து போற்றி வருகிறார்கள் இந் தத் தேர்தலும் தேர்தல் முடிவுகளும் தக்க சான்றுகளாக உள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலை மையிலான கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், பாட் டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெற்று 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்தக் கூட்டணிக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்னும் அழகிய நாமம் சூட்டி தேர்தல் பிரசாரம் நாடெங்கும் நடந்தது. தி.மு.க. அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனை கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியவை; தமிழக மக்களில் பெரும்பாலானவர்கள் வரவேற்றுப் போற்றி யவை. அந்தச் சாதனைசரித்திரம் தொடர்ந்திட தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் அமோகமாக ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆதரவு தந்தார்கள்; அலை அலையாக வந்து வாக்களித்தார்கள். ஆனால், புதிதாக வாக்காளர் ஆகியுள்ள இளைய தலைமுறையினர்-சற்றொப்ப பத்து சதவீத வாக் காளர்கள் அமெரிக்க அரசியலின் சுலோகத்தை நினைத்து கொண்டு `வோட் ஃபார் சேஞ்சு�-மாற்றத்திற்கு வாக்களியுங் கள் என்னும் சுலோகத்தை முக்கியமாகக் கொண்டு வாக் களித்ததன் பயனாக, அ.இ.அ.தி.மு.க. அணிக்கு அதிக வாக்குகள் குவிந்து விட்டன. அதன் விளைவாக தி.மு.க. அணிக்கு வரவேண்டிய வெற்றிகள்யாவும் அ.இ.அ.தி.மு.க. வுக்குச் சென்று விட்டன. விளைவு, ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. விரும்பிய வருக்கு ஆட்சியைக் கொடுப்பதும், விரும்பாதவர்களிட மிருந்து ஆட்சியை எடுப்பதும் இறைவனின் பேரதிகாரத் துக்கு உட்பட்டதாகும். அந்த இறை நியதியை-இறை விதியை யாரும் மாற்றிவிட முடியாது. நிர்ணயிக்கப்பட்டது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தமிழக அரசியலில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. புதிய ஆட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் தமிழக சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பிலும் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக் கூறுவோம். மக்கள் தீர்ப்பை ஏற்பதும் மதிப்பிலும் போற்றுவதும் ஜனநாயகத்தின் இலக்கணமாகும். அதற்கேற்ப நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் கலைஞர் அரசு மக்களுக்குச் செய்துள்ள நன்மைகள் ஏராளம் என்பது ஒரு பக்கம். ஆனால் மிக மிக முக்கியமானது, தமிழக வரலாற் றில் பல புதிய வழிமுறைகளும், பரிணாமங்களும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குரிய வழி வகைகளும் மிக மிக ஆழமாகச் சிந்தித்து வகுக்கப்பட்டுள்ளன. அந்த வரலாற்று பாதை தொடர்ந்தால்தான் தமிழக வரலாற்றுக்கும் நன்மைவரும்; செம் மொழிக்கும் நலன் பிறக்கும். தி.மு.க.வின் வரலாற்றுச் சாதனைகளை தமிழக அரசின்-தமிழக மக்களின் சாதனைகளாகக் கருத வேண்டும்; எதிர்க் கட்சியின் எதிரியின் சாதனைகள் என்று கருதிவிடக்கூடாது. வரலாற்றைத் திசை திருப்பக் கூடாது; ஆற்றின் போக்கை மாற்றி விடக் கூடாது. வரலாற்றைத் தொடர்வதோடு, அந்த வரலாற்றில் மென்மேலும் நன்மைகள் குவியும் வகையில் செல்வி ஜெயலலிதா அரசின் செயல் திட்டங்களும் செயல் பாடுகளும் அமையவேண்டும் என்பதே தமிழக மக்களின் பெரு விருப்பமாகும்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்