Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, July 2, 2007
அரசியலமைப்பு கண்காணிப்பாளராக செயல்பட வேண்டிய ஆளுநர் அரசியல் தலைவராக அவதாரம் எடுப்பதுமாநில சுயாட்சியை மதிப்பில்லாமல் ஆக்கும் செயல் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி


திருச்சி, ஜுலை 02-அரசியலமைப்பு கண் காணிப்பாளராக செயல்பட வேண்டிய ஆளுநர் அரசியல் தலைவராக அவதாரம் எடுப்பதுமாநில சுயாட்சியை மதிப் பில்லாமல் ஆக்கும் செயல் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட எஸ்.டி.யூ. தலைவர் அஜ்மீர் காஜா இல்லத்திருமணம் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புழுதிப்பட்டியில் (சிவகங்கை மாவட்டம்) நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்க வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக் கைகளை மாநில ஆளுநர் ஆய்வு செய்வதை நேரடியாக எதிர்ப்போம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே? அவ்வாறு செய்தால் அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்குமா?ஜனாதிபதி பதில்:- ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் Constitutional Head - அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக இருக்கலாமே தவிர Political Leader – அரசியல் தலைவராக இருக்கக் கூடாது. இந்த நாட்டின் Constitutional Head ஆக ஜனாதிபதி இருக்கிறார் என்றால், மாநிலத்தின் Constitutional Head ஆக மாநில ஆளுநர் இருக்கிறார். ஜனாதிபதியின் பிரதிநிதியாக அவர் அப்பொறுப்பை வகிப்பதை யாரும் குறையாகப் பார்க்கவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் ஜனாதிபதி நேரடியாக ஆளும் முறை உள்ளது. இந்தியாவைப் பொருத்த வரை பிரதமர்தான் நாட்டை ஆள்கிறார். அவ்வாறு ஆள்வோர் அரசியலமைப்புச் சட்டத்தின் படியே ஆட்சி செய்ய வேண்டும். அதைக் கண்காணிக்க வேண்டியதும், அது மீறப்படும்போது தலையிட வேண்டியதும்தான் ஜனாதிபதியின் பொறுப்பாக இருக்கும். இதே பொறுப்பை மாநில அளவில் செய்பவராகவே மாநில ஆளுநர் இருக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் ஒரு மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக மாவட்ட ஆட்சியரையோ - அதிகாரிகளையோ சந்திப்பது, திடீரென ஒரு மருத்துவ மனையில் சென்று பார்ப்பது, திடீரென சாலையில் நிற்பது, ஆய்வு நடத்துவது என இவையெல்லாம் ஞடிடவைiஉயட டுநயனநசள எனப்படும் அரசியல் தலைவர்கள் செய்யக் கூடியவையே. ஆனால், Constitutional Leader ஆக உள்ள ஆளுநர், Political Leader போல செயல்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

