Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 19, 2013 10 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, June 08, 2012
டிசம்பர் மாதம் வேலூரில் மாநில இளைஞர் அணி மாநாடு இ.யூ. முஸ்லிம் லீக் அரசியல் உயர்நிலை ஆலோசனைக் குழு கூட்டத்தில் முடிவு


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் செப்டம்பரில் கல்வி விழிப்புணர்வு மாநா டும், டிசம்பர் இறுதியில் வேலூரில் மாநில இளைஞர் அணி மாநாடும் நடத்துவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் உயர்நிலை ஆலோசனை குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில உயர் நிலை அரசியல் ஆலோசனை குழு கூட்டம் 5-ம் தேதி செவ்வாயன்று காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெற்றது. தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.,

மாநில துணைத் தலைவர்கள் சேலம் எம்.பி. காதர் உசேன், லால்பேட்டை தளபதி ஏ. ஷபீகுர் ரஹ் மான், அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன், செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், ஆம்பூர் எச. அப்துல் பாஸித், திருப்பூர் எம்.ஏ. சத்தார், வி. ஜீவகிரிதரன், ஏ.எம். ஷாஜ ஹான்,

கோவை எல்.எம். அப்துல் ஜலீல், நெல்லை எம்.எஸ். துராப்சா, திரு வண்ணாமலை முஹம்ம தலி, திருப்பூர் பி.எஸ். ஹம்ஸா, எஸ்.டி.யு. கே.எம். நிஜாமுதீன், முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், இளைஞர் அணி மாநில செயலாளர் முஹம்மது யூனூஸ்,

வடசென்னை எம்.ஜெய்னுல் ஆபிதீன், ஏ.எச்.இஸ்மாயில், விழுப்புரம் எஸ்.எம். அமீர் அப்பாஸ், காஞ்சிபுரம் எம்.எஸ். அப்துல் வஹாப், தென்சென்னை ஹைதர் அலிகான், திருச்சி புறநகர் பாரூக் கே.எம். கே. ஹபீபுர் ரஹ்மான், தூத் துக்குடி மஹ்மூதல் ஹசன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகள் வருமாறு-

கல்வி விழிப்புணர்வு மாநாடு
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை நடத்துவது என்றும், மாநில கல்வித் துறை செயலாளர் ஏ.எம். ஷாஜஹானை இதற்கான பொறுப்பாளராக நியமிப்பது என்றும், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தைக் கூட்டி இம் மாநாட்டிற்கான தேதியையும், இடத்தையும் முடிவு செய்து அறிவிக்க வேண் டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாநில இளைஞர் அணி மாநாடு

வரும் டிசம்பர் மாத இறுதியில் வேலூரில் மாநில இளைஞர் அணி மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்துவது என்றும், வேலூர் கிழக்கு - மேற்கு மாவட்டங்கள் மற்றும் இளைஞர் அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எம்.எஸ்.எஸ். கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

முஸ்லிம் மாணவர் பேரவையின் ஆண்டு செயல் திட்டத்தில் ஒன்றாகிய, `நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கல்லூரி மாணவ - மாணவி யருக்கான கட்டுரைப் போட்டி’ யின் பரிசளிப்பு விழா ஜூலை மாதம் 14-ம் தேதி சென்னையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜூலை 14, 15 தேதி களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட் டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி யின் தேசியப் பிரதிநிதிகள் மாநாட்டை ஒத்தி வைக்குமாறு தேசியத் தலைமையை இக் கூட்டம் கேட்டுக் கொண்டது.

வங்கி கணக்கு

அனைத்து மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு களும் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு தொடங்கி அதன் விவரத்தை தலைமைக்கு அறிவிக்க இக் கூட்டம் கேட்டுக்கொண்டது.

ஒவ்வொரு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் வருடத்திற்கு ஒரு முறை மாவட்டப் பொதுக்குழு கூட் டத்தை கூட்டி அதில் தணிக்கை செய்யப்பட்ட கணக்கையும் ஓராண்டு செயல்பாடு குறித்த ஆண்டறிக்கையையும் சமர்ப் பிப்பதோடு அவற்றின் நகலை மாநிலத் தலைமைக்கு அனுப்ப வேண்டும் எனவும் இக்கூட்டம் அனைத்து மாவட்ட அமைப்பு களையும் கேட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

சொத்து விவரங்கள்

தமிழகம் முழுவதும் மாவட்ட, நகரங்கள் மற்றும் ஊர்களில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய விவரங் களையும், அதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், பட்டா மற்றும் வரிவிதிப்பு நகல்க ளையும் ஜூலை 31-ம் தேதிக்குள் மாநில தலை மைக்கு அனுப்பித் தருமாறு மாவட்ட மற்றும் பிரைமரி அமைப்புகளை இக் கூட்டம் கேட்டுக்கொண்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகளை காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பும் முயற்சியை தொடங்க முடிவு செய் யப்பட்டு அதற்கான அமைப் பாளராக விழுப்புரம் ஹாஜி எஸ்.எம். அமீர் அப்பாஸ் அவர்களை இக் கூட்டம் தேர்வு செய்தது.

இயக்க நிதிக் குழு

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான் தலைமையில் நிதிக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில் ஹாஜி எம்.எஸ். துராப்சா, தளபதி ஷபீகுர் ரஹ்மான், கமுதி பஷீர், ஏ.எம். ஷாஜஹான், எஸ்.எம். அமீர் அப்பாஸ், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகி யோரை குழுவினர்களாக நியமிப் பது எனவும் இக் கூட்டம் முடிவு செய்தது.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்