Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, November 5, 2007
ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் பைத்துல்மால் அமைப்பை நிறுவி மக்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, சரியாக திட்டமிட்டு உதவி வழங்க வேண்டும் அய்யம்பேட்டையில் மர்ஹூம் ஆலிமான் ஜியாவுதீன் இல்லத்திறப்பு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


அய்யம்பேட்டை, நவ. 05-ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் பைத்துல்மால் அமைப்பை நிறுவிமக்களின் பொருளாதார நிலை யை ஆய்வு செய்து, சரியாக திட்டமிட்டு உதவி வழங்க வேண்டும் என்று அய்யம் பேட்டையில் மர்ஹூம் ஆலிமான் ஜியாவுதீன் இல்லத்திறப்பு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

ஆலிமான் ஜியாவுதீன் குடும்பத்திற்கு புதிய இல்லம் திறவுகோல் மற்றும் மறைந்து ஜம்.ஜம். அல்ஹாஜ் எஸ்.எம். பதுருதீன் முதலாம் ஆண்டு நினவேந்தல் மற்றும் புத்தகம் வெளியீட்டு விழா அய்யம் பேட்டையில் உள்ள அஞ்சுமன் திருமணம் மஹாலில் நடைபெற்றது.

விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் கே.எம். காதர்மொய்தீன் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் தனது சிறுவயதில் இருந்து இணைந்து கொண்டு கட்சி பணி மற்றும் சமூக பணிகளையும், செய்தி யாளராகவும் பணியாற்றிய ஆலிமான் ஜியாவுதீன் திடீரென பத்து மாதத்துக்கு முன்பு காலமானார். அவர் கடைசி காலத்தில் வரை தன்னை கட்சிக்காவும் சமூக பணிக்காவும் தன்னை அர்பணி த்தார். இவருக்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது.

சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். இறப்பதற்க்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீனுக்கு தனது குடும்பம் கஷ்டங்களை பற்றி விரிவாக கடிதம் எழுதி அதை கம்யூட்டர் சென்டரில் டைப் பண்ண கொடுத்து இருந்தார்.

இது அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு யாருக்கும் தெரியாது. அவர் இறந்த செய்தியை அறிந்த கம்யூட்டர் சென்டர் உரிமையாளர் அதை மாநில செயலாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயிடம் கொடுத்துள்ளார். அதை படித்து பார்த்த மில்லத் இஸ்மாயில் மனம் உருகி போய்விட்டார். பின்னர் அவருடைய இரங்கல் கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை கட்சி பார்த்து கொள்ளும் என்றும் , அந்த நிரந்தரமாக தங்குவதற்கு வீடு கட்டி தரப்படும் என்று அறிவித்து வீடு கட்டும் பணிகளை மாநில செயலாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயில் செய்து கொடுப்பார் என்று அறிவிக்கப்பட்து.

பின்னர் மாநில செயலாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் சுல்பிகார், முஹம்மது காசிம் ராஜாளி மற்றும் ஜமாஅத்நிர்வாகிகள் மற்றும் கொடை வள்ளல்கள் ஆகியோரிடம் வசூல் செய்து ரூ 20 லட்சத்துக்கு மேற்பட்ட செலவில் அவரது குடும்பத்துக்கு புதிய இல்லம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை அய்யம்பேட்டையில் நடை பெற்றது. புதிய இல்லத்தை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்து அதன் சாவியை அவரது மகனிடம் வழங்கப் பட்டது. பின்னர் அஞ்சுமன் திருமண மண்டபத்தில் ஜம்.ஜம். அல்ஹாஜ் எஸ்.எம். பதுருதீன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் புத்தகம் வெயீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் தலைமை வகித்தார். விழாவை அஞ்சுமன் பத்திமா பதர் பள்ளிவாசல் இமாம் மவ்லவி அப்துல் மாலிக் மன்பஃஈ கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.

