Wednesday, February 08, 2012 திருவள்ளூரில் முஸ்லிம் லீக் சார்பில் மீலாதுந் நபி விழா: நலஉதவி, பொதுக்கூட்டம், பேரணி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் - வடக்குகோட்டையார் பங்கேற்பு
திருவள்ளூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீலாது நபி விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவள்ளூர் மஸ்ஜிதெ பத்ஹாவில் மௌலீது ஷரீப் ஓதப்பட்டு வடக்கு கோட்டை அப்துல்லாஹ் அறக்கட்டளை சார்பில் பத்ஹாபேட்டை ஹிஜ்ரத் நகர், தக்னிகோட்டை ஆகிய பகுதிகளில் மீலாது நபி, பாத்திஹா ஓதப்பட்டு நெய்சோறு வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் உள்பிரிவு நோயாளிகள் 100 நபருக்கு பால், ரொட்டி, ஆரஞ்சு பழம், பிஸ்கட், கேக் ஆகியவை கள் வழங்கி நோயாளிகள் விரைவில் குணம் பெற துஆ செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் காயல் அஹமது சாலிஹ், hவட்டச் செயலாளர் மீஞ்சூர் சிக்கந்தர் பாஷா, தொண்டர் அணி அமைப் பாளர் எஸ். அப்துல் சுபான், கொள்கைபரப்பு செயலாளர் பாடி முஹம்மது அலி, மீஞ்சூர் ஷேக் அஹமது, திருவள்ளூர் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஜலீலகான், ஜலால் பாஷா, பிலால் அசேன், சேட்டு, கரிமுல்லா, மௌலானா நௌஷாத் ஹஜரத், யாஸின் மௌலானா, லெப்பை தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை அசர் தொழுகைக்குப் பின் நேதாஜி படே மக்கான் மஸ்ஜிதெ அஹமதுஷா, பள்ளியில் சிந்து மாவட்ட முஸ்லிம் லீக் மார்க்க அணி அமைப்பாளர் எம். நௌஷாத் துஆ ஓதினார்.
தக்பீர், தப்ஸ் முழக்கத் துடன் நகர வீதிகள் வழியாக மீலாது விழா மேடையை பேரணி அடைந்தது. மக்ரிபு தொழுகைக் குப் பிறகு மீலாது நபி விழா தொடங்கியது. மீலாது கமிட்டி தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முஹம்மது அலி தலைமை தாங்கினார். எல்.எம். அப்துல் வஹாப் எஸ். ஆதம்ஷா, பஷீர் அஹமது, ரஹமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்த னர். காயல் அஹமது சாலிஹ் வரவேற்புரையாற்றினார். வித் வான் அப்துல் ரவூப், இஸ்லாமிய கீதம் பாடினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில துணைத் தலைவர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் எம்.எம்.எஸ். ஹாஜ்மிஸ்பா ஹஜரத், பழவேற்காடு ஊராட்சி மன்ற உறுப்பினர் வஹாப், பத்தாஹ், பூந்தமல்லி ஆதம்ஷா, ரஹீம் பாபா, ஊததுக்கோட்டை டாக்டர் அன்வர், ஏ.ஆர். மக்பூப், எஸ். கரீமுல்லா, யு.ஏ. பாபா, பிலால் அசேன், அப்துல் சுபான், ஜலீல், ஜலால், ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்துல் சுபான் நன்றி கூறினார். |