Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, May 20, 2013 10 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, December 15, 2011
கல்வி-வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தி பிரச்சார பொதுக்கூட்டம் நடத்திட வேண்டுகோள்! அனைத்து மாவட்ட- நகர தலைவர், செயலாளர் கவனத்திற்கு.....


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 10-12-2011 மதுரையில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாகிப் தலைமையில் நடைபெற்றபோது, """"கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த கோரியும் மாநில முழுவதும் அனைத்து ஊர்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்துமாறு இச்செயற்குழு மாவட்ட-பிரைமரி அமைப்புக்களை கேட்டுக் கொள்கிறது’’ என்ற தீர்மானம் (இயக்கத் தீர்மானம்-7) நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே அனைத்து ஊர்களிலும் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தும் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டுகிறோம்.

உள்ளாட்சி தேர்தலுக்குப்பின் சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றோம். வெற்றி வாய்ப்பை இழந்த இடங்களிலும் காரண-காரியங்களை ஆய்வு செய்து பணிகள் தொய்வின்றி நடைபெற்றிட உடன் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகரிக்கப்பட்ட துணை அமைப்புக்களான முஸ்லிம் இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்), முஸ்லிம் வணிதா லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன் (எஸ்.டி.யூ) ஆகிய அமைப்புக்கள் சார்பிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கருத்தரங்குகள், நதியரசர் ராஜேந்திர சச்சார் குழு பரிந்துரைகள், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திட துணை அமைப்புக்களின் நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்.

இட ஒதுக்கீடு கோரிக்கை கூட்டங்கள் நடைபெறும் விபரம் தலைமை நிலையத்தின் சார்பில் மணிச்சுடர் நாளிதழில் தொடர்ந்து வெளியிடப்படும்.

தங்களின் மேலான ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.

‘கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தியும் ‘தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு அளவை உயர்த்திட மாநில அரசை வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள் விபரம் -

முதல் பட்டியல்.. தேதி ஊர் பங்கேற்போர் 16-12-2011 குடியாத்தம் தலைவர் பேராசிரியர்

வெள்ளிக்கிழமை வேலூர் (மேற்கு) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், (பொதுச் செயலாளர்)

மாலை 6.00 மணி மாவட்டம் எச். அப்துல் பாசித், எக்ஸ்.எம்.எல்.ஏ., (மாநிலச்செயலாளர்)

திருப்பூர் எம்.ஏ.சத்தார் (மாநிலச் செயலாளர்)

28-12-2011 குளச்சல் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், (பொதுச் செயலாளர்)

புதன்கிழமை கன்னியாகுமரி எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.

மாலை 6.00 மணி மாவட்டம் காயல் மகபூப் (மாநிலச் செயலாளர்)

30-12-2011 காயல்பட்டினம் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், (பொதுச் செயலாளர்)

வெள்ளிக்கிழமை தூத்துக்குடி நெல்லை அப்துல் மஜீத் (மாநிலச் செயலாளர்)

மாலை 6.00 மணி மாவட்டம் காயல் மகபூப் (மாநிலச் செயலாளர்)

காயிதெ மில்லத் மன்ஸில் (ஒப்பம்) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சென்னை - 600 001. 15-12-2011

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்