Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, November 15, 2018 6 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Saturday, October 22, 2011
உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனிச் சின்னத்தில் 394 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில் வெற்றி


நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மொத்தம் 394 இடங்களில் போட்டியிட்டது. அதில் 45 இடங்களில் மட்டுமே மற்ற கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கொண்டு போட்டியிட்டது. மீதமுள்ள 349 இடங்களில் தனித்து தனிச் சின்னத்தில் களம் கண்டது. ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் பணபலம், படைபலத்தோடு தேர்தலை சந்தித்த நிலையில் சமுதாய மக்களின் ஆதரவோடும் பொது மக்கள் மத்தியிலும் தங்களுக்கு இருக்கும் நல்மதிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தலை சந்தித்தனர்.

போட்டியிட்ட 394 இடங்களில் நகராட்சி கவுன்சிலர்களாக 20 பேர்களும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக 3 பேர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களாக 10 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக 65 பேரும், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களாக 17 பேரும் ஆக மொத்தம் 119 பேர் வெற்றி பெற்றனர். சொற்ப வாக்குகளில்தான் இதர வேட்பாளர்களும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட இயக்கம் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. இந்த வெற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நூறாண்டு வரலாற்றில் ஒரு மையில் கல்லாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெற்றிப் பெற்ற அனைவரும் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப கடைநிலை ஊழியர்கள் போல் இருந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வெற்றிப் பெற்றவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வெற்றிப் பெற்ற அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கின்றன. இக்கூட்டத்தில் உள்ளாட்சி பணிகள் குறித்த பயிலரங்கம் நடைபெறுகிறது. இவ்வாறு தனது அறிக்கையில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் கூறினார்.


கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்