Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, November 24, 2007
கஷ்மீர் சட்டசபையை கலைத்தது ஜனநாயக விரோதச் செயல் கஜா புயல் நிவாரண பணிகள் தொய்வடைந்திருப்பதற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது முக்கிய காரணம் தமிழக அரசு நிவாரணத்தொகையை சரியான முறையில் கணக்கிட்டு உடனே வழங்க வேண்டும் மத்திய அரசு இடைக்கால நிதியை காலதாமதம் செய்யாமல் அளிக்க வேண்டும் தென்காசி செய்தியாளர் சந்திப்பில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி


தென்காசி, நவ. 24- கஷ்மீர் சட்டசபையை கலைத்தது ஜனநாயக விரோத செயல் எனவும், கஜா புயல் நிவாரண பணிகள் தொய்வடைந்திருப்பதற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது முக்கிய காரணம் என்றும், தமிழக அரசு நிவாரணத் தொகையை சரியான முறையில் கணக்கிட்டு உடனே வழங்க வேண்டும் எனவும் தென்காசியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் கூட்டம் தென்காசி மவுண்ட் ரோடு வி.டி.எஸ்.ஆர் மஹாலில் 23-11-2018 அன்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் மற்றும் மாநில நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண் டனர்.

பின்னர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிரு பர்களுக்கு அளித்த பேட்டி:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவர் அல்ஹாஜ் துராப்ஷா அவர்கள், """"தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை வரலாறு"" எனும் நூலை எழுதியிருக்கிறார். அந்நூலின் வெளியீட்டு விழா 23-11-2018 மாலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை நடைபெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்று முடிந்துள்ளது. இக் கூட்டத்தில் மாநில நிர்வாகி கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஊடக நண்பர்கள்

கூட்டம் முடிந்ததோடு, ஊடக நண்பர்களாகிய உங் களை நான் இந்த இரவுப் பொ ழுதில் சந்திக்கிறேன். உறங்க வேண்டிய நேரத்தில் எங்கள் வருகைக்காகக் காத்திருந்து செய்தி சேகரிக்கும் ஊடக நண்பர்களாகிய உங்களை வருக்கும் முதற்கண் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை ஒத்தக்கடை மைதானம்

இன்றைய மாநில நிர்வாகி கள் கூட்டத்தில், முக்கியமான 3 அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப் பட்டுள்ளது. (1) இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாட்டை, வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமையன்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளது.

ராகுல் - குலாம் நபி ஆசாத் - ஸ்டாலின்

இம்மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர்கள் வருகை தருகின்றனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆஸாத் போன்றோரையும் அழைக்கும் திட்டமுள்ளது. தமிழத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க .ஸ்டாலின் அவர்களை மாநாட்டில் பங்கேற்க நேரில் அழைத்தோம். அதில் பங்கேற்று நிறைவுறையாற்ற அவர் இசைந்துள்ளார் என்ற தகவலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் அமர்வு

இம்மாநில மாநாட்டின் முக்கிய அமர்வாக அரசியல் அமர்வு நடைபெறவுள்ளது. நம் இந்தியாவை ஆளும் மத்திய பாஜக அரசும், தமி ழகத்தை ஆளும் அதிமுக அரசும் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து, மக்களின் உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் செயல்பட்டு வருவது குறித்து பொது மக்களுக்கு விளக்கி, இவ்விரு ஆட்சிகளும் அகற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப் படவுள்ளது.

