Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, May 21, 2013 11 Rajab 1434

Flash News

.....சன் நியூஸ் தொலைகாட்சியில் இன்று இரவு 9மணி முதல் 10மணி வரை விவாத மேடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜுவகிரிதரன் பங்கேற்கிறார் காணத்தவறாதீர்கள்...........

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, May 29, 2012
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் ரூ.70லட்சம் பணிகள் முடங்கி கிடப்பதை கண்டித்து இ.யூ. முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், காயல் மகபூப் பங்கேற்பு


காயல்பட்டினம் தொடர் வண்டி நிலையத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கா விட்டால், தென்மாவட்ட அள வில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் காயல்பட்டி னம் கிளை நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட் டுள்ளது.

பயணியர் வசதிக்காக, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நுழைவுச் சாலை, மின் விளக்குகள், தங்குமிடம், கழிப்பிடம், நடைமேடையை விரி வாக்கி உயர்த்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து தருமாறு, மத்திய தொடர்வண்டித் துறை யின் அப்போதைய இணைய மைச்சரும், மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் வெளியுறவுத் துறையின் தற்போதைய இணை யமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலை வருமான இ.அஹ்மத் ஸாஹி பிடம் கோரிக்கை வைக்கப்பட் டது.

அதனடிப்படையில், கடந்த 29.12.2009 அன்று காயல் பட்டினம் வருகை தந்த அவர், தொடர்வண்டி நிலையத்தை நேரடியாகப் பார்வையிட்டார். பின்னர் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்ற ஊர் மக்கள் வரவேற்பில் உரையாற் றிய மத்திய அமைச்சர், தொடர் வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கு உத்தர விடப்படுவதாக மேடையி லேயே அறிவித்தார். அதன் பின்னர், இவ்வகைக்காக ரூ.70 லட்சம் நிதியொதுக்கப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், காயல் பட்டினம் தொடர்வண்டி நிலை யத்தில் நுழைவுச் சாலை (யயீயீசடியஉh சடியன) அமைக்கப்பட் டது. மேற்கூரை அமைப்பதற் காக கம்பிச் சட்டங்கள் நிறுவப் பட்டன. சில இடங்களில் மின் விளக்குகளும் அமைக்கப் பட்டன.

இந்நிலையில், செய்த பணிகள் எவற்றையும் முழுமை யாக பூர்த்தி செய்யாமலும், செய்ய வேண்டிய பணிகள் எதையும் கையிலெடுக்காமலும் பல காலமாக காலந்தாழ்த் தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள் ளதைக் கண்டித்தும், நிலுவை யிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் ஆர்ப்பாட் டம் நடத்துவதென, அண்மை யில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல் ட்டினம் நகர கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து நடை பெற்ற தூத்துக்குடி மாவட்ட கூட்டத்திலும் தீர்மானிக்கப் பட்டது.

அதனடிப்படையில், கடந்த 26.05.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக் காதி திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். காயல் பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஆடிட்டர் அப்துல்லாஹ், தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நகர பொதுநல அமைப்பினர் முழக் கங்களை முன்மொழிய, ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றோர் அதனை வழிமொழிந்தனர்

நிறைவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் கண்டனப் பேருரையாற்றினார்.

காயல்பட்டினம் தொடர் வண்டி நிலையத்தில் ரூ.70 லட்சம் செலவில் செய்ய திட்ட மிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட் டுள்ளதாகவும், அவற்றை விரைந்து முடிக்காவிடில், தூத்துக்குடி - நெல்லை - கன் னியாகுமரி மாவட்டங்களி லுள்ள முஸ்லிம் லீக் கிளை களை ஒருங்கிணைத்து, தென் மாவட்ட அளவிலான ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தனதுரையில் அறிவித்தார்.

நிறைவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ். அபூஸாலிஹ் நன்றி கூற, துஆவுடன் ஆர்ப்பாட்டம் நிறை வுற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகி கள், உறுப்பினர்களும், நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்