Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, May 23, 2013 13 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Tuesday, March 20, 2012
மார்ச் 23-ல் இ.யூ.முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சார்பில் 65-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா தேர்தல் ஆணைய அங்கீகார வெற்றி விழா மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அறிக்கை


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-ஆவது நிறுவன நாள் விழா நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது. மஹல்லா ஜமாஅத் ஒருங்கி ணைப்பு சார்பில் வரும் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை சென் னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-ஆவது நிறுவன தின விழா, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அங்கீகரித்து `ஏணி’ சின்னத்தை வழங்கிய தற்கான வெற்றி விழா சென்னை எழும்பூர் ஹோட்டல் இம்பீரியலில் உள்ள சிராஜ் அரங்கத்தில் வரும் 23-ம் தேதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் நடைபெறுகிறது.

கருத்தரங்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கமுதி பஷீர் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் மாநிலச் செயலாளர் எம்.ஏ. சத்தார் வரவேற்புரை யாற்றுகிறார். மவ்லவி ரஹ் மத்துல்லா ஜமாலி இறைமறை ஓதுகிறார். மாநில துணைத் தலைவர் மவ்லவி தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதுகி றார்.

இந் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகரிக் கப்பட்ட 4 அணிகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை பற்றிய கருத்துரையும் வழங் கப்படுகிறது.

மஹல்லா ஜமாஅத் கருத்து ரையில் மவ்லவி ஓ.எஸ். இலியாஸ் காஸிமி, புரசை எம். முஹம்மது சிக்கந்தர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். `இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச் சிக்கு அணிகளின் பணி எவ்வாறு சிறந்து விளங்க வேண்டும்’ என்பது பற்றி நடைபெறும் கருத்தரங்கில் இளைஞர் அணி பற்றி மாநிலச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், மாநில இளைஞர் அணி செயலாளர் கே. முஹம்மது யூனூஸ் ஆகியோரும்,

மாணவர் பேரவை பற்றி மாநிலச்செயலாளர் காயல் மகபூப், மாணவர் பேரவை மாநிலச் செயலாளர் ஏ. செய்யது பட்டாணி ஆகியோரும், சுதந்திரத் தொழிலாளர் அணி பற்றி மாநிலச் செயலாளர் வெ. ஜீவகிரிதரன், எஸ்.டி.யு. மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமு தீன் ஆகியோரும், மகளிர் அணி பற்றி பேராசிரியை நஸீமா பானு, மகளிர் அணி மாநில அமைப்பாளர் பேராசிரியர் தஸ்ரீப் ஜஹான் ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.

நூல் வெளியீடுள

இந் நிகழ்ச்சியில் முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் ஒருவரான எழுத்தரசு ஏ.எம். ஹனீப் எழுதிய, முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாற்றின் 2-ம் பாகம் வெளியிடப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இதனை வெளியிட, ஐக்கிய அரபு அமீரக காயிதெ மில்லத்பேரவை தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி பெற்றுக் கொள்கிறார்.

தொடர்ந்து சமுதாயப் புரவலர்கள் ஆலியா ஷேக் தாவூத் மரைக்காயர், எஸ்.டி. கூரியர் நவாஸ் கனி, விருது நகர் ஹோட்டல் இப்ராஹீம்ஷா, வாவு சம்சுதீன், ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில துணைத் தலைவர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலா ளர்கள் எச். அப்துல் பாஸித், ஆடுதுறை ஷாஜஹான் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.

அனைத்து மாவட்ட நிர்வாகிகள்

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டறை மேலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ நன்றி கூறுகிறார். வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் தலைவர், செயலாளர், பொரு ளாளர்கள் முன்னிலை வகிக் கும் இந் நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

வரலாற்றுப்பேரியக்கத்தின் வரலாறு படைக்கும் இந் நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் யூத் லீக் எம்.எஸ். எஃப், எஸ்.டி. யூ, மகளிர் அணி உள்ளிட்டவை களின் நிர்வாகிகளும், முன் னணியினரும், ஊழியர்களும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

இவ்வாறு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்