Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, October 28, 2007
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தவேண்டும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் ஜனவரியில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில மாநாடு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு


சென்னை, அக். 28- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் 27.10.2018 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பைஸ் மஹால், எழும்பூர் புகை வண்டி நிலையம் எதிரில், சென்னை-600 008 என்ற முகவரி யில் நடைபெற்றது.

மாநில துணைச்செய லாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி கிராஅத் ஓதினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., வரவேற்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

இரங்கல் தீர்மானம்

கலைஞர் இரங்கல்

முத்தமிழ் அறிஞர் கலை ஞர் டாக்டர் மு. கருணா நிதி அவர்கள் தமிழகத்திற்கு பேரும் புகழும் சேர்த்து நிலைத்து நின்ற இமயமலைப்போல் திகழ்ந் தவர். அவரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக வரலாற்றில் 80 ஆண்டுகளுக்கு மேலாக முதல் இடத்தில் வைத்து போற்றப்பட்ட மக்கள் தலைவராக திகழ்ந்த வர் கலைஞர். தமிழ் மொழியின் சுரங்கமாகவும், தமிழ்பண்பாட்டின் பெட்டகமாகவும், செம்மொழி தமிழ் இலக்கிய ஊற்றாகவும், தமிழ் தென் நெறியின் உரைவிடமாகவும் மானிட வரலாற்று சுலையாகவும் வாழ்ந்தவர் கலைஞர்.

மக்கள் சேவையில் அரசு நிர்வாகத்தில் சட் டங்கள் செய்வதில் பல சீர்திருத்தங்களையும் புரட்சி கரமான திட்டங்களையும் தேசிய அளவில் மட்டுமல் லாமல் சர்வதேச அளவில் ஏற்று போற்றக்கூடிய தத்து வங்களையும் வெளியிட்ட ஒளி சிந்திய ஓய்வறியா ஞான சூரியனாக திகழ்ந்தவர் கலை ஞர்.

எல்லாச் சமுதாய மக்களின் அன்பராக திகழ்ந்த கலைஞர் அவர்கள் தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் நண்பராகவும், இதய நாயகராகவும் போற்றப் பட்டார். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம் பாடு , வர்த்தகம், தொழில் முன்னேற்றம், ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வுக்கான ஆதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கித் தந்து சமுதாய உயர்வுக்கு உதவிய பேரு பகாரியாக விளங்கியவர். எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வு, நம்பிக்கை, நடைமுறை ,பழக்க வழக்கம், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றை தெளி வாக புரிந்து சிறப்பாக மதித்து பாராட்டக்கூடிய வகையில் பாதுகாத்து தந்து நானிலம் போற்றிய நல்லிணக்க நாய கராக விளங்கியவர் கலைஞர்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் காலம் தொட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் உறவையும், அன்பையும், நேசத்தையும் வளர்த்தவர் கலைஞர். திராவிட நெறியும் , இஸ்லாமிய வாழ்க்கை நெறியும் இணைந்து செல்லும் பல்வேறு கூறுகளை கண்டறிந்து அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து போற்றி வளர்த்த வந்த கலைஞர் அவர்களின் மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப் பாகிவிட்டிருக்கிறது. மறைந்த கலைஞர் அவர்களுக்கு இக்கூட்டம் தனது மன வேதனையோடு கூடிய இரங்கலை தெரி விக்கிறது. அவரின் மறை வால் வாடும் திமுக இயக்கத்தி னருக்கும், கலைஞர் அவர் களின் அன்பிற்கினிய குடும்பத் தாருக்கும் இக்கூட்டம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரி விக்கிறது.

கலைஞர் அவர் கள் உடலளவில் மறைந்திருந் தாலும் மக்களின் உள்ளத்தள வில் என்றும் மறையாமல் இருக் கிறார். அவருடைய இலட்சியங்கள், அவர் ஊட்டிய தத்துவங்கள், அவர் காட்டிய அரசியல் பயணப் பாதைகள் என்றும் மiறாமல் இருக்கின்றன. கலைஞர் அவர்கள் சென்று , வென்று, வரலாறு படைத்த பாதையில் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் ஒப்பறிய தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களுடைய தலைமையில் செல்லும் பல வெற்றிகளை வெல்லும் வருங்கால வரலாறு இதைச் சொல்லும் என்பதை உறுதி செய்யும் வகையில் திராவிட

முன்னேற்ற கழகத்தின் வெற்றி பயணத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும், துணை நிற்பது என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

இயக்க முன்னோடிகளின் மறைவிற்கு இரங்கல்

அண்மையில் மறைந்த கீழ்க்கண்டவர்களுக்கு இக்கூட்டத்தில் ஆழ்ந்த இரங் கல் தெரிவிக்கப்பட்டு, மஃபிரத் திற்கு துஆ செய்யப்பட்டது.