சமூக நீதி

நாட்டிலும் -மாநிலத்திலும் ஜனநாயகம், சமூக நீதி, சமய சார்பின்மை, ஃபாஸிஸ பயங் கரவாதப் போக்குக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றைக் குறிக்கோளாய்க் கொண்ட ஓர் அரசியல் கூட்டமைப்பு உருவாக வேண்டும். மாநில சுயாட்சியையும், தேசிய கூட்டாட்சித் தத்துவத்தையும் மதிக்கும் தேசியக் கட்சி தலைமையிலான கூட் டணிதான் மத்தியில் ஆட்சியில் அமர்த்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக உருவாகி வரும் ஜனநாயக - சமய சார்பற்ற -சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்றும் அரசியல் கட்சி கள் அனைத்தையும் ஒன்று படுத்தும் முயற்சியை, தமிழகத் தின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் எடுத்து வருகிறார். அந்த முயற்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவளித்து, உடன் நின்று ஒத்துழைக்கும் என்பதோடு, தேசிய அளவிலும் இதற்கான முயற்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வருகிறது, அதில் நிச்சயம் வெற்றி பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஜனநாயகத்தை மதிக்கும் அரசு ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான சாத்தியக் கூறுகள் தெளிவாகவே தென்படுகின்றன. அதற்கான அஸ்திவாரம் சிறந்த முறையில் போடப்பட்டு வருகிறது.

கஜா புயல்

தமிழகத்தில், அண்மையில் ‘கஜா’ புயல், கரும்புக் காட்டில் யானை நுழைந்து துவம்சம் செய்வது போல கோரத் தாண்டவமாடிச் சென்று விட்டது. அதன் பாதிப்புகள் பெரிய அளவில் உள்ளதை அறிந்து உள்ளபடியே நாங்கள் மிகவும் மன வேதனை யடைந்துள்ளோம். கடற்கரை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களும், திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளும் பேரிழப்பைச் சந்தித்துள்ளன. இந்த ‘கஜா’ புயல் வருவ தற்கு முன் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளில் காட்டிய ஆர் வம் பாராட்டத்தக்க அள வில் இருந்ததாகவும், அதே நேரத்தில் புயல் தாக்கிய பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் தொடர்பில் மிகவும் மெத்தனமாக இருப்பது வேதனையளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரி வித்துள்ளனர். இன்றளவும் பல மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. சாலை வசதி, குடிநீர் பகிர்வு சீராக வில்லை. அம்மக்கள் தங்கள் கடைகளைத் திறக்க வில்லை. படகுகள் சேதம்

கடற்கரையோர ஊர் களான மல்லிப்பட்டினம், ஜெக தாப் பட்டினம், நாகப் பட்டினம், வேதாரண்யம் போன்ற பகுதிகளில் பல்லா யிரக்கணக்கான படகுகள் பெருஞ்சேதத்தைச் சந்தித் துள்ளன. அதுபோல வாழைத் தோட்டங்கள், நெற்பயிர்கள் எல்லாம் அடியோடு சாய்க்கப் பட்டு விட்டன.

தென்னை மரத்தோப்புகள்

எல்லாவற்றுக்கும் மேலாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து - பல்லாண்டுகளாக பல்லா யிரக்கணக்கான குடும்

பங்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்த தென்னை மரத் தோப்புகளெல்லாம் வேரோடு சாய்ந்துள்ளது பெரும் வேதனையளிப்பதாக உள்ளது. சுமார் 40 நாட்களுக்கு ஒருமுறை மகசூல் தரும் தென்னை மரங்கள் - பல்லாண்டு காலமாகத் தந்துகொண்டிருந்த நிலையில் தற்போது வேரோடு சாய்ந்துவிட்டதால், அம்மக்களின் பரிதாப நிலை எங்களை மிகவும் கவலை கொள்ளச் செய்கிறது.

இத்தனை இழப்புகளையும் சரிசெய்வதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள தொகை மிகவும் குறைவு என அப்பகுதி மக்கள் குறைபட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் தென்னை மரங்கள் வெட்டப்பட்டால் ஐம்பராயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப் படுவதாகவும், ஆனால் ‘கஜா’ புயலில் சாய்க் கப்பட்டுள்ள மரங்களுள் ஒரு தென்னை மரத்திற்கு 1,100 ரூபாய் மட்டுமே அறிவிக் கப்பட்டுள்ளதும் வியப் பாக உள்ளதாக மக்கள் கொதிப் புடன் தெரிவித் திருக்கின்றனர்.

