Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Saturday, May 18, 2013 8 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Sunday, April 15, 2012
14-04-2012 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்


புனித ஹஜ் பயணத் திற்கு வழங்கப்படும் விமான கட்டண சலுகை யை ஒருபோதும் நிறுத்தக் கூடாது எனவும், திருமண கட்டாயப் பதிவு சட்டத்தில் `மதம்’ இடம் பெற வழி வகை செய்ய வேண்டும். பள்ளிவாசல் திருமண பதிவேட்டை ஏற்க வேண் டும் என மத்திய அரசை வலியு றுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற் குழு தீர்மானங்கள் நிறை வேற்றியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 2012 ஏப்ரல் 14-ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 2.30 மணி வரை விழுப்புரம் திருச்சி பிரதான வீதியில் உள்ள சோலை மஹாலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடை பெற்றபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

ஹஜ் விமான கட்டண சலுகை நீடிக்க வேண்டும்
புனித ஹஜ் பயணம் செல்வோருக்கு இந்திய அரசு மானியம் வழங்கி வருவதாக வும், அதை நிறுத்த வேண்டும் என சில முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருப்ப தாகவும், அதனை அரசு பரிசீலிக்கும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் தெரிவித்து இருப்பதாக வந்துள்ள செய்தி முஸ்லிம் சமுதாயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனித ஹஜ்ஜுக்கு மத்திய அரசு வழங்குவது மானியம் அல்ல. புனித ஹஜ் பயணம் செல்வதற்கு கடந்த காலத்தில் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது அது நிறுத்தப் பட்டு விமான பயணம் மட்டுமே இயக்கப்பட்டது. விமானப் பயணத்திற்கு கட்டணம் அதிகம். எனவே, கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தபோது, ஹஜ் பயணத்திற்கு விமான கட்டண சலுகை தரப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதுதான் இன்று வரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

விமான நிறுவனங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டண சலுகைகளை அறிவிப் பது வழக்கம். சுமார் 2 லட்சம் பேர் பயணிக்கும் போது அதற்கு கட்டணச் சலுகை அறிவிப்பது குறை காண முடியாத ஒன்று.

எனவே, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு மத்திய அரசு வழங் கும் கட்டணச் சலுகையை நிறுத்தக் கோருவதோ, அதை நிறுத்துவதோ ஏற்றுக் கொள் ளக்கூடியது அல்ல.

எனவே ஹஜ் புனிதப் பயணத்திற்கான விமான பயணச் சலுகை தொடர்ந்து நீடிக்க வேண்டுமென மத்திய அரசை இச் செயற் கூட்டம் கேட்டுக் கொள்வதோடு, மானியம் என்ற பெயரால் இதை நிறுத்தச் செல்வோரை இக் கூட் டம் வன்மையாக கண்டிக்கிறது.

திருமண கட்டாய பதிவு
திருமண பதிவை கட் டாயமாக்கும் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிறப்பு - இறப்பு பதிவுச் செய்யும் அலுவலகங்களில் திருமணங்களையும் பதிவு செய்ய இந்த சட்ட மசோதா வகை செய்துள்ளது. பள்ளிவாசல் திருமண பதிவேடுகளில் பதிவு செய்யப் படும் திருமண பதிவை அப்ப டியே ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். இச்சட்டத்தில் மதம் குறிப்பிடப்படாது என்ற நிலையை மாற்றி மதம் குறிப்பிடப்பட விரும்பினால் அதை ஏற்று `மதம்’ குறிப்பிடுவ தற்கு இச் சட்டத்தில் வழி வகை செய்ய வேண்டும் என மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மின்சார கட்டண உயர்வு
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மின் கட்டணம் உயத்தப்பட்டுள்ளது பொது மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்த கட்டண குறைப்பும் நடுத்தர மக்களுக்கு எந்த ஒரு பலனையும் ஏற்படுத்த வில்லை. மின்சாரத்தை நம்பி சிறுதொழில் செய்து வந்த ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப் புக்கு ஆளாகி உள்ளனர். சிறு குறு தொழில்கள் அடியோடு முடங்கிபோகும் நிலை ஏற்பட் டுள்ளது.