13.04.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வின் தந்தையார் கே.எல்.டி. அஹமது மொய்தீன்,

13.04.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஏ. அப்துல் ஜப்பார்,

18.04.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன் தாயார் முத்து கதீஜா,

22.04.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கே.பி. காதர் உசேன்,

08.07.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதுபெரும் தலைவர் ஏ.கே. அப்துல் ஹம் ஹாஜியார்,

20.07.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.கே. ஹபீபுர் ரஹ்மான்,

27.07.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொருளாளர் செர்குளம் அப்துல்லாஹ்,

27.07.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிராம்பட்டினம் நகர பிரமுகர் எம்.ஏ. முஹம்மது இப்ராஹிம்,

29.07.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தகப்பனார் நெ.மு. முகைதீன் அப்துல் காதர்,

30.07.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் குடியாத்தம் எச். ரஹ்மத்துல்லாகான்,

02.08.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் திண்டுக்கல் கே.எஸ். ஷபீர் அஹமது,

13.08.2018 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி,

16.08.2018 முன்னாள் பிரதமர் அட்டெல் பிகாரி வாஜ்பாய்,

02.09.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட மூத்த முன்னோடி எம்.ஏ. உமர் பாரூக்,

09.09.2018 விழுப்புரம் மாவட்ட காயிதே மில்லத் பேரவை தலைவர் குல்ஜார் சாஹிப்,

17.09.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மானியம் ஆடுர் முன்னாள் தலைவர் என்.எஸ். ஜெய்னுல் ஆபிதீன்,

20.10.2018 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள சட்டமன்ற உறுப்பினர் பி.பி. அப்துல் ரசாக்,

கன்னியாகுமரி மாவட் டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட பொருளாளர் முஹம்மது இஸ்மாயில்,

முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஆர். மொய்தீன்கன் மனைவி பாத்திமா பீவி,

முன்னாள் மாவட்ட தலைவர் எச்.எம். யூனுஸ் சாகிப் மகன் முஹம்மது பாரூக்,

கடலூர் மாவட்டம் பி. முத்தூர் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ரவூப்,

திருப்பூர் மாவட்டம் மங்கலம் குன்னூர் நகர முன்னாள் தலைவர் முஹம்மது இஸ்ஹாக்,

ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங் கலை தெரிவிப்பதோடு ,மறைந்தவர்களின் மருவுலக நல்வாழ்வுக்கு துஆ செய்கிறது.

வரவு செலவு கணக்கு தாக்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் பொது கணக்கு , தேர்தல் கணக்கு மற்றும் நிவாரண நிதி ஆகிய வரவு, செலவு கணக்குகள் இக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கருத்துரை வழங்கியோர்

இம்மாநில செயற்குழுவில் மாநில செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், மாநில துணைத்தலைவர்கள் தளபதி மௌலானா ஷபிகுர் ரஹ்மான், திருப்பூர் பி.எஸ். ஹம்சா,சேலம் எம்.பி. காதர் உசேன், மாநில துணைச்செயலாளர் ஆப்ப னூர் ஆர். ஜபருல்லாஹ், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் மொய்தீன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செய்யது முஸ்தபா, நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் எஸ். செய்யது சுலைமான், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி. மீராசா மரைக்காயர், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அஷ்ரப் அலி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பஷீர், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சர்புதீன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அல்தாப் உசைன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வகாப், நீலகிரி மாவட்ட செயலாளர் சி.எச்.எம். முஹம்மது ஹனீபா, திருவள்ளுர் மேற்கு மாவட்ட தலைவர் காயல் அஹமது சாலிஹ், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சித்தீக் அஹமது, சேலம் மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, கரூர் மாவட்ட செயலாளர் மகபூப் அலி, திருவள்ளுர் கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹிம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர் செஞ்சி கலீலுர் ரஹ்மான், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் சுலைமான், காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வகாப், காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எஸ். தாவூது, விழுப்புரம் மேற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார், வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சான்பாஷா, ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆடுதுறை ஜமால் முஹம்மது இப்ராஹிம், சிவகங்கை மாவட்ட தலைவர் ஹைதர் அலி அம்பலம், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயாலாளர் தாம்பரம் ஷேக் அப்துல் காதர், பொருளாளர் முஸ்தபா, கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் குளைச்சல் ஜுபைர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், தருமபுரி மாவட்ட தலைவர் அன்வர் பாஷா, ஈரோடு தெற்கு மாநில கௌரவ ஆலோசகர் தாஜ் முகைதீன், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.எம். நிஜாமுதீன், நாமக்கல் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முபீன், மகளிர் லீக் தலைவர் பேராசிரியை ஏ.கே. தஷ்ரீப் ஜஹான், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்துக