மக்கள் கொதிப்பு

மக்களின் கொதிப்பை உணர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள், கரும்புத் தோட் டங்கள், வாழைத் தோட் டங்கள், குடிசை - ஓட்டு வீடு களைக் கொண்டவர்கள், கடை களை வைத்திருந்தோர், மீனவர்கள் என அனை வருக்கும் அவர்களின் பாதிப்பிற்கேற்ற சரியான நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவித்து, மெத்தனம் காட்டாமல் அதை உடனடியாக வழங் கிட வேண்டும் என்றும், நிவா ரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்திச் செய்ய வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். காலத்தால் செய்த உதவி

""""காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாளப் பெரிது"" என வள்ளுவர் சொல்வதற்கேற்ப, பாதிப்பு களைக் கண்ட அம்மக்களுக்குச் சரியான நேரத்தில் உதவிகள் சென்று சேர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். தினையளவு செய்தாலும் அதைப் பனையளவாக மக்கள் போற்ற வேண்டுமானால், அது உரிய காலத்தில் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளைச் செய்யத்தான் செய்கிறது என்றாலும், அதை வேகப்படுத்தி மக்களின் நன் மதிப்பைப் பெற வேண்டும். தவறினால், அவர்களின் கொதிப்பு அனைவரையுமே பாதிக்கும் என்பதையே நான் இங்கே தெரிவிக்க விரும்பு கிறேன்.

கிராமப்புற மக்களைப் பொருத்த வரை, அவர்களுக்குத் தாங்கவியலாத பாதிப்பு ஏற்பட் டால் - அவர்கள் அரசையோ, அதிகாரி களையோ, அமைச்சர் களையோ மதிக்க மாட் டார்கள் என்பது மட்டு மல்ல; சில தவறான நடவ டிக் கைகளிலும் இறங்கிவிடு வார்கள். பாவம்! அவர்களது பாதிப்பு அவர் களை அந்த நிலையில் ஆக்கி விடும்.

ரூ. 15 ஆயிரம் கோடி

நிவாரணப் பணிகளுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப் படுவதாக முதல மைச்சர் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறார். அதை இதர அரசியல் கட்சிகளும் வலியுறுத்திக் கொண் டிருக்கின்றன. நாங்களும் அதை வலியுறுத்துகிறோம். ஆனால், மத்திய அரசைப் பொருத்த வரை தமிழ்நாட்டிற்கு பாதிப்பு என்றால் உதவுவதில் மிகவும் மந்தமாகவே செயல்படுவதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஏற்கனவே நிகழ்ந்த வெள்ளப்பாதிப்பின்போது மிகவும் காலந்தாழ்த்தியே மத்திய அரசின் உதவிகள் வந்து சேர்ந்தன.

கஜானா காலி

தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவே அதை ஆளும் கட்சியும், அனைத்து எதிர்க்கட்சிகளும் - ஏன் மத்திய அரசும் சொல் லிக் கொண்டிருக்கிறது. எனவே, காலியான கஜானா விலிருந்து எதையும் எடுத் துப் பணி செய்துவிட முடி யாது. எனவே, முந்தைய வெள்ளப் பாதிப்பின்போது மத்திய அரசு மெத்தனமாக இருந்ததைப் போன்று இருந்துவிடாமல், இந்த ‘கஜா’ புயலுக்கான நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடியை விரைவாக அறிவித்து, முன்தொகையாக தமிழக அரசு கேட்கும் தொகையை உடனடியாக வழங்கி னால் மிகவும் பயனுள் ளதாக இருக்கும் என்பதை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர்