மாநில செயலாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயில் அனைவரையும் வரவேற்று பேசினார்.மாநில பொதுச் செயலா ளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக் கர், மாநில பொருளாளர் எஸ்.எம்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் மவ்லவி ஷபீகுர் ரஹ்மான், மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், ஹஜ்ரத், காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் முஹம்மது தாஹா, குத்தலாம் லியாகத்அலி, எம்.எஸ்.எப். தேசிய துணைச் செயலாளர் புளியங்குடி ஆமீன், தேசிய கவுன்சில் உறுப்பினர் வி.எஸ். முஹம்மது பஜ்லுல்லா, ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னார்.மர்ஹூம் ஜம்.ஜம். அல்ஹாஜ் எஸ்.எம். பதுருதீன் நினைவு சிறப்பு மலரை அய்யம்பேட்டை நகரத் தலைவர் மற்றும் ஜமாஅத் நகர சபை தலைவர் சிம்லா ஹாஜி பி.ஏ. முஹம்மது நஜீப் வெளியிட முதல் பிரதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த முன்னோடி எம்.ஏ. குலாம் மைதீன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேசியதாவது :அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனு மாகிய எல்லாம் வல்ல ஏக இறைவன் திருப்பெயர் போற்றித் துவக்குகிறேன்...கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்களே! மரியாதைக்கு ரிய பெரியோர்களே! அருமைத் தாய்மார்களே! அன்புச் சகோதர - சகோதரிகளே! உங் கள் அனைவருக்கும் எனதன் பான வாழ்த்துக் களையும், ஸலாமையும் தெரிவித்துக் கொள்கிறேன், அஸ்ஸலாமு அலைக்கும்.

அய்யம்பேட்டை சக்கராப் பள்ளி - இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், ஜம்ஜம் ரியல் எஸ்டேட் நிறுவனமும் இணைந்து, இச்சிறப்பான விழாவை ஏற்பாடு செய்து, தற்போது இங்கே நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதில் என்னையும் அழைத்துப் பேச வைத்துள்ளீர்கள். இதற்காக முதலில் அய்யம்பேட்டை & மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகத்திற்கும், ஜம்ஜம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்ஜம் ரியல் எஸ்டேட்

ஜம்ஜம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மறைந்த அதிபர் பத்ருத்தீன் ஹாஜியார் அவர்களது முதலாமாண்டு நினைவேந்தல் விழா, மறைந்த அருமைச் சகோதரர் ‘ஆலிமான்’ ஜியாஉத்தீன் அவர்களுக்காக புதியதோர் இல்லத்தை எழுப்பி, அதை வழங்கக் கூடிய விழா, ஜம்ஜம் ஹாஜியார் அவர்களது சேவையை நினைவுகூரும் மலர் வெளியிட்டு விழா என மூன்று அம்சங்களை முற்படுத்தி நடத்தப்படும் விழாவாக இவ்விழா அமைந்திருக்கிறது. அப்பேர்பட்ட இவ்விழாவிற்கு வருகை தந்து உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சாளர்களுக்கும், சன்மார்க்க அறிஞர்களுக்கும், சமுதாயப் பெரியவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டைக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் நெருங்கிய தொடர்பு என்றென்றும் உண்டு. இங்கே அமர்ந்திருக்கும் குலாம் முகைதீன் ஹாஜியார், மறைந்த ஜம்ஜம் ஹாஜியார், மறைந்த எம்.டி.முஹம்மத் ஹுஸைன் ஹாஜியார், டாக்டர் ஜியாஉத்தீன் ஹாஜியார், மறைந்த முஹம்மத் ஸாலிஹ் அட்வகேட், ராஜா முஹம்மத் ஹாஜியார், மவ்லவீ ஜியாஉத்தீன் ஹஜ்ரத் என இவர்கள் அனைவரும் இந்த ஊரில் இருந்துகொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வழிகாட்டி, சமுதாயத்திற்கும் - இந்த ஊருக்கும் பெருமை சேர்த்த பெரியவர்கள்.

