Saturday, May 05, 2012 முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தித்தர வலியுறுத்தி கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாபெரும் பொதுக்கூட்டம் தலைவர் பேராசிரியர், மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வலியுறுத்தி கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
மே 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு கடையநல்லூர் காயிதெ மில்லத் திடலில் நடைபெறும் இக்கூட் டத்திற்கு மாவட்ட செயலாளரும் நகர தலைவருமான த.அ. செய்யது முஹம்மது தலைமை ஏற்கிறார்.
நகர இந்திய யூனியன் முஸ் லிம் லீக் செயலாளரும் நகராட்சி நியமன குழு உறுப்பினருமான கே.எம். அப்துல் லத்தீப் எம்.சி., வரவேற்று பேசுகிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில துணைத் தலைவர் எஸ். எம். கோதர் மொகிதீன் மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீது, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், மாநில எம்.எஸ். எப். செயலாளர் வி.ஏ. செய்யது பட்டாணி ஆகியோர் சிறப்புரை யாற்றுகின்றனர்.
மாவட்ட தலைவர் எம்.எஸ். துராப் ஷா, செயலாளர் எல்.கே. எஸ். மீரான் மைதீன், பொருளா ளர் பி.என்.எம். காதர் மைதீன், துணைத் தலைவர்கள் வி.ஏ. செய்யது பட்டாணி, கானகத்து மீரான், வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், ஏ.இ. அப்துல் காதர், எம். அப்துஸ் ஸலாம், இளைஞரணி மாநில இணைச் செயலாளர் தென்காசி முஹம்மது அலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில்,
மாவட்ட அமைப்புச் செயலா ளர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, வர்த்தக அணி செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலி, தொண்டரணி செயலாளர் வி.ஏ.எஸ். இப்ரா ஹீம், பட்டதாரி அணி செயலா ளர் பாட்டப்பத்து மசூது, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே. முஹம்மது அலி ஜின்னா, துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, புளியங்குடி ஜப்பான் உதுமான், தென்காசி எம்.எஸ். காஜா மைதீன், மேலப் பாளையம் நாகூர் கனி, தாளை யூத்து இப்ராஹீம் மூசா, முதலி யார் பட்டி பசூல் ரஹ்மான், உள் ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகி கள் கலந்து கொள்கின்றனர்.
நகர பொருளாளர் எஸ்.ஏ. கோதரி நன்றி கூறுகிறார். நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி, எம்.எஸ்.எஃப், காயிதெ மில்லத் பேரவை, எஸ்.டி.யூ. மகளிரணி நிர்வாகி கள் சிறப்பான ஏற்பாடுகறை செய்து வருகின்றனர். |