மாநில சுயாட்சி

என்னைப் பொருத்த வரை, நம் மாநிலத்தின் ஆளுநர் நல்ல அறிஞர். சிறந்த இலக்கியவாதி என்பதை நான் அறிவேன். அதே நேரத்தில், ஆளுநரின் நடவடிக்கைகளுக்கென ஒரு வரம்பு உள்ளது. அந்த வரம்புக்குள் இருந்துகொண்டு அவர் எதைச் செய்தாலும் அது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது. அதை மீறி அரசியல் தலைவராக அவதாரமெடுப்பது என்பது முரண்பட்டதும், மாநில சுயாட்சியை மதிப்பில்லாமல் ஆக்குவதும் என்பதால் அது கண்டிக்கத்தக்கது. திமுக மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் இந்ந டவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்திருக்கின்றன. நாங்களும் எதிர்க்கிறோம். இதுகுறித்து ஏற்கனவே நான் பேட்டியும் கொடுத் திருக்கிறேன். ஆர்ப்பாட்டம் நடத்தல், கருப்புக்கொடி காட்டல் போன்றவைதான் எங்கள் நடவடிக்கைகளில் இல்லையே தவிர, மாநில ஆளுநர் Constitutional Head ஆக மட்டும் இருந்து வழிகாட்ட வேண்டுமே தவிர, வரம்பு கடந்த செயல் பாடுகளில் அவர் இறங்கக் கூடாது என நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டாட்சி தத்துவம் மத்திய அரசும், மாநிலங் களும் Co-operative Federalism எனும் கூட்டாட்சித் தத்துவ அடிப்படையில் ஆட்சி நடத்து வதைத்தான் மாநில சுயாட்சி என்ற பெயரில் எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி:- இந்தியா முழுக்க ஒரே கலாச்சாரம்; ஒரே மதம் என்ற அடிப்படையில் இந்துத்து வாவைத் திணிக்க இன்றைய மத்திய அரசு முயற்சித்து வருவதாகக் கூறப்படுவது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்:- இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை, இந்தியா என்பது ஜனநாயக த்தை அடிப் படையாகக் கொண்ட பழம்பெரும் நாடு. எல்லா மக்களும் அண்ணன் - தம்பிகளாக வாழ வுண்டிய நாடு. இந்திய அரசியலில் தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக முதலில் குரல் பொடுப்போர் நாங்கள்.

பன்முகத்தன்மை

நம் இந்தியத் திருநாடு பன்முகத்தன்மை கொண்டது. இந்நாட்டில் வாழும் மக்கள் பல்வேறு மதம், இனம், ஜாதி, மொழி, கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். இவர்கள் எல்லோருமே ஒரே விதமான மதத்தைப் பின்பற்ற இயலாது. அப்படி இருந்தால் உலகம் முழுக்க ஒரே மதம்தான் இருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை.இந்த உலகம் எவ்வளவு பெரியதோ அதுபோல, இந்தியாவானது சிறிய உலகம். அதனால்தான் இது துணைக்கண்டம் என்றழைக்கப்படுகிறது. நம் நாட்டில் மதம், கொள்கை, ஜாதி என 4,636 வகுப்புகள் இருப்பதாக ஹவோசடியீடிடடிபiஉயட ளுரசஎநல சொல்கிறது. அவையi னத்தும் ஒரே அமைப்பாக மாற வேண்டும்; அனைவரும் ஒரே கடவுளை வணங்க வேண்டும்; ஒரே கோயில்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கருதுவது, """"வானத்தில் சூரியன் மட்டும்தான் இருக்க வேண்டும்; சந்திரனோ, விண்மீன்களோ இருக்கக் கூடாது"" என்று கூறினால் எப்படி இயற்கைக்கு மாற்ற மான, முட்டாள் தனமான கருத்தோ அதே போன்ற கருத்துதான்.இங்கு ஒரே மதம், ஒரே சாதி என்பதெல்லாம் சாத்தியமற்றது. இது வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கொள்கை. தமிழகத்தில் இக்கொள்கைக்கு எந்த வேலையும் இல்லை.

‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்

’தமிழகம், ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’, ‘பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்’ ஆகிய முழக்கங்களைக் கொள் கையாகக் கொண்ட திராவிட பாரம்பரத்தின் அடிப் படையில் அமைந்துள்ளது. நாம் பிறப்பால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன் என்று இருப்போம். ஆனால் நம் அனைவருக்கும் தாய் தந்தையர் ஒன்றே. நமக்குக் கடவுளும் ஒன்றே. அந்த அடிப்படையில்தான் நாம் யாவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். இந்த நல்ல கொள்கையைத்தான் அக்காலத்துப் பெரியவர்கள், சங்க இலக்கிய காலம் தொட்டு, அதற்குப் பிறகு வந்த ஞானிகள், பின்பு அரசியல் தலைவர்களாக வந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காயிதேமில்லத், காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர். என எல்லோருமே நிலைநிறுத்தப் பாடுபட்டார்கள்.