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற விடாமல், தமிழக அரசு பல்வேறு நொண்டிச் சாக்குகளை கூறி தள்ளிப்போட்டுக்கொண்டு வருவதை சென்னை உயர்நீதி மன்றம் கடுமையாக கண்டித் திருக்கின்றது. இதனை இக்கூட்டம் மிக வும் வரவேற்கிறது. இனி யும் உள்ளாட்சி தேர் தலை நடத்தாமல் ஒத்திப் போடு வதற்குரிய தந்திரோ பாயங் களை மேற்கொள் ளாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டு மென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்

(அ) தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், வரும் 2019ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியில் தொடர்வது என்று இந்த மாநில செயற்குழு தீர்மானிக்கிறது.

(ஆ) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிய வரலாற்றை மீண்டும் புதுப்பிக்கும் வகையில், கூட்டணிக் கட்சிகளுடன் எல்லா வகையிலும் இதயப் பூர்வமாக இணைந்து தேர்தல் பணியாற்றி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் சிறப்பான வெற்றிக்கு பாடுபடுவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

(இ) தமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதி களிலும் கூட்ட ணிக் கட்சிகளின் நிர்வாகி கள், அந்ததந்த தொகுதிகளுக்குட் பட்ட மாவட்டங்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர், செயலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாடாளுமன்றத் தொகுதிக்கும் மேலிட பொறுப்பாளர்களை நியமித்திட மாநில தலைவ ருக்கு இக்கூட்டம் அதிகாரம் வழங்குகிறது. (ஈ) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 2019ல் வரவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டி யிடுவதற்குரிய தொகுதிகளைப் பெறவும், அதற்கான பேச்சுவார்த் தைகளை திமுகவுடன் நடத்தவும், அதற்குக் குழு அமைத் துக்கொள்ளவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணிச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவித்திடவும் மாநிலத் தலைவருக்கு ழுழு அதிகாரம் அளிப்பதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

மாநில மாநாடு

(அ) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டை எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் மூன்றா வது வாரத்தில் நடத்து வதென இக்கூட்டம் முடிவு செய்கின்றது. மாநில மாநாட்டு வரவேற்பு குழு கட்டணமாக ரூ. 1000/- என இக்கூட்டம் முடிவு செய்கின்றது.

இம்மாநாட்டில் சமய நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வரும் இந்து, முஸ்லிம், கிறுத்துவர் சமுதாயங்களை சேர்ந்தவருக்கு சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது சாகிப் - சமூக நல்லிணக்க விருதும், சான்றிதழ், பாராட்டுப்பத்திரம் ரூபாய் 50 ஆயிரம் பொற்கிழி வழங்கி கௌரவிப்பதென்றும்,

(ஆ) இஸ்லாமிய அறிஞ ருக்கு பானக்காடு சையது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள் விருது மற்றும் தமிழ் - அரபி மொழிகளின் ஒப்பாய்வு வல்லுநருக்கான அல்லாமா அமானி ஹஜ்ரத் விருது ஆகிய விருதுகள் வழங்குவதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

விருதாளர்களை தேர்வு செய்யும் குழு மாநாட்டு நிதிக் குழு, தீர்மானக்குழு, விருது, கேடயம், பாராட்டுப் பத்திரம் வழங்கும் குழு, பிரச்சாரக்குழு ஆகிய மாநாட்டு குழுவினரை நியமித்திட மாநில தலை வருக்கு இக்கூட்டம் அதிகாரம் வழங்குகிறது.

