Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, November 24, 2017 5 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, July 17, 2007
முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை தேசிய சிறுபான்மை ஆணையம் கண்டிக்க தவறிவிட்டது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நெல்லையில் பேட்டி


முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை தேசிய சிறுபான்மை ஆணையம் கண்டிக்க தவறிவிட்டது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நெல்லையில் பேட்டி திருநெல்வேலி, ஜூலை.17- நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களை கண்டிக்க தேசிய சிறுபான்மை ஆணை யம் தவறிவிட்டது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்து அதன்பின் நிருபர் களிடம் அவர் கூறியதாவது:-

சமூக நல்லிணக்கம்

இந்தியாவில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் எல்லாம் நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு, சமூக நல்லிணக்கத்துடன், மதச் சார்பற்ற தன்மையில் ஆட்சி செய்து வந்தன. தற்போது ஆட் சிக்கு வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியினர் தங்களுடைய இந்துத்துவா கொள்கையை திணிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகள் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இது இந்திய பாரம்பரியத்திற்கு எதிரானது. இப்படி அவர்கள் பேசிவருவது இந்த நாட்டிற்கு பேராபத்தை உருவாக்கக் கூடியதாகும். பா.ஜ.க ஆட்சிகு வந்தபிறகு கடந்த 3 ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசத்தில் நேற்று முன் தினம் ரயிலில் சென்ற முஸ்லிம் பெண் கள், குடும்பத்தினர் தாக்கப்பட் டுள்ளனர். முஸ்லிம் சமுதாயத் தினர் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

இதற்கு மாநில அரசுகள் எவ்வித நட வடிக் கையும் எடுப்பதில்லை. இதை கண்டித்துத்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார் பில் ஆர்ப்பாட்டங்கள், போராட் டங்கள் நடத்தப் படுகின்றன. டெல்லியில் 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தேசிய சிறுபான்மை ஆணையம்

தேசிய சிறுபான்மை ஆணையத்தை மத்திய அரசு முறையாக செயல்படுத்தவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்த ஆணையம் கண்டிப்பதில்லை. முஸ்லிம்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உணவுக்காக மாடுகள் வெட்டப்படுவது குறித்து 27 அம்ச விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை வாபஸ் பெறவேண்டும்.

பசுவதை தடை சட்டம்

பசுவதை தடை சட்டம் வேறு, உணவுக்காக அதை கொன்று சாப்பிடுவது வேறு இதை சரியாக புரிந்து கொள் ளாமல் உணவுக்காக அதை கொன்று சாப்பிடுவதை பசுவதை என்று மத்திய அரசு கூறி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உணவு பிரச்சினையில் அரசு தலையிடக்கூடாது. இந்த உத்தரவை மத்திய திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்துவோம். உணவு பிரச்சினையில் தலையிடும் கொடுமை இந்தியாவில் மட்டுமே உள்ளது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை அரசியலாக்காத ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே ஆகும். பாரதத்தின் பாரம்பரியத்தை பேணுகிற கட்சியாகும். தேசிய அளவில் தற்போது மாணவரணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி ஆகிய 4 அணிகளை உருவாக்கி கட்சியை வளர்த்து வருகி றோம். இந்தியாவில் இளை ஞர்கள், மாணவர்கள் அரசியல் சித்தாந்தங்களை அறிந்து கொள்ளவும் சமூக நல்லிணத் துக்கு எதிராக அவர்கள் திரும்பு வதை தவிர்க்கவும் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சட்டசபை தேர்தல்

தமிழகத்தில் ஜெயலலிதா இறந்தபிறகு அ.தி.மு.கவினர் கட்டுப்பாடு இல்லாமல் செயல் படுவதால் மோசமான ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி யால் தமிழகத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் கிடைக்க வேண்டுமானால், தமிழகத்தில் நல்லாட்சி நடக்க வேண்டும். அதற்கு உடனடியாக சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும்.

நீட் தேர்வு

மத்திய அரசு தமிழக மாண வர்களை பாதிக்கும் வண்ணம் கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று திராவிடர் கழகம், தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் போராட் டம் நடத்தி வருகிறோம். இந்த போராட்டம் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தொடரும். இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு பாதகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்தை புறக்கணிப்பதற்கு சமமாகும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், மாவட்டச் செயலாளர் பாட்டப்பத்து எம். முகம்மது அலி, மாவட்ட பொருளாளர் கானகத்து மீரான், மாவட்ட இளைஞர் லீக் செயலாளர் எம். கடாபி, மேலப்பாளையம் நகர தலைவர் முகைதீன் அப்துல் காதர், செயலாளர் முகம்மது ஜாகிர், பொருளார் மில்லத் ஹாஜா, மாவட்ட துணைத் தலைவர் ஜே. ஷாகுல் ஹமீது, மாவட்ட செய்தி தொடர்பாளர் நெல்லைப்பேட்டை எஸ். பீர் முகைதீன், வீரவநல்லூர் பி. ஆதம் இல்யாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, மேலப் பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா மாநில துணைத் தலைவர் எஸ்.எம். காதர் மொய்தீன் தலைமையில் நடந்தது.

மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், செயலாளர் பாட்டப்பத்து எம். முகம்மது அலி, பொருளாளர் கானகத்து மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முகைதீன் அப்துல் காதர் வரவேற்றார்.

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பச்சிளம் பிறைக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

நகர செயலாளர் முகம்மது ஜாகிர் நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்