குலாம் முகைதீன் ஹாஜியார்

1942இல் காயிதே ஆஸம் முஹம்மத் அலி ஜின்னா அவர்கள் சென்னையில் பங்கேற்ற மாநாட்டில் நிதி கேட்டபோது, இங்கே இருக்கக் கூடிய குலாம் முகைதீன் ஹாஜியார் அவர்களும், ஜம்ஜம் ஹாஜியார் அவர்களும் முந்திக் கொண்டு சென்று தமது நிதியை தாராளமாக வழங்கினர் என்றால் அந்தப் பெருமை இந்த ஊரைச் சேரும்.1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் - சென்னை எஸ்.ஐ.இ.டீ. கல்லூரியில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள தமிழக மெங்கி லிருந்தும் பொதுமக்கள் பெருந்திரளாக வந்தனர். என்றாலும், எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு சிறப்பு ரயிலையே ஏற்பாடு செய்து, பன்னூற்றுக் கணக்கில் அம்மாநாட்டிற்கு வந்து குவிந்தது மட்டுமின்றி, பயணத்திலே தொழுகை நேரம் வந்தபோது, ஓடிக் கொண்டிருந்த ரயிலையே ஒரு நிலையத்தில் நிறுத்தி, கூட்டுத் தொழுகையை நடத்தி முடித்துவிட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்ற பெருமை இந்த மாவட்டத்தைச் சேரும். அதை வழிநடத்தியவர்கள் குலாம் முகைதீன் ஹாஜியார், பத்ருத்தீன் ஹாஜியார் ஆகியோர்.

சிவந்த கரங்கள்

ஆக, தாம் செய்த வணி கத்தின் மூலம் ஈட்டிய வரு மானத்தைக் கொண்டு, தம் குடும்பம், ஜமாஅத், ஊர், சமூகம், சமுதாயம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அனைத்திற்கும் அள்ளியள்ளிக் கொடுத்துச் சிவந்த கரங்களைக் கொண் டவர்கள் இவர்கள் என்பது வரலாறு. அந்த வரலாற்றுப் பதிவுகளெல்லாம் இத்தருணத்தில் என் நினைவலைகளில் வந்து சென்று கொண்டிருக்கின்றன. அவற்றுள் சிலவற்றையே நானும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.

அள்ளிக்கொடுத்த தனவந்தர் ஜியாஉத்தீன் ஹாஜி யார் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த தம்பிமாரான மில்லத் இஸ்மாஈல், குத்புத்தீன், அப்துல் மாலிக், அப்துஸ் ஸமத் என அனைவருமே - ஹாஜியார் அவர்கள் விட்டுச் சென்ற அரும்பெரும் பணிகளைத் தொட்டுத் தொடர்ந்து கொண்டிருக் கின்றனர். ஒரே குடும்பத்திலேயே தந்தை ஒரு கட்சி, மகன் ஒரு கட்சி, பேரன் ஒரு கட்சி என இருந்துகொண்டிருக்கும் இக்காலத்திலும், இந்த ஒட்டுமொத்த குடும்பமும் தன்னை இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் பின்னிப் பிணைத்திருக்கிறது என்றால் அது சாதாரணமானதல்ல.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு, அது இருக்க வேண்டியதன் அவசியம், அதன் மகத்துவம், முக்கியத்துவம் என அனைத்தையும் அவர்கள் நன்கு அறிந்துணர்ந்திருந்த காரணத்தால் தான் இவ்வாறு அவர்களால் இவ்வியக்கத்தோடு பின்னிப் பிணைந்திருக்க முடிகிறது.

ஜம்ஜம் ஹாஜியார்

ஜம்ஜம் ஹாஜியார் அவர்களது பண்போ அலாதியானது. தனிப்பட்ட முறையில் அவர் நேர்மை, ஒழுக்கம், தூய்மை என வாழ்ந்தவர். சமுதாயம் என்று வரும்போது உலமாக்களை கண்ணியப்படுத்தல், ஏழை - எளியோருக்கு உதவல் என வலது கை செய்வது இடது கைக்குத் தெரியாமல் அற்புதமான பல உதவிகளை தன் வாழ்நாளெல்லாம் செய்து வந்தவர். உதவி கோரி வருவோருக்கு ஒருபோதும் இல்லையென்று சொல்லாத அற்புதமான ஜீவன் அவர். அதற்காகத்தான் அவருக்கு இன்றளவும் பேரும், புகழும் நிலைத்து நிற்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பணியையும் அக்குடும்பத்தார் இவ்வுலகம் உள்ளளவும் தொய்வின்றித் தொடர வேண்டும். அவர்களது நிறுவனமான ஜம்ஜம், புனித மக்காவிலுள்ள ஜம்ஜம் கிணறு எப்படி உலக முடிவு நாள் வரை பெருமகத்துவமிக்கக் குடிநீரை வழங்கிக் கொண்டே இருக்குமோ அது போல, பெரும் வருமானத்தை ஈட்டிக் கொண்டும், அதைத் தேவை யுடையோருக்கு அள்ளியள்ளி வழங்கிக் கொண்டும் இருக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.இவர்களது சிறப்புகள், செய்த வணிகங்கள், ஈட்டிய பொருளாதாரத்தைக் கொண்டு வாரி வாரி வழங்கிய நிகழ்வுகள் என அனைத்தையுமே தங்களாலியன்ற அளவுக்கு இம்மலரில் பதிவு செய்திருக் கிறார்கள். அப்படிப்பட்ட இந்த மலர் இந்த ஊருக்கான வரலாற்றுப் பதிவாக இருக்கப் போகிறது.