மாநில மாநாடு நடை பெறும் ஊர் மற்றும் திடலை நேரில் ஆய்வு செய்து அதனுடைய சாத் திய கூறுகளை ஒருவார காலத்திற் குள் மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்திட மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான் ஆகியோரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இதன்பின் இவ்வாய்வுக்குப் பின் மாநாடு நடைபெறும் ஊர் மற்றும் திடல் அறிவிப்பு தலைமை நிலையத்தின் சார்பில் வெளியிடப்படும்.

வருமானமில்லாத பள்ளிவாசல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மாத ஊதியம் வழங்கிட வேண்டும்

தமிழகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தி வரும் மஸ்ஜிது (பள்ளிவாசல்)களின் எண் ணிக்கையைக் கணக்கெடுப் பதற்கு ஒவ்வொரு ரெவின்யூ மாவட்டத்திலும் மூவர் அடங்கிய குழு அமைத்து, கணக்கெடுக்கும் பணியை 2018 டிசம்பர் 31க்குள் முடிப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

வருமானமில்லாத பள்ளி வாசல்களில் பணிபுரியம் அலுவலர்களுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலம் மாத ஊதியங்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு நிதி வசதியைச் செய்தளித்திட முன்வர வேண்டுமென இக்கூட் டம் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கிறது.

வாக்குப்பதிவு எந்திரம் வாக்குச் சீட்டு முறையும்

வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒவ்வொரு வாக்காளரும் தனது வாக்கைப் பதிவு செய்யும் போது, அந்த வாக்காளர் யாருக்கு வாக்களித்துள்ளார் என்பதை அவர் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு உதவும் """"விவிபெட்"" என் னும் கருவி ஒவ்வொரு வாக்குப் பதிவு எந்திரத்திலும் பொருத்தப்படுகிறது எனவும்,

வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு எந்திரத் திலுள்ள கட்டுப்பாட்டுக் கருவி பழுது பட்டாலோ, சந்தேகத்திற்குள்ளானாலோ வாக்காளர், சரிபார்ப் புக் கருவியில் சேகரிக்கப்பட் டிருக்கும் வாக்குகளை எண்ணி முடிவு அறிவிக்கப்படும் என வும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதை இக்கூட்டம் பாராட்டி வரவேற்கிறது. அதே சமயத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குகளை பெட்டியில் போடும் வழக்கத்தைத் திரும்ப வும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் கோரியும் வருவதைக் கவனத்தில் கொண்டு வாக்காளர் யாருக்கு வாக்களித் தார் என்பதை அறிவிக்கும் எந்திரத்தில் இருந்து, அந்த அறிவிப்புச் சீட்டை வாக்காளர் எடுத்து, தேர்தல் அதிகாரியின் முன் வைக்கப்படும் பெட்டியில் போட்டு விட்டுச் செல்லும் ஒரு முறையை அறிமுகம் செய்தால், வாக்கு எந்திர முறையும் தொடரும்; வாக்குச் சீட்டு முறையும் தொடரும்; தொடர்ந்து பேசப்படும் விமர் சனங்களும் மறையும் என் பதை இக்கூட்டம் சுட்டிக் காட்டி, இந்தத் திருத்தப் பட்ட முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடிவுகாண வேண்டுமென இக் கூட்டம் இந்திய தேர் தல் ஆணையத்திற்கு வேண்டு கோள் விடுக்கிறது.

மணிச்சுடர் வளர்ச்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ நாளே டான மணிச்சுடர் நாளி தழ் வளர்ச்சிக்கு முஸ் லிம் லீக் நிர்வாகிகள் துணை நிற்க வேண்டுமென தலைவர் பேராசிரியர் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட் டத்தைச் சேர்ந்த வர்க ளும் மாவட்டம் வாரியாக அதிக ளவில் சந்தா சேர்த்து வழங்குவதாக உறுதியளித் தனர்.

இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் திருப்பூர் பி.எஸ். ஹம்சா முயற்சியில் 55 நபர்களிடமிருந்து பெறப்பட்ட ஆறுமாத மணிச்சுடர் சந்தா தொகையும், திருச்சி ஹாபிழ் ஏ. அல்லாஹ்பக்ஷ் சார்பில் 10 ஒரு வருட மணிச்சுடர் சந்தா தொகையும், புளியங்குடி உதுமான் மூன்று ஒரு வருட மணிச்சுடர் சந்தா தொகையும், வாணியம்பாடி நரி முஹம்மது நயிம் ஒரு வருட மணிச்சுடர் சந்தா தொகையும், தருமபுரி மாவட்ட செயலாளர் ஆர். நிஜாமுதீன் ஒரு வருட சந்தா தொகையும் தலைவர் பேராசிரியரிடம் வழங்கினர்.

மாவட்ட லீக் கட்டிடங்கள்

திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் ஆகிய வருவாய் மாவட்டங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாக வசதிக் காக திருநெல் வேலி கிழக்கு, திருநெல்வேவி மேற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சா வூர் தெற்கு என பிரிக்கப் பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சொத்துக்கள் திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ளன. இச்சொத்துக்களை பராமரித்திட மேற்குறிப் பிட்டுள்ள மாவட்டங்களுக் கிடையே சுமூக தீர்வு கண்டிட திருநெல்வேலி கட்டிடம் சம்மந்தமாக திருநெல்வேலி மேற்கு மாவட்ட தலைவர் எஸ். செய்யது சுலைமான், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் மொய்தீன் ஆகியோரும், தஞ்சாவூர் கட்டிடம், நிலம் சம்மந்தமாக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரும் கலந்து பேசி முடிவெடுத்து ஒருவார காலத்திற்குள் மாநில தலைமை நிலையத்திற்கு தகவல் தெரிவித் திட இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

நிவாரண நிதி வழங்கியோர்க்கு நன்றி

சென்ற ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் கடும் மழை வெள்ளம் ஏற் பட்டு பொதுமக்கள் சொல் லெனா துயரத்திற்கு ஆளாக் கப்பட்டனர். பாதிக்கப் பட்ட கேரள மக்க ளுக்கு மனிதாபிமான அடிப் படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு நிவாரண நிதி திரட்டப்பட்டு ரூ. 55 லட்சம் கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களிடம் வழங்கப்பட்டதோடு, ரூபாய் 75 லட்சம் அளவிற்கு நிவா ரண பொருட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் திரட்டப்பட்டு கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது. கேரள மக்களின் துயர் துடைக்கும் பணிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேண்டுகோளை ஏற்று உதவிய அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், சமுதாய புரவலர்கள், அனைத்து சமய மக்களுக்கும் இச்செயற்குழு இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

ஊடக பயிலரங்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மின்னணு ஊடகப்பிரிவின் சார்பில் பயிலரங்கம் நடத்து வதற்கு இக்கூட்டம் அனுமதி வழங்குகிறது.

மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் நன்றி கூறினார்.

மாநில துணைத்தலைவர் மௌலானா ஷபிகுர் ரஹ்மான் துஆ ஓதினார்.

பங்கேற்றோர்

மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவர்கள் அதிரை எஸ்.எஸ். பி. நஸ்ருதீன், எம்.எஸ். கனிசிஸ்தி, மாநில செயலாளர்கள் எச். அப்துல் பாசித், வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் க்யூ. அக்பர் அலி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.கே. பிலால் உசேன், தென்சென்னை மாவட்ட தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, மாவட்ட செயலாளர் மடுவை எஸ். பீர் முஹம்மது, வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட செயலாளர் கமுதி ப. சம்சுதீன், திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ. சிக்கந்தர், திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.எம். ரஹ்மத்துல்லா, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் படூர் எஸ். அல்லாஹ்பக்ஷ்,

விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். அமீர் அப்பாஸ், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர். ரஷீத்கான், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் இ. முஹம்மது அலி, திருவண்ணா மலை வடக்கு மாவட்ட தலைவர் கே.ஏ.டபிள்யூ. அப்துல் காதர் ஷெரீப், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பி. ஜாபர், மாவட்ட செயலாளர் ஆர். நிஜாமுதீன், கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ. அமானுல்லா, கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம். ராஜா ரஹிமுல்லா, , ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அஸ்கர் அலி, மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. சான்பாஷா, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கே.பி. அப்துல் ரஹிம், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மங்கலம் இப்ராஹிம், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் ஏ. அன்வர் பாஷா, நாகை வடக்கு மாவட்ட செயலாளர் அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான்,திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எச். முஹம்மது நிஜாமுதீன்,திருவாரூர் மாவட்ட தலைவர் ஏ.எம். தமீம் அன்சார், மாவட்ட செயலாளர் கே. முகைதீன் அடுமை, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எம்.ஏ.கே. தக்பீக் உசைன், மதுரை தெற்கு மாவ்ட்ட செயலாளர் ஏ. இக்பால் பாஷா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வி.ஏ.எம். இக்பால், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எம். நஸீம், நாமக்கல் மாவட்ட செயலாளர் கே. தவ்லத்கான், மகளிரணி மாநில செயலாளர் வழக்கறிஞர் எம். ஆயிஷா, இளைஞரணி மாநில தலைவர் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் பழவேற்காடு மு. அன்வசாரி, எஸ்.டி.யூ. மாநில தலைவர் என்பி. வாஹித்,

சிறப்பு அழைப்பாளர்

திருவள்ளுர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.பி. கலீலுர் ரஹ்மான், காஞ்சி தெற்கு மாவட்ட பொருளாளர் ஜி. நூர் முஹம்மது, விழுப்புரம் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம். அப்துல் கனி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.எம். நவாப்ஜான், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொருளாளர் கே.எம்.ஏ. கமாலுதீன், தருமபுரி மாவட்ட பொருளாளர் சி.ஏ. சுலைமான், தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் கே. மீராசா, நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளர் கானகத்தி மீரான், திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹுமாயூன், கோவை தெற்கு மாவட்ட பொருளாளர் கே.ஏ. முஹம்மது யூசுப், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.கே. பி. ஜெய்லானி, திருச்சி வடக்கு மாவட்ட பொருளாளர் ஏ. லியாகத் அலி, வடசென்னை மாவட்ட பொருளாளர் எஸ். முஸ்தபா, சேலம் மாவட்ட பொருhளாளர் ஹன்னு (எ) சாதிக் பாஷா, சிவகங்கை மாவட்ட பொருளாளர் ஏ.ஐ. பிலால், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஏ. முஹம்மது பாரூக், நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹிம், கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் யூ. காதர் பாஷா, வேலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர். அப்துல் அஜீஸ், நாமக்கல் மாவட்ட பொருளாளர் எஸ். முஹம்மது அலி, புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் எம். உசேன் இப்ராஹிம், நாமக்கல் மாவட்ட இணைச்செயலாளர் ஏ. பாரூக் பாஷா, புதுக் கோட்டை மாவட்ட இணைச் செயலாளர் ஏ. பீர் முஹம்மது,

அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி, அமீரக காயிதே பேரவை பொதுச்செயலாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான், வந்தவாசி டி.எம். பீர் முஹம்மது,நாகை தெற்கு மாவட்ட கௌரவ தலைவர் டாக்டர் கே.எம்.எம். ஷம்சுதீன், கே.எஸ். முஹம்மது ஆரிப், நல்லாசிரியர் பி. அப்துல் முத்தலிப், அறமுரசு எச். அப்துல் காதர்,திருச்சி கவிஞர் சையது ஜாபர், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஏ.ஆர். அப்துல் ரஷீத், ஏ.எச்.எம். இஸ்மாயில், , மாநில தiமை நிலைய பாடகர் கவிஞர் ஷேக் மதார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் டி. சுல்தான் முகைதீன், விழுப் புரம் கிழக்கு மாவட்ட மூத்த துணைத்தலைவர் வி.ஆர். முஹம் மது இப்ராஹிம், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் எஸ். அன்சாரி மதார், மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் திருச்சி அன்சர் அலி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

ஏற்பாடுகள்

மாநில செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை தலைமை நிலைய மேலாளர் சித்தீக், புளியங்குடி உதுமான் எம்.எஸ்.எப். மாநில பொருளாளர் ஏ.எஸ். அஹமது, இஸ்மாயில், தென்காசி முஹம்மது அலி, ஈரோடு ஷெரீப், முஸ்தபா, முஹம்மது சேட், பூவை காதர், திருமங்கலம் நாகூர்கனி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்