எனவே மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பள்ளிவாசல், தர்கா, மதரஸா கபரஸ்தான்களுக்கு பட்டா
இதுவரை பட்டா வழங்கப் படாத பள்ளிவாசல்கள், தர்கா, கபரஸ்தான்கள், மதரஸாக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டு மென ஆடு துறையில் நடை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை ஏற்று தமிழக அரசின், சென்னை முதன்மைச் செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஜி2/667/2012 நாள் - 18.01.2012 சுற்ற றிக்கை அனுப்பி உள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களும் பயன்படுத்தப்படும் வகையில் அந்த சுற்றறிக்கையை அரசு ஆணையாக வெளியிடுமாறு தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கி றது.

விழுப்புரம் - புதுச்சேரி செல்ல புறவழிச்சாலை
விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின் றனர். அவசர சிகிச்சைக்காக செல்வோர் கூட போக்குவரத்து நெருக்கடியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. விபத்துக்களும் இச்சாலையில் அதிகரித்து விட்டன எனவே விழுப்புரம் - புதுச்சேரி செல்ல புறவழிச் சாலையை விரைந்து அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறையையும் தமிழக அரசையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திருவண்ணாமலைக்கு ரயில்
விழுப்புரம் - திருவண்ணா மலை அகல ரயில் பாதை பணி கள் முடிவடைந்து விட்டன. ஆனால், இந்தப் பாதையில் விரைவு போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் இந்துக்களின் புனிதத் தல மாகும். லட்சக்கணக்கானோர் இங்கு பயணிக்கின்றனர். எனவே, நாள்தோறும் மூன்று முறை இயக்கப்படும் பாண்டிச் சேரி - விழுப்புரம் பாசஞ்சர் ரயிலை திருவண்ணாமலை வரை நீடிக்கச் செய்யுமாறு தென்னக ரயில்வேயை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திண்டிவனம் - புதுவை - கடலூர் ரயில் பாதை
திண்டிவனம் - புதுவை - கடலூர் அகல ரயில் பாதை அமைக்க சர்வே பணிகள் எடுக் கப்பட்டு முடிவுற்றும் அது கிடப் பில் போடப்பட்டுள்ளது.

இப் பகுதியின் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சென்னை, மகாபலிபுரம் - புதுச்சேரி வழி யாக கடலூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே துறையையும் மத்திய அரசையும் இச் செயற்குழு கேட் டுக் கொள்கிறது.

கேரள பி.ஜே.பி க்கு கண்டனம்
கேரள அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மேலும் ஒரு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு மஞ்ஞளம் குழிஅலி பொறுப்பேற்றுள்ளார். ஆனால் இதை எதிர்த்து போராட்டம் என்கின்ற பெயரால் பொது சொத்துக்களும், தமிழக அரசின் பேருந்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயக ரீதியில் மக்களின் தீர்ப்பை ஏற்காமல் சட்ட பேரவையில் இடம்பெற முடிய வில்லை என்கின்ற ஆத்திரத்தில் வன்முறையை தூண்டிவிட்டு மக்களை பிளவு படுத்தும் கேரள மாநில பாரதீய ஜனதா கட்சிக்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
இந்திய தேர்தல் ஆணையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அங்கீகரித்து `ஏணி’ சின்னம் வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச் சியை தருகிறது. இதற்கு பெரிதும் முயற்சி மேற்கொண்ட தேசிய தலைவர் மத்திய வெளி யுறவு மற்றும் மனிதவள மேம் பாட்டுத்துறை இணை அமைச் சர் இ. அஹமது சாஹிப், தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான தமிழக நிர்வாகிகள் பாணக் காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையி லான கேரள மாநில நிர்வாகிகள் மற்றும் தேசிய நிர்வாகிகள் அனை வருக்கும் இக்கூட்டம் மன மார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட அரசியல் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்