Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, November 24, 2017 5 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, May 11, 2007
உத்திரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் "பைத்துர் ரஹ்மா" இறையருள் இல்லங்கள் பானக்காடு ஹைதர் அலி தங்ஙள் திறந்து வைத்தார்


உத்திரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் "பைத்துர் ரஹ்மா" இறையருள் இல்லங்கள் பானக்காடு ஹைதர் அலி தங்ஙள் திறந்து வைத்தார் முஸாபர்நகர், மே. 11-உத்திரப்பிரதேச மாநிலத்தில் சென்ற ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் களுக்கு முஸாபாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 61 இறையருள் இல்லங்கள், ஒரு பள்ளிக்கூடம், ஒரு பள்ளி வாசல் ஆகியவை மக்களுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சி இன்று 11.05.2017 வியாழன் கிழமை முஸாபர் நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி. , அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப் எம்.பி. மற்றும் தேசிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், கேரள மாநில தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப் எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்து வர இருக்கிற குடியரசுத்தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதித்ததோடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நிலை பற்றியும் விசாரித்தனர்.

எம்.எல்.ஏ., மாநில முதன்மை துணைத் தலைவரும் நாடாளு மன்ற முன்னாள் உறுப்பின ருமான எம். அப்துர் ரஹ்மான், தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், தேசிய துணைச்செயலாளர்கள் சிராஜ் சேட், மத்தீன், கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.அப்துல் மஜீது, முஸ்லிம் யூத் லீக் தேசிய தலைவர் ஷாபிர் கப்பார் மற்றும் உத்திரப்பிரதேச மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்