Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, July 22, 2011
தலைமை நிலைய அறிவிப்பு மாவட்ட தலைவர், செயலாளர்களுக்கு


கடந்த 17,18.06.2011 ஆகிய தேதிகளில் திருச்சியில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

1. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட துணை அமைப்பு களாக முஸ்லிம் லீக் இளைஞரணி, முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்), சுதந்திர தொழிலாளர் யூனியன் (எஸ்.டி,யு), மகளிரணி ஆகிய அமைப்புகளை மாநில அளவில் ஏற்படுத்திட அணிகளின் அனைத்து மாவட்ட - நகர அமைப்பாளர்களையும் அழைத்து ஆலோசனை பெறுவதோடு மாவட்ட தலைவர், செயலாளர்களின் கருத்துக்கள் அடிப்படையில் சேவை திட்டங்கள் மற்றும் சட்ட விதிகள் உருவாக்கி மாநில பொதுக் குழுவின் அங்கீகாரம் பெறுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இளைஞரணி மாநில கூட்டம் சென்ற 11-07-2011 தென்காசியில் நடைபெற்றது. எம்.எஸ்.எப் மாநில கூட்டம் எதிர்வரும் 30-07-2011 சென்னையில் நடைபெற உள்ளது. எஸ்.டி.யு மற்றும் மகளிரணி மாநில கூட்டங்களை ரமளான் மாதத்திற்கு பின் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு தங்களின் மாவட்டத்தில் உள்ள அணிகளின் அமைப்பாளர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்வதோடு, அணிகளின் செயல்பாடுகள் மற்றும் சட்ட விதிகள் உருவாக்கிட தங்களின் மேலான கருத்துக்களை 31-07-2011 தேதிக்குள் தெரிவித்திட கேட்டுக் கொள்கிறோம்.

2. வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அதிக அளவில் தாய்ச்சபை வேட்பாளர்களை போட்டியிட செய்ய வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கூட்டம் நடைபெறாத மாவட்டங்கள் உடனே கூட்டத்தை நடத்துவதோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் பட்டியலை இம்மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களும் தலைமை நிலையத்திற்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

3. `மணிச்சுடர்’ நாளிதழ் சந்தா சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது. அனைவரும் பயன் படுத்திட வேண்டுகிறோம். மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலருக்கு உரிய காலத்திற்குள் விளம்பரங்களை தந்து உதவி ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம். தற்போது அரசு விளம்பர இல்லாமல் நம் பத்திரிக்கைகள் வெளிவருகின்றன, `மணிச்சுடர்` நாளிதழ், `பிறைமேடை’ மாதமிருமுறை, ‘கூhந கூiஅநள டிக டுநயபரந’ மாத இதழ் ஆகியவை தொடர்ந்து வெளிவந்திட தங்களின் முழுமையான ஒத்துழைப்பை நாடுகிறோம்.

அல்லாஹ்வின் நல்லருள் நம் யாவர் மீதும் உண்டாவதாக. ரமளான் முபாரக் ஒப்பம்: கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்