Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, May 24, 2013 14 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, May 15, 2012
உடன்குடியில் பிரைமரி அமைப்பதற்கான ஜமாஅத் கூட்ட ஆலோசனை இந்திய முஸ்லிம்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கும் தகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மட்டுமே உண்டு மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் பேச்சு


இந்திய முஸ்லிம்களை அரசியல்ரீதியாக ஒருங்கி ணைக்கும் தகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மட்டுமே உண்டு என மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் குறிப்பிட் டார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ப்ரைமரியை அமைப்பது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், 11.05.2012 வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், உடன்குடி - காலங் குடியிருப்பு குத்பா பள்ளி வாசலில் நடைபெற்றது. உடன்குடி - காலங்குடி யிருப்பு ஜும்ஆ பள்ளி கத்தீப் மவ்லவீ ஜஃபர் ஸாதிக் ஆலிம், பள்ளி செயலாளர் பி.காஸிம், பொருளாளர் நஜ்முத்தீன் மற்றும் ஜமாஅத் பிரமுகர்கள் முன் னிலை வகித்தனர்.

தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட் டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித், சுதந்திர தொழிலாளர் யூனியன் அமைப்பாளர் ஹாஜி ஆர். பி.ஷம்சுத்தீன் ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் உரை யாற்றினார்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை ஒருங்கிணைக் கும் அரசியல் தலைமை இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் அவசியமென்றும், இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் மாபெரும் அமைப்பை உருவாக்கி, தேசிய அளவில் அதற்கான வழியைக் காண் பித்தள்ளதாகவும், அவர்கள் காட்டிய பாதையில் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்றளவும் பயணித்து வருகி றது.

ஒலிபெருக்கியில் தொழு கைக்கான அழைப்பொலி - பாங்கு சொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென்று அன்று சட்டமன்றத்தில் பேசப் பட்டபோது, பல முஸ்லிம் உறுப்பினர்கள் அந்த சட்ட மன்றத்திலிருந்தும், இரவண சமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மத் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்தான் வலிமையாகக் குரலெழுப்பி, அந்த மசோதா திரும்பப் பெறப்பட காரணமாக இருந் தார்.

ஷாபானு வழக்கில், இஸ்லா மிய ஷரீஅத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங் கியபோது, அன்று பாராளுமன் றத்தில் பல முஸ்லிம் உறுப் பினர்கள் இருந்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் குலாம் மஹ்மூத் பனாத்வாலா ஸாஹிப் அவர்கள்தான் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்து, வலிமையாகக் கண் டனக் குரல் எழுப்பி, இந்திய அரசாங்கத்தையே பணியச் செய்தார்.

பிற மதத்தினரின் சுடுகாடு கள் - இடுகாடுகள் ஊருக்கு வெளியில் இருக்கும்போது, முஸ்லிம்களின் அடக்கஸ்தலங் களும் ஊருக்கு வெளியில்தான் இருக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது, அதற்கெதி ராக பாராளுமன்றத்தில் வலி மையுடன் குரலெழுப்பியவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் ஸாஹிப் அவர்கள்தான்.

திருமண கட்டாயப் பதிவு சட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டபோது, 1400 ஆண்டுகளாக மஹல்லா ஜமாஅத்துகளால் முறைப்படி பாதுகாப்புடன் பராமரிக்கப் பட்டு வரும் தஃப்தர் பதிவு முறையையே அரசு பதிவிற்கு ஆதாரமாக்கிக் கொள்ள வேண்டுமென்று, பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமை யிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - சமுதாயத்தின் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து குரலெழுப்பி னார்.

உடன்குடி நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ப்ரைமரி முற்காலத்தில் இருந்ததாகவும், அன்று கட்சிப் பொறுப்பிலிருந்த பெரியவர்கள் அடுத்த தலை முறைக்கு வழிகாட்டாமலேயே உலகை விட்டும் பிரிந்துவிட்ட தால், கவனிப்பாரற்ற நிலயை?ல் கட்சிப் பணிகள் நீர்த்துப் போய்விட்டதாகவும் தெரிவித்த அவர், இனி வருங்காலங்களில் அக்குறைகள் முழுமையாகப் போக்கப்பட்டு முழு உத்வேகத் துடன் கட்சியின் கிளை இங்கு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமுதாய மக்களுக்கு பக்குவமாக வழிகாட்டி, மத்திய - மாநில அரசுகளிடமிருந்து தேவையானதைப் பெற்றுத் தரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கிளையை உடன்குடியில் அமைப்பது குறித்து உடன் குடியின் அனைத்துப்பகுதி ஜமாஅத்தினரும் கலந்தா லோசித்து முடிவைத் தெரி விக்குமாறு அவர் ஜமாஅத் தினரைக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் கருத்து தெரிவித்த ஜமாஅத் பிரமுகர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உடன்குடியில் பிரைமரி இருந்த தையும், அதில் தாங்கள் இணைந்து பணியாற்றியதை யும், ஷாபானு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனக் குரல் எழுப்பியபோது, உடன்குடியிலிருந்தும் பெருந் திரளாகக் கலந்துகொண் டதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உடன்குடியில் சொந்த இடம் வாங்கப்பட்டதாகவும், கட்சிப்பணிகள் அங்கு நீர்த்துப் போனதையடுத்து அந்த இடம் கவனிப்பாரற்றுப் போய், அந் நியர் அதில் சிலைகளை வைத்து ஆக்கிரமிக்க முனைந்ததாக வும்,, பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜமாஅத்தினர், விரைந்து நடவடிக்கை எடுத்து அதனை ஜமாஅத்திற்குட்பட்ட சொத்தாகப் பராமரித்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உடன்குடியில் மீண்டும் கிளை அமைக்கப்பட வேண்டியது அவசியமென்று தெரிவித்த அவர்கள், இது குறித்து அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந் தாலோசித்து முடிவை அறி விப்பதாகத் தெரிவித்தனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்