Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, May 24, 2013 14 Rajab 1434

Flash News

...............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

 

 

 

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, July 02, 2012
தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் மீண்டும் தலைவர்


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில நிர்வாகி கள் தேர்தல் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமை யில் நேற்று மாநில தலைமையக மான கோழிக்கோடு லீக் ஹவுஸ் சி.ஹெச். முஹம்மது கோயா அரங்கில் நடைபெற்றது.

நாடு முழுவதும் இந்திய யூனியன் லீக் ஒரே பெயரில் இயங்குவது என்று முடிவெடுத் ததைத் தொடர்ந்து, முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்ற பெயரில் இயங்கி வந்த கேரள ஐ.யூ.எம்.எல்., இந்திய யூனியன் லீகில் முறைப்படி இணைந்தது. இதனை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. இந்திய நாடாளுமன்றமும் அங்கீகரித்து இரு உறுப்பினர் களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்கள் என அழைக் கப்படுவார்கள் என மக்களவை சபாநாயகர் ஆணை பிறப்பித் தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில புதிய நிர்வா கிகள் தேர் தல் கோழிக்கோட்டில் நடை பெற்றது.

இந்திய யூனியன் லீக் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேரள அமைச் சர்கள் குஞ்ஞாலி குட்டி, எம்.கே. முனீர், இப்ராஹீம் குஞ்சு, மஞ்ஞனம்குழி அலி, அப்துர் ரப் மற்றும் 15 சட்டமன்ற உறுப்பினர் கள், மாநில பொதுக்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.

மாநில புதிய நிர்வாகிகள்

இக்கூட்டத்தில் தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில நிர்வா கிகள் விவரம் வருமாறு:

தலைவர்: பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள்.

பொதுச் செயலாளர்: கே.பி.ஏ. மஜீத் (முன்னாள் கொறடா)

பொருளாளர்: பி.கே.கே. பாவா (முன்னாள் அமைச்சர்)

துணைத்தலைவர்கள்

சி.டி. அஹ்மது அலி, (முன்னாள் அமைச்சர்)

எம்.ஐ. தங்ஙள் (பேச்சாளர், எழுத்தாளர்)

வி.கே. அப்துல் காதர் மௌலவி

பி.ஹெச். அப்துஸ் ஸலாம் ஹாஜி

கே. குட்டி அஹ்மது குட்டி (முன்னாள் அமைச்சர்)

மாநில செயலாளர்கள்

பி.வி. அப்துல் வஹாப் (முன்னாள் எம்.பி.)

டி.பி.எம். ஷாஹிர் (கோழிக் கோடு முன்னாள் மாவட்ட செயலாளர்)

பி.எம்.ஏ. சலாம் (கலைக் கப்பட்ட இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர்)

எம்.சி. மாயின் ஹாஜி (கோழிக்கோடு மாவட்ட முன்னாள் தலைவர்) டி.எம். சலீம் (இடுக்கி ஜில்லா தலைவர்)

உயர் நிலை அரசியல் ஆலோசனைக் குழு

ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், இ.அஹமது, பி.கே. குஞ்ஞாலி குட்டி, இ.டி. முஹம்மது பஷீர், கே.பி.ஏ. மஜீது,

விசேஷ அழைப்பாளர் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள்.

மாநில கட்சி விவகாரங் களுக்கு பி.கே. குஞ்ஞாலி குட்டியும், அறக்கட்டளை மற்றும் ஊடகத் துறையின் செய்தி தொடர்பாளராக இ.டி. முஹம் மது பஷீரும் தேர்வு செய்யப்பட்ட னர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்