Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, July 14, 2011
தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞரணி கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு


`காலதாமதமாக பள்ளி கள் திறந்து பல நாட்க ளாகியும் இன்னமும் பாடங்கள் தொடங்கவில்லை. குழப்பம டைந்துள்ள மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, தமிழக அரசு கவுரவம் பாராமல் சமச்சீர் கல்வி பாடங்களை தொடங்கச் செய்ய வேண் டும்.

இடஒதுக்கீட்டில் பொருளா தார அளவு கோலை மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார் கள். அதை திணிக்க முற் பட்டால் நாட்டில் பிரச் சினை உருவாகி பூகம்பம் வெடிக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நெல்i மாவட்டம் தென் காசிள மவுண்ட்ரோட்டி லுள்ள வி.டி.எஸ்.ஆர். திருமண மகாலில் நேற்று நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந் தித்து பேட்டியளித்த பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டதா வது-

சமச்சீர் கல்வி
அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. அதை இந்த அரசு நிறுத்தி வைத்தது. இது தொடர் பாக வழக்கு நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறைக் குப் பின் பள்ளிகள் ஒரு மாதம் காலதாமதமாக திறக்கப்பட்டும் பாடங்கள் நடைபெறவில்லை. எந்த பாடத் திட்டம் என தெரியாமல் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

எனவே, அரசு இதில் கவுரவம் பார்க்காமல் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் பாடங்களை உடனே தொடங்க உத்தர விட வேண்டும். எந்த பாடங்கள் தேவையில்லை என அரசு கருதுகிறதோ அதை நீக்கி விட்டாவது சமச்சீர் கல்வியை உடனே தொடரச் செய்ய வேண் டும். இதில் நீதிமன்றமும் விரைவாக முடிவெடுக்க வேண்டும்.

சமச்சீர் கல்வியில் `தாகம்’ என்ற கவிதை இடம் பெற்று தற்போது அது நீக்கப்பட்டுள்ளது வேதனையைத் தருகிறது.

அக்கவிதையை எழுதிய கவிக்கோ அப்துர் ரஹ் மான் நோபல் பரிசு பெற தகுதிக்குரியவர் என பாராட்டப்படுகின்றது.. அக் கவிதையை பாட நூலில் மீண்டும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

இடஒதுக்கீடு
கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கி தி.மு.க. அரசு உத்தர விட்டது. தமிழக பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது திருச்சி யில் பேசிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா இந்த இடஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்படும் என அறி வித்தார். ஆனால் ஆளுநர் உரையின்போது இதுபற்றி எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. எனவே, பட்ஜெட் தாக்கலின் போது இந்த இடஒதுக் கீட்டின் அளவை உயர்த்தி அறிவிப்பு செய்ய வேண் டும் என தமிழக முதல் அமைச்சரை வேண்டுகி றோம். இடஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவு கோல் என்ற கிரிமிலேயர் பயன்படுத்த வேண்டும் என மீண்டும் குரல் வரத் தொடங்கியுள்ளது. இதை எந்த அரசியல் கட்சியும் ஏற்காது. வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு என திணிக்க முற்பட்டால் பிரச்சினை உருவாகும். தமிழகம் போன்ற மாநி லங்களில் பூகம்பம் வெடிக் கும்.

நில மோசடி
நிலமோசடியில் ஈடு பட்டவர்கள் மீது பார பட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் அதை பாராட் டலாம். ஆனால் தி.மு.க. வினரை பழிவாங்க சட்டம் கொண்டு வரப்படுவதை ஏற்க முடியாது. இது நீதிக்கு அடுக்காது. இன்று இவர் களின் செயல் நாளை அவர்களுக்கு எதிராகத் திரும்பும். ஆட்சி என்பது நிரந்தரமல்ல.

நிலமோசடியில் எத்தனையோ பேர் ஈடு பட்டுள்ளனர். கீழக்கரை முஸ்லிம்களின் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங் கள், போலி பத்திரங்கள் மூலம் விற்கப்பட்டுள்ளன. அடமானம் வைக்கப்பட் டுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர் களுக்கு சொந்தமான நிலத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.இ. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர், வட்டச் செயலாளர் அபகரித்துள்ளனர். புகார் செய்யப்பட்டும் நீதி கிடைக்கவில்லை. அவர் கள் பெயரை இப்போது நான் வெளியிட விரும்ப வில்லை. இவர்கள் மீதெல் லாம் என்ன நடவடிக்கை? தி.மு.க.வினருக்கு எதிராக மட்டும்தான் சட்டமா? இதை எப்படி ஏற்க முடி யும்?

உள்ளாட்சித் தேர்தல்
நடைபெற உள்ள உள் ளாட்சித் தேர்தலை சந்திக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆயத்தமாகி வருகிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோம். உள் ளாட்சி தேர்தலை தனி சின்னத்தில் சந்திக்க உள் ளோம். வெற்றி வாய்ப் புள்ள இடங்கள், தகுதி யுள்ள வேட்பாளர்கள் பற்றி மாநில அளவில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப் படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. அகில இந்திய அளவில் மத்திய அமைச்சர் இ.அஹமது தலைமை யிலும், தமிழகத்தில் எனது தலைமையிலும் இப்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தேசிய அளவில் நான்கு அணிகள் உள்ளன. இளைஞர் அணி, மாணவர் அணி, தொழி லாளர் அணி, மகளிர் அணி எனபன அவை.

இந்த நான்கு அணிகளுக் கும் மாநில அளவில் அமைப்புகளை நியமிக்க உள்ளோம். இதில் முதல் கட்டமாக இளைஞர் அணிக்கு மாநில அளவில் 12 பேர் கொண்ட அமைப் புக்குழு இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்வு செய் யப்பட்டுள்ளது.

வரும் 30-ம் தேதி சென்னையில் முஸ்லிம் மாணவர் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ரம ளான் நோன்பு கழித்து தொழிலாளர் அணி, மகளிர் அணி கூட்டங்கள் நடைபெறும்.

காயல்பட்டினத்தில் ஜூலை 8, 9, 10 மூன்று நாட்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்து. இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பற்றி பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய வேண்டு மென அரசுக்கு அம் மாநாடு கோரிக்கை வைத் துள்ளதை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். அனைத்து பல்கலைக்கழ கங்களிலும் மதுரை காம ராசர் பல்கலையில் இருப் பதுபோல் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுக் கான இருக்கை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

பேட்டியின்போது மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநிலச் செயலாளர்கள் நெல்லை மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஏ. நிஜாமுதீன், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் துராப்ஷா, எல்.கே.எஸ். மீரான் மைதீன், செய்யது முஹம்மது, பாட்டபத்து முஹம்மது அலி, தென் காசி முஹம்மது அலி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்