இந்துத்துவா கொள்கை

இக்கொள்கைக்கு மாற்றமாக, மொத்த நாட்டிற்கும் ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற போர்வையில் இந்துத்துவக் கொள்கையைத் திணிப்பதை - இந்நாட்டின் முஸ்லிம்களான நாங்கள் மட்டுமல்ல; இங்குள்ள இந்துக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்துத்துவா என்பது வன்முறையான, தீவிரவாதக் கொள்கை; எனவே அது இந்நாட்டிற்குப் பொருந்தாது என இந்துக்களில் பெரும்பாலானவர்களே கூறும் நிலைதான் இங்குள்ளது.

திராவிட பாரம்பரியம்

ஆகவே, இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் நல்ல வாழ்க்கை வழிமுறையைத் தரவல்ல திராவிடப் பாரம்பரியக் கொள்கையால் மட்டுமே நன்மையளிக்க முடியும். இக்கொள்கையை நிலைநாட்டுவதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மிகத் தீவிரமாக உள்ளது. இதற்கு மாறாக, வட நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்றெல்லாம் கூறுவது நடைமுறைச் சாத்தியமற்றது.

கேள்வி:- சென்னை யிலிருந்து சேலம் வரை 8 வழிச்சாலை எனும் பசுமை வழிச் சாலையை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதை திமுக எதிர்க்கிறது. இது தொடர்பாக, அக்கூட்டணியில் இருக்கும் தங்களது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடைய நிலைபாடு என்ன?

பதில்:- சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. அதை திமுக மட்டுமல்ல; தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை. 8 வழிச்சாலை

சீனாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பே 8 வழிச்சாலை, 10 வழிச்சாலை, 16 வழிச்சாலை எல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக அந்நாடு இன்று பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றத்தில் உள்ளது. அமெரிக்காவில், நியூயார்க் கிலிருந்து வாஷிங்டன் வரை 16 வழிச்சாலை அமைக்கப் பட்டிருக்கிறது. வாகனங்கள் சென்று கொண்டே இருக் கின்றன. சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவை வெறும் இரண்டே மணி நேரத்தில் சென்றடைந்துவிடுகின்றனர். ஏன், டில்லியிலிருந்து மீரட் வரை 16 வழிச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இவற்றால் அச்சாலைகளைப் பயன்படுத்து வோருக்கு நன்மைகள் தான் கிடைத்துக் கொண்டி ருக்கின்றன. பாதைகள் விசாலமாக இருந்தால், அதனால் மக்களின் போக்குவரத்து விரைவாக இருக்கும். இதன் காரணமாக அவர்களது வணிகம், தொழில் அனைத் திற்கும் அபிவிருத்தி கிடைக்கும். ஆனால், இத்திட்டத்தால் தங்களுக்குப் பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும் என அப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சம் தெரிவித் திருக்கின்றனர். அப்படி யார் யார் அச்சப்படுகின்றனரோ - அவர்களையோ அல்லது அவர்களது பிரதிநிதி களையோ அரசு அழைத்துப் பேசி, அவர்களின் அச்சங் களைப் போக்கி, அவர்களைத் திருப்தி படுத்திய பின் சாலையை அமைப்பதே நியாய மானதாக இருக்கும். இதைத் தான் நாங்களும் சொல்கிறோம்; திமுகவும் சொல்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை - அரசியல் ரீதியாக நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தின் கூட்டணியில் இருக்கி றோம். அதே வேi ளயில், சிறுபான்மை மக்களுக்கு எந்த அரசு நன்மை செய்தாலும் அதை நாங்கள் வரவேற்போம்; பாராட்டுவோம்; நன்றியும் தெரிவிப்போம். அந்த அடிப் படையில், தமிழகத் திலுள்ள மாவட்ட காஜிகளுக்கு தொகுப் பூதியமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருப்பதை நாங்கள் உளப்பூர்வமாகப் பாராட்டு வதோடு, அதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே போல, தமிழகத்திலுள்ள மாவட்ட காஜிகள் அனைவரையும் - அவரவர் மாவட்டங்களில் இஸ்லாமிய திருமணங்களைப் பதிவு செய்யும் அதிகாரியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த அரசு ஏற்றுக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி யளித்தார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்