Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்
{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Tuesday, September 20, 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்நிலை ஆலோசனைக் குழு தீர்மானம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் உயர்நிலை அரசியல் ஆலோசனை கூட்டம் மாநிலத்தலை மையகமான சென்னை காயிதெமில்லத் மன்ஸிலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இன்று 20-09-2011 காலை 11 மணிக்கு நடைபெற்றது.

மாநில துணைத் தலைவர் தளபதி மவ்லானா ஷபீகுர் ரஹ்மான் இறை மறை ஓதி னார். மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற் றினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கோவை எல்.எம். அப்துல் ஜலீல், வாணியம்பாடி எஸ்.டி. நிஸார் அஹமது, , தென்காசி எம்.எஸ். துராப்ஷசா, திருவண்ணாமலை இ. முஹம்மது அலி, திருப்பூர் எம்.ஏ. சத்தார், தஞ்சை பி.எஸ். ஹமீது, மாநில துணைத் தலைவர் களான நெல்லை எஸ்.எம். கோதர் மொய்தீன், சேலம் எம்.பி. காதர் ஹுசைன், வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹ்மது, மதுரை டாக்டர் முஹையதீன், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், ஆம்பூர் ஹெச்.அப்துல் பாசித், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், சிறப்பு அழைப்பாளர்கள் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., வட சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், தென்சென்னை பூவை எம்.எஸ். முஸ்தபா, திருச்சி புறநகர் வி.எம். பாரூக், கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், கோவை மாநகர் எம்.எஸ். முஹம்மது ரபீக், பி. முஹம்மது பஷீர், திருப்பூர் மாநகர் மாவட்ட சைய்யத் முஸ்தபா, தூத்துக்குடி பி.மீராசா, பேராசிரியர் கே.டி.கிஸர் முஹம்மது, மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், நரி முஹம்மது நயீம், ஏம்பல் தஜம் முல் முஹம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநிலப் பொருளாளர் ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் நன்றி கூறினார். மாநில துணைத் தலைவர் இனாம்குளத்தூர் மவ்லானா சாகுல் ஹமீது ஜமாலி துஆ ஓதினார்.

இக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு-

உள்ளாட்சித் தேர்தல்
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்யவும், வெற்றி வாய்ப்பான வேட்பாளர்களை தேர்வு செய்யவும், நகர, பேரூராட்சி, பிரைமரிகளுக்கு இக்கூட்டம் அதிகாரம் வழங்குகின்றது. மாநகராட்சிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி களை தேர்வு செய்யவும் அவற்றிற்குரிய வேட்பாளர்களை தேர்வு செய்யவும் மாநகர, மாவட்டங்களுக்கு அதி காரம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ள பேரூராட்சி, பிரைமரி, நகரப் பிரைமரி, மாநகராட்சி ஆகியவற்றில் தேர்வு செய்யப்பட்ட தொகுதி கள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட அமைப்புகள் சேகரித்து மாநிலத்தலைமைக்கு அனுப்பித் தர வேண்டும்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைந்து செயல்படு வதற்கு முன்வரக் கூடிய அரசியல் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடுகள் செய்து கொள்ளும் அதிகாரம் மாவட்ட முஸ்லிம் லீகுகள், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, பிரைமரிகளுக்கு வழங்கப்படுகிறது.

சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் `பி’ படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் மாவட்டத்தலைவர்களுக்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப் பட்டது.

திருச்சி (மேற்கு) இடைத் தேர்தல்
நடைபெற உள்ள திருச்சி (மேற்கு) தொகுதி இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளரின் வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடுவது என்று முடிவு செய்யப் பட்டது.

முஸ்லிம்கள் நிறைந்த ஊர்கள் பெண்கள் தொகுதிகள்
தமிழகத்தில் 10 ஆண்டு களுக்கு ஒருமுறை சுழற்றி முறையில் பெண்கள் மற்றும் தனித் தொகுதிகள் நிர்ணயிக்கப்படும். ஆனால், இந்த வழக்கத்திற்கு மாற்றமாக 5 ஆண்டுகள் மட்டுமே நிறைந்துள்ள நிலையில், பெண்கள் தொகுதிகள் அறிவிக்கப்பட் டுள்ளன.

குறிப்பாக முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நகராட்சி களான தூத்துக்குடி மாவட்டம் காயல்பட் டினம், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திரு நெல்வேலி மாவட்டம் கடைய நல்லூர், தென்காசி, திருவண் ணாமலை மாவட்டம் வந்த வாசி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, வேலூர் மாவட்டம் ஆம்பூர், குடியாத்தம் உள்ளிட்டவை பெண்கள் தொகுதியாக அறிவிக்கப்பட் டுள்ளன.

அதேபோன்று, நீலகிரி மாவட்டம் குன்னூர், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை உள்ளிட்டவை தாழ்த்தப்பட்டோர் தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட் டுள்ளன.

10 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் ஒரு தலைபட்சமாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பு முஸ்லிம்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தேர்தல் ஆணையம் இதனை மறு பரிசீலனை செய்து இவைகளை பொதுத் தொகுதியாக அறிவிக்குமாறு இக் கூட்டம் வலியுறுத்தி கேட் டுக் கொள்கிறது.

நபி, கலீஃபாக்களின் உருவச் சித்திரம் நீக்கப்பட வேண்டும் தமிழ்நாடு அரசு 7 மற்றும் 8ம் வகுப்பு உருது பாட புத்தகத்தில் ஹஜ்ரத் யூசுப் (அலை), ஹஜ்ரத் உமர் (ரலி) ஹஜ்ரத் அலி (ரலி) இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) ஆகியோ ரது உருவச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது முஸ்லிம் களை வேதனையடையச் செய்துள்ளது.

இவை, உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடக்காமல் இருப்ப தற்கு முன்னெச்சரிக்கை உத்தரவுகள் பிறப்பிக்குமாறு தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நிதி ஆதாரம்
இந்திய யூனியன் முஸ் லிம் லீகிற்கு நிதி ஆதா ரத்தை திரட்டுவதற்காக அரசி யல் ஆலோசனை குழு உறுப் பினர் எம்.எஸ். துராப்ஷா தெரி வித்த கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டு அதனை செயல் படுத்துவதற்கு ஒரு குழு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்