Monday, May 14, 2012 நாகை வடக்கு மாவட்டத்தில் பிற இயக்கங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. முன்னிலையில் கோலாகல விழா
நாகப்பட்டினம் வடக்கு மாவட்டத்தில் மற்ற இயக்கங் களிலிருந்து எண்ணற்ற இளைஞர்கள் விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தொடர்ந்து இணைந்து வருகின் றனர்.
நாகை மாவட்டம் கொள்ளி டம் ஒன்றியம் வடகால் கிளை த.மு.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை மாலை புத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் திருமண மஹாலில் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., முன்னிலையில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீகில் இணைந் தனர்.
வடகால் த.மு.மு.க. கிளை செயலாளர் முஹம்மது ஆசிக் தமையில் 35 பேர் த.மு.மு. க.வில் இருந்து விலகி தாய்ச் சபையில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் தங்களின் பல்வேறு சந்தே கங்களை கேள்விகளாக கலந் துரையாடல் நிகழ்ச்சி மூலமாக கேட்டார்கள். அனைத்து கேள்வி களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பதில் அளித்தார்.
நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், நாகை வடக்கு மாவட்டத் தலைவர் மு. அபுல்ஹசன், மாவட்டச் செயலா ளர் அமீர் என்.ஏ.எம். நூருல் லாஹ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ. அபுபாரிஸ், மாவட்ட துணைத் தலைவர் சிட்டிசன் அப்துல் மஜீது, மாநிலப் பேச்சாளர் ஏ.ஆர். ரஷீத்ஜான்,
மாவட்ட துணைச் செயலாளர் கொள்ளிடம் முஹம்மது அலி, சவுதி அரேபிய காயிதெமில்லத் பேரவை உறுப்பினர் ஆயப்பாடி ஏ. ஹாஜா நஜிமுத்தீன், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் வடகால் முஹம்மது ஜமீல், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி பொருளாளர் முஹம் மது உசேன்,
எம்.எஸ்.எஃப். மாநில துணைச் செயலாளர் டி.கே. ஷாநவாஸ் மணிக்ராம், முஜிபுர் ரஹ்மான், அய்யூப்கான், ரிஸ் வான், நவ்சாத்அலி, புத்தூர் கலீலுர் ரஹ்மான், முஹம்மது சர்க்கீன், முஹம்மது ஜுனைது, முஃமீன், ரியாஸ், கிளியனூர் சயீது மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் புத்தூர் நகரைச் சேர்ந்த முத்தவல்லி, நாட் டாண்மை பஞ்சாயத்தார் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித் தார்கள். |