வரலாற்றுப் பதிவுகள்

அய்யம்பேட்டையிலுள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், மண்ணறைகளிலெல்லாம் பல வரலாற்றுப் பதிவுகள் மறைந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து, பதிவு செய்ய வேண்டியது இந்த ஊர் மக்களின் கடமை; காலத்தின் கட்டாயம். அந்த வகையில், தம்பி மில்லத் இஸ்மாஈல் -வரலாற்றைப் பதிவு செய்வதன் மீது தான் கொண்டுள்ள ஆர்வ குணத்தைப் பயன்படுத்தி - இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும், சமுதாயத்திற்கும் அரும்பணிகளைச் செய்து வருவதைப் போல, இந்த ஊரின் வரலாற்றைப் பதிவு செய்வதற்கும் தனது பங்களிப்பை நிறைவாகச் செய்ய வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். பொதுவான வரலாறுகள் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்றாலும் இதுபோன்ற வட்டார வரலாறுகளைப் பதிவு செய்வதென்பது அண்மைக் காலமாகத்தான் ஒரு கலையாகப் பார்க்கப்படுகிறது.அந்த வகையில், இந்த ஊரில் இஸ்லாம் துவக்கமாக அடியெடுத்து வைத்த வரலாறு, இங்குள்ள மக்களின் குடும்பப் பாரம்பரியம், வணிகத் தொடர்புகள், திருமண உறவுகள், மாநில - தேசிய -சர்வதேச தொடர்புகள் என அனைத்தையும் ஆய்ந்தறிந்து பதிவு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். அதன் ஒரு பகுதி ஜம்ஜம் ஹாஜியார் போன்றோரால் ஏற்கனவே செய்யப் பட்டிருக்கிறது. என்றாலும், இந்த ஊரைத் தொடர்புபடுத்தியிருக்கும் அனைத்து வரலாற்றுப் பதிவுகளும் முறையாக வெளிக் கொணரப்பட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

‘ஆலிமான் ஜியாவுதீன்‘

இந்த விழாவையொட்டி வெளியிடப்பட்ட பிரசுரத் தில் - பல்வேறு அம்சங் களுக்காக உதவியோர் பெயர் பட்டியல் உள்ளது. ‘ஆலிமான்’ ஜியாஉத்தீன் வகைக்கு உதவி என்றும் உள்ளது. அது அவருக்குச் செய்யும் உதவியல்ல; மாறாக, நமக்கு நாமே செய்துகொள்ளும் உதவி. அவர் சாதாரணமானவரல்ல. இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர், அப்படி உழைத்து ஓய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக்கூட்டம், மாநாடு, பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் என அனைத்தையுமே - அதன் துவக்கம் தொட்டு பதிவு செய்வதைப் பண்பாகக் கொண்டிருந்தவர் அவர். எங்களுக்கு ஏதாவது வரலாற்று மேற்கோள் தேவைப்பட்டால் நாங்கள் நாடும் மூவர் ‘ஆலிமான்’ ஜியாஉத்தீன், இங்கே இருக்கும் தளபதி ஷஃபீக்குர் ரஹ்மான் ஆலிம், பத்ருத்தீன் ஹாஜியார் ஆகியோர்தான். வேறு யாரும் தமிழகத்தில் அப்படிப் பட்டோர் கிடையாது.

