Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, January 20, 2019 13 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்
{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Monday, June 20, 2011
திருச்சி மாநில செயற்குழு தீர்மானங்கள் முழு விவரங்கள்


பள்ளிகள் திறக்கப்பட்டும் பாடங்கள் நடைபெறாமல் மாணவர்கள் குழம்பிப் போய் உள்ள நிலையை கருத்தில் கொண்டு பாடத் திட்டம் தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி - கொழும்பு இடையே தொடங்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படக் கூடாது என்றும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வேண்டும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 2011 ஜுன் 17,18 வெள்ளி, சனி நாட்களில் திருச்சி ஃபெமினா ஹோட்டல் காவேரி அரங்கில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

மாநில நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், 42 மாவட்டங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அமைப்பாளர்கள் என 281 பேர் கலந்து கொண்டனர்

மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்று இக்கூட்டத்திற்கான நோக்கத்தைப் பற்றி கூறினார். காலம் சென்ற சமுதாய புரவலர்களான மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம், சென்னை ஆலீம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி குழுமத் தலைவர் டாக்டர் ஷேக் நூர்தீன், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் அஹ்மது உசேன் மற்றும் தமிழக அமைச்சர் மரியம்பிச்சை, சேலம் மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் எஸ்.எம். பஜ்ருதீன், ஆலங்காயம் நகர துணைச் செயலாளர் சி.பி. அப்துல் காதர், வேலூர் நகர துணைத் தலைவர் ஆர்.வி. கமால் பாட்ஷா, திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான், நாகை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அமீர்ஜான், மாநில துணைத் தலைவர், சென்னை ஹலீம் ஹாஜியார் துணைவியார் ஹாஜியா ஹைருன்னிஸா ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார்.

தமிழக பொதுத் தேர்தல் தொடர்பான கட்சியின் வரவு, செலவு அறிக்கையை இக்கூட்டம் அங்கீகரித்தது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பற்றியும், நடக்க விருக்கும் உள்ளாட்சி தேர்தல் பற்றியும், இயக்கப் பணிகள் குறித்தும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தம் கருத்துக்களை எடுத்துக் கூறினர். அதனை தொடர்ந்து மாநில நிர்வாகிகள் ஆலோசனைகள் வழங்கினர்.

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூட்ட நிறைவுரையாற்றினார்.

இச்செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் வருமாறு.

வாக்காளர்களுக்கு நன்றி

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று நாகப்பட்டினம், வாணியம்பாடி, சென்னை துறைமுகம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

இத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள், தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயல் வீரர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றுச் சாதனை

கேரள மாநிலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

உம்மன்சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் கல்வி, உள்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இலாகாகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நால்வர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இந்த வெற்றிக்காக பாடுபட்ட தேசிய தலைவர் இ. அஹமது, கேரள மாநில தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், பொதுச் செயலாளர் குஞ்ஞாலிகுட்டி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. சமச்சீர் கல்வி

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பல்வேறு குழப்பங்களும், ""என்ன பாடத்திட்டம் என அறிய முடியாமல்"" மாணவர்களுக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் இதில் மிகப்பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது சிறுபான்மை இன மொழிகளான உருது, அரபி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கல்வி கற்க பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விடக் கூடாது என வலியுறுத்தப்பட்டு அதனை கடந்த அரசு ஏற்றுக் கொண்டது.

சமச்சீர் கல்வியின் பாடத்திட்டங்கள் பற்றி சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. வரும் காலங்களில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு இங்கும் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டால் ஒரே கல்வி என்கின்ற நிலை உருவாகிவிடும் என கல்வியாளர்களின் கருத்து. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெறவில்லை என்பதை கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்கு விரைந்து முடிவெடுக்குமாறு சம்மந்தப் பட்ட அனைவரையும் இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் சேவை தொடங்கப்பட வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கை யாகும் . அச்சேவை அண்மையில் துவக்கப்பட்டதும் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

டெல்லியில் பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் இந்த கப்பல் சேவையை நிறுத்த கோரிக்கை வைத்தது, தென் மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழர்களின் கனவுத் திட்டமான சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி -கொழும்பு கப்பல் போக்குவரத்து தொடர வேண்டுமென்பதும், இராமேஸ்வரம் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்கப்பட வேண்டுமென்பதும் தமிழக மக்களின் விருப்பமாகும் என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு இச்செயற்குழு சுட்டிகாட்டிகிறது.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு

கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கி கடந்த அரசு ஆணை பிறப்பித்தது. இதனை உயர்த்தி தருவோமென்றும், இதை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கலைவோமென்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார்.

தமிழக 14 வது சட்டமன்ற முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையின் போது இது பற்றி எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறாதது முஸ்லிகளை வேதனைப் படுத்தியுள்ளது.

எனவே அடுத்து வர உள்ள தமிழக பட்ஜெட் தாக்கலின் போது முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அதிகரித்து அறிவிப்பு வெளியிட தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்து கிறது.

உள்ளாட்சி தேர்தல்

நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலை தனி சின்னத்தில் சந்திக்க உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாவட்டங்களின் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க தமிழகத் தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி கருத்துக்களை கேட்பதென்றும் அக்கூட்டங்களுக்கு மேலிட பார்வையாளர்களை அனுப்புவதென்றும், இதனுடைய செயல்பாடுகளை முறைப் படுத்தி விரைவுபடுத்த குழுக்களை அமைப்பதென்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

வரும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் விடுபட்ட வாக்காளர்களை பதிவதற்கும், வாக்காள அடையாள அட்டைகளை பெறுவதற்கும் முழுமுச்சுடன் செயல்படுமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

<<PreviousNext>>

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்