Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 26, 2013 16 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Wednesday, July 20, 2011
தலைமை நிலைய அறிவிப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காஞ்சிபுர மாவட்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம்


காஞ்சிபுர மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம் 16.07.2011 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கூடுவாஞ்சேரி ஆழ்வார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் எம்.அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலதலைவரும்-தேசிய பொதுச் செயலாளருமாகிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் கலந்து கொண்டு நிறைவுறையாற்றினார்.

மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் வரும் உள்ளாட்சி தேர்தலில் நம் நிலைப்பாடு குறித்து கருத்துரை வழங்கினார். மாநில செயலாளர் கமுதி பஷீர், கே.எம்.நிஜாமுதீன், ஆகியோர் சிறப்பு பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடிய தத்தம் பகுதிகளின் நிலைகுறித்து மாவட்ட பொருளாளர் ஐ.அசதுல்லாஹ் மதுராந்தகம் பி.ஏஜாய், கூடுவாஞ்சேரி கே.எஸ்.தாவூது, கூடு வாஞ்சேரி, முஹம்மது எஹியா சித்திக்- நந்தபாக்கம் கவுஸ் முஹம்மது, எம்.அப்துல் கனி-

செங்கல்பட்டு சர்தார் பாஷா- பொழிச்சலுhர் எஸ்.முஹம்மது பேக்- தாம்பரம் காஜா மொய்தீன்- பனையூர் யூனுஸ்- முஹம்மது அலிராஜா- தாம்பரம் முஸ்தபா- மாடம்பாக்கம் அப்துல் ஹலீம்- நீலாங்கரை கமாலுத்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 24 நகராட்சிகள் 10 பேரூராட்சிகள்,648 ஊராட்சிகளில் உரிய வார்டுகளை தேர்வு செய்து போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காஞ்சிபுர மாவட்ட நிர்வாக சீரமைப்பு- வளர்ச்சி பணிகள்- உள்ளாட்சி தேர்தல் குறித்த விரிவான ஆலோசனை செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் எதிர் வரும் 22-07-2011 மாலை 5 மணியளவில் சென்னை-1 மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இக்கூட்டம் குறித்து தலைமை நிலையத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கு தொலைபேசி அல்லது கடிதம் மூலம் அழைப்பு தரப்படும். தகுந்த காரணமின்றி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இக்கூட்டத்தில் மாநில தலைமையை பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தங்கள் அன்புள்ள கே.ஏ.எம்.முஹம்மது ஆபூபக்கர் மாநில பொதுச் செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்