Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, July 16, 2011
மணிச்சுடர் வளர்ச்சிக்கு பாடுபடுவது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கண்டறிவது கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானம்


12-07-2011 அன்று காலை 11 மணி அளவில் கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் குழுக் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி சுல்தான் சையது இபுராகிம் தலைமையில், பள்ளபட்டி நகர பிரைமரி முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.எம். அப்துல் ஜப்பார் இல்லத் தில் நடைபெற்றது.

பள்ளபட்டி நகர ஷாநகர் பள்ளி தலைமை இமாம் மவ்லவி அப்துல் ரஹ்மான் சிராஜி கிரா அத்துடன் கூட்டம் துவங்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு

தீர்மானம்-1 நம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்ட நமது மாநிலத்தின் சமுதாய மற்றும் தாய்ச்சபையின் புரவலர்கள் மெஜஸ்டிக் அப்துல் கரீம் காக்கா மற்றும் நூர்தீன் காக்கா, கரூர் மாவட்ட பொதுக் குழு உறுப்பினரும், சிறு வயது முதல் கொள்கை பிடிப்புடன் வாழ்ந்த மவ்லவி ஆர்.கே.அப்துல் காதிர் பாகவி, மோதி சையது முகம்மது, சொவ ருல்லா அப்துல் சமது, ஹாஜி வி.எஸ்.கமால்தீன், கரூர் ஹாஜி முகம்மது ஷபி, எம்.ஏ.முகம்மது சலீம், மன்னான் ஹாஜி உமர் பாரூக் துணைவியார், எஸ்.எம்.ஷேக் அலி, மரக்கடை ஹாஜி அப்துல் ரஷீது, கரூர் மாவட்ட தலைவர் பொறுப்பை ஏற்று சிறப்புடன் பணி யாற்றிய மவ்லவி ஹாஜி டி.எம்.ஏ.முபாரக் பாஷா உலவி ஆகிய தாய்ச் சபையின் கண்மணிகளின் மஃபிரத்திற்கு துஆ செய் யப்பட்டது.

தீர்மானம்-2 கரூர் மாவட்ட புதிய தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் கள்.

தீர்மானம்-3 கரூர் மாவட்ட துணைத் தலைவர் பதவிக்கு இரண்டு நபர்களையும், துணைச் செயலாளர் பதவிக்கு இரண்டு நபர்களையும் கூடுதலாக தலைவர் பேராசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க நியமிப் பது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம்-4 கட்சி விரோத நடவடிக் கையில் ஈடுபட்ட மாவட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் நெட்டவான என்.எஸ். லியாகத் அலி அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந் தும், பொதுக்குழு செயற் குழு மற்றும் முஸ்லிம் லீகில் அவர் வகித்து வந்த அனைத்து பதவியிலிருந் தும் நீக்குவதற்கு தலை மைக்கு பரிந்துரை செய்து நடவடிக்கைமேற்கொள்ள இக்கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம்-5 தமிழ் மாநில தேசிய லிகிலிருந்து விலகி தாய்ச் சபையில் இணைந்த ஹாஜி கே.எம்.சக்கரை முகம்மது, எஸ்.எஸ்.முகம்மது இஷாக் ஆகிய இருவரையும் மாவட்ட துணைத் தலை வர்களாகவும், எஸ்.எம்.மன் சூர் அலி, கே.எஸ்.முகம் மது ஷகில் ஆகிய இருவ ரையும் மாவட்ட துணைச் செயலாளர்களாகவும் நியமிப்பது என்று ஏக மனதாக தீர்மானிக்கப்பட் டது.

தீர்மானம்-6 கரூர் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி முகம்மது ஷபி அவர்கள் பொறுப் பிற்கு குருணிகுளத்துப் பட்டி எம்.அப்துல் மஜீது அவர்களை மாவட்ட துணைத் தலைவராக ஏகமனதாக தேர்வு செய் யப்பட்டது.

தீர்மானம்-7 வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பள்ளபட்டி பேரூராட்சியில் தலைவர் பொறுப்பிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவரை வேட்பாள ராக நிறுத்தும் வகையில் ஆவன செய்ய வேண்டுமாய் மாநில தலைமையை வேண்டி விரும்பி வலியுறுத் திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-8 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாய்ச்சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இடம் பெறும் அளவிற்கு வெற்றி வாய்ப்புள்ள இடங் களைக் கண்டறிவது என்று தீர்மானிக்கப்பட் டது.

தீர்மானம்-9 30-07-2011 அன்று சென்னையில் நடைபெற உள்ள மாநில மாணவர் அணி ஆலோசனைக் கூட் டத்திற்கு மாவட்டத்தி லிருந்து அனைத்து பிரை மரிகளிலிருந்து அமைப் பாளர்கள் கலந்துகொள்ள கேட்டுக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்-10 மாவட்டம் முழுவதும் மணிச்சுடர் நாளேட்டின் வளர்ச்சிக்கு முயற்சிப்ப தென்றும் முடிவு செய்யப் பட்டது.

கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த தாய்ச் சபையின் கண்மணிகளை பள்ளபட்டி நகர தலைவர் கம்பத்து கே.ஏ.கமால் பாட்சா வரவேற்புரை யாற்ற, புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட செயல்திறன் மிக்க முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர் களின் பணி சிறக்க, மாவட்ட செயலாளர் ஹாஜி எம்.ஏ.மஹபூப் அலி, மாவட்ட பொருளாளர் ஹாஜி ராசி ஷேக் அப்துல் காதர், மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி சுல்தான் சையது இபுராஹிம் ரஷாதி, மாவட்ட துணைச் செயலாளர் மன்னான் எஸ்.டி.எம்.புர்கானுல்லாஹ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே. முகம்மதுயூனுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மோதி எம்.எம்.முபாரக் அலி, பள்ளபட்டி நகர செயலாளர் வாப்பு வி.ஏ.அபுதாஹீர், மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி கே.எம்.சக்கரை முகம்மது, மாவட்ட துணைச் செய லாளர் கே.எஸ்.முகம்மது சகில், திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் அல்தாப் உசேன் மற்றும் கரூர் மாவட்ட அனைத்து பிரைமரி நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினார்கள்.

மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஏ .கலீலுர் ரஹ்மான் ஏற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட துணைச் செயலாளர் அரவைக் கோட்டை ஏ.ஏ.முகம்மது சலீம் நன்றியுரையாற்ற மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி அப்துல் காதிர் ஷக்காயி துஆவுடன் கூட்டம் இனிதே நிறை வுற்றது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்