அந்தளவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கலைக்களஞ்சியமாக, வரலாற்றுப் பெட்டகமாக வாழ்ந்தவர்தான் ‘ஆலிமான்’ ஜியாஉத்தீன்.அவர் உரக்கப் பேசி நான் பார்த்ததேயில்லை. அமைதி யானவர். அனைவரோடும் அன்பாகவும், உள்ளத்தை ஊடுருவியும் பழகும் பண்பைப் பெற்றிருந்தவர்.

பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்; இனிமையானவர். கைகளில் காசில்லாவிட்டாலும், மனதில் மாசில்லாமல் வாழ்ந்த மாமனிதர்தான் தம்பி ‘ஆலிமான்’ ஜியாஉத்தீன்.அவரது வாழ்க்கை முழுக்க வறுமையும், செழுமையும் மாறி மாறி வந்து சென்றிருக்கிறது. அவரது வாழ்வின் இறுதிக்காலம் வறுமையில் கழிந்திருக்கிறது. அப்பேர்பட்ட அர்ப்பணிப்புணர்வு கொண்ட ‘ஆலிமான்’ ஜியாஉத்தீன் உடைய குடும்பத்தார் நிம்மதியாக வசிக்க ஒரு வீடு கட்டிக் கொடுக்கலாமே என நான் இங்குள்ள முஸ்லிம் லீக் அங்கத்தினரை வேண்டிக் கொண்டேன். உடனடியாக இசைவு தெரிவித்தனர். அது வெறும் வாய்ச் சொல்லாக நின்றுவிடாமல், இன்று அழகிய வீடு கட்டிக் கொடுக்கப் பட்டிருக்கிறது. தகுந்த சமயத்தில் சிறந்த உதவியைச் செய்திருக்கிறீர்கள். இது மாபெரும் பேருதவி. இதற்காக - இதைச் செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவான நற்பேறுகளை ஈருலகிலும் வழங்கியருளப் பிரார்த்திக்கிறேன்.

இறையில்லம்

இறையில்லம் கட்டிக் கொடுப்போருக்கு இறைவன் மறுமையில் மாளிகை வழங்குவான் என உலமாக்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தக் குடும்பத்திற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் - தன்னலம் பாராமல் அழகிய வீட்டைக் கட்டியளித்த நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் சுவனத்தில் மாளிகையைக் கொடுக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். ஒன்றுக்குப் பத்தாக, பத்துக்கு நூறாக, பன்மடங்காக அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் வழங்கி யருள்வானாக. நீங்களும் இதற்காக உதவிய நன்மக்களுக்காக துஆ செய்யுங்கள்.இந்த வீடு 1500 சதுர அடியில் அமைந்திருக்கிறது. சாதாரணமாக 30 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும். ஆனால் 20 லட்சம் ரூபாய் செலவிற்குள்ளேயே கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தம்பி மில்லத் இஸ்மாஈல் செய்திருக்கிறார் என்றால், கட்டுமானப் பணிகளை உங்கள் மாவட்டப் பொருளாளர் ஜுல்ஃபிகார், தம்பி ஷேக் ஆகிய இருவர்தான் முன்னின்று திறம்பட செய்து முடித்திருக்கிறீர்கள். ஏனோ தானோ என்று செய்திடாமல் - உங்கள் சொந்த வீட்டை எப்படிக் கட்டுவீர்களோ அப்படிக் கட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். இதற்காக உங்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

மஹல்லா ஜமாஅத்

ஒரு மஹல்லா ஜமாஅத் என்பது வெறுமனே பள்ளி வாசலை நிர்வகிப்பது, இமாம் - முஅத்தின்களுக்கு மாத ஊதியம் வழங்குவது, திருமணத்தைப் பதிவு செய்வது, மரணமடைந்தவர்களை மையவாடியில் அடக்குவது என்பனவற்றோடு நின்றுவிடக் கூடாது. 1988 - 89 தொடக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாம் வலியுறுத்திக் கொண்டிருப்பதெல்லாம் - ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் பைத்துல் மால் அமைப்பை நிறுவி, அந்தந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் பொருளாதார நிலையை ஆய்ந்தறிந்து, தேவையும் - தகுதியும் உடையோருக்குச் சரியாகத் திட்டமிட்டு வழங்க வேண்டும் என்பதே. அவர்கள் - தம் தேவைகளுக்காக வெளியே யாரிடமும் கையேந்தி விடாமல் காத்திட வேண்டியது ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத் நிர்வாகத்தின் மாபெரும் கடமையாகும்.

சிறப்புப் பெயர்

இந்த ஊரில் ஒவ்வொரு குடும்பத்தையும் அடை யாளப்படுத்தும் சிறப்புப் பெயர்கள் உள்ளன. ஓர் ஊரில் ஒரு சில குடும்பங்கள் வேண்டுமானால் அவ்வாறு பட்டப் பெயரால் அடையாளப்படுத்தப்படுமே தவிர அந்த ஊரிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் அப்படிப் பெயர் இருக்காது. ஆனால், இந்த ஊரில் பெரும்பாலும் அனைத்துக் குடும்பங்களும் சிறப்புப் பட்டப் பெயர்களைக் கொண்டி ருக்கிறது. இப்பழக்கம் தமிழகத்தில் - முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களில் பள்ளப்பட்டி, காயல்பட்டினம் போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் உள்ளது. இந்தப் பட்டப் பெயர்கள் எல்லாம் அவர்களது பூர்விகம், வணிகத் தொடர்பு, திருமண உறவு என எதையாவது சார்ந்தே இருக்கும்.

நற்கூலி

ஆக, இந்த ஜமாஅத்தின் சார்பிலும், இந்த ஊரிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகத்தின் சார்பிலும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்து நற்காரியங்களையும் கருணையுள்ள அல்லாஹ் தனதருளால் ஏற்றுக்கொண்டு, அதற்கான நற்கூலியை உங்கள் யாவருக்கும் ஈருலகிலும் நிறைவாகத் தந்தருள்வானாக எனப் பிரார்த்தித்து எனதுரை யை நிறைவு செய்கிறேன், நன்றி.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

விழாவில் பாபநாசம் ஆர்.டி.பி. கல்லூரி செயலாளர் ஹாஜி தாவூது பாட்ஷா, மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், ஊடகத்துறை ஓருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட ஊடகத்துறை மக்கி பைசல் , மாவட்ட எம்.எஸ்.எப். தலைவர் அபுதாஹிர், வலவன் அக்பர், வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது காசிம் ராஜாளி, வடக்கு மாவட்ட பொருளாளர் ஜீல்பிகார் அஹமது, ஜமாஅத் பொது சபை செயலாளர் அலியார் முஹம்மது ஆரிப், பொருளாளர் ராஜா முஹம்மது, அப்துல் மாலிக், முஹம்மது சித்தீக், யூசுப் ராஜா, குத்புதீன், கமால் பாட்சா, முஹம்மது ரபீக், நூர் முஹம்மது, அய்யம்பேட்டை நகரத் தலைவர் ஏ. நூர் முஹம்மது, துணைத் தலைவர் ஆர். நூர் முஹம்மது, திருச்சி மணிச்சடர் செய்தியாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது, அஞ்சுமன் பாத்திமா பதர் பள்ளிவாசல் செயலாளர் எஸ்.பி.ஜே. முபராக், இமாம் பாசாஜான், மடார்ன் பள்ளி தலைவர் ஆவூர் முஹம்மது இஸ்மாயில், மாநில எஸ்.டி.யூ. பொருளாளர் பொதகுடி முஹம்மது பைசல், அய்யம் பேட்டை நகர செயலாளர் ஹாஜா மைதீன், மற்றும் அனைத்து நிர்வாகிகள் ஜமாஅத் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள். நிஙழ்ச்சிகளை அஞ்சுமன் திரும ணம் மண்டப செயலாளர் சுலைமான் பாட்ஷா தொகுத்து வழங்கினார். இஸ்லாமிய கீதம் பாடலை தலைமை நிலைய பாடகர் ரியாத் காயிதே மில்லத் பேரவை நிர்வாகி பக்கீர் மைதீன் பாடினார். நகர பொருளாளர் கே.ஏ. அப்துல் நசீர் நன்றி கூறினார். இறுதியில் ஜாமி ஆ மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி பி.எம். ஜியாவுதீன் அஹமது சிறப்பு து ஆ ஓதினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்