தமிழகத்தைப் பொருத்த வரை, கலைஞர் - ஜெயலலிதா போல ஆளுமையுடன் பேசிப் பெறும் நிலையில் இன்றுள்ள அரசு இல்லை என்பதால், அதன் குரலும் பலவீனமாகவே உள்ளது. 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏராளமான மாநிலங்களவை உறுப் பினர்களைக் கொண்டிருக்கும் அதிமுக சார்பில் அந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாய் நின்று ஒருமித்துக் கேட்டாலே காரியங்கள் கைகூடும். எது எதற்கோ தர்ணா செய்யக்கூடிய அவர்கள், இந்தப் புயல் நிவாரணத்திற்காக நாடாளுமன்றத்தில் தர்ணா செய்திருக்க வேண்டும்; பிரதமர் வீட்டு வாசலில் நின் றிருக்க வேண்டும். என்றா லும், மத்திய அரசிடம் வலியுறுத்திக் கேட்டுப் பெறும் தகுதியில் இன்றைய தமிழக அரசு இல்லை. இதனால் மாநிலத்தின் உரிமைகளும், நலன்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லிக்கொள்வது என்னவெனில், தமிழகம் என்றாலே ஏளனமாகப் பார்க்கும் மத்திய அரசின் இந்தப் போக்கு உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப் பட்ட மக்களுக்கு அவர் களின் பாதிப்பிற்கேற்ற நிவார ணங்கள் முறையாகவும், உடனடியாகவும் வழங்கப்பட வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழகம்

தமிழகத்திலிருந்து எல்லா அரசியல் கட்சிகளும் - ‘கஜா’ புயல் நிவாரணப் பணிகளுக்கான தம் பங்காக தொகைகளையும், பொருட் களையும் அறிவித்து வழங்கி வருகின்றன. எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தன் பங்காக 4 - 5 கோடி ரூபாய்களையும், பல கோடி மதிப்புள்ள பொருட்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறது.

நிவாரணப்பணிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை, அதன் அனைத்துக் கிளைகளி லிருந்தும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தந்தப் பகுதி களில் மேற்கொள்ளப் பட்டு வரும் நிவாரணப் பணிகளில் இணைந்தும், தனித்துவம் பல லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எங்கள் கட்சியின் Ý´¶¬க்ஷி ஷாஜஹான், மில்லத் இஸ்மாதுல் உள்ளிட்ட பெருமக்கள் சென்னையில் தொழிலதிபர்களையும், பிரமுகர்களையும் சந்தித்து, நிவாரண நிதிகளை வசூலித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகின் றனர்.

ஐக்கிய அரபு அமீரகம்

முற்றிலும் பாதிக்கப்பட்ட குடிசைகள் பலவற்றுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்வதாக வாக்களிக்கப் பட்டுள்ளது. ஏராள மான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 500 ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களை உள்ளடக்கிய 4 ஆயிரம் உண வுப் பொதிகள் கொண்டு சேர்க் கப்படவுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்கள் ஏற்பாட்டில் நாளை ஒரு கன்டெய்னர் நிறைய உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு வரவுள்ளது. அவற்றையும் முறையாகப் பிரித்துப் பகுத்து, சமய வேறுபாடின்றி - பாதிக் கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும் சேர்ப்பி க்கவுள்ளோம். இதற்காக நானும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர், முதன்மைத் துணைத் தலைவர், மாநில துணைத் தலைவர்கள், செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் என அனை வரும் சென்று, கள ஆய்வு செய்து, எங்களது உதவிகளை வழங்கவிருக் கிறோம். கீழக்கரை

பொதுவாகவே, இது போன்ற நிவாரணப் பணிக ளில் சமய வேறுபாடு களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் பார்க்காது. அதனடிப் படையில், கீழக் கரையிலிருந்து சுமார் 10 டன் அளவுக்கு நிவா ரணப் பொருட்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்குச் சேர்ப்பிக்கப் பட்டுள்ளன. அவர்களெல்லாம் முஸ்லி மல்லாத பிற சமய மக்கள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு பகுதியில் மக்கள் அவதிக்குள்ளாகும்போது, பிற பகுதிகளிலிருந்து தன் னார்வத்துடன் சென்று அவர்களுக்கு உதவுவது என்பது தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது மட்டுமல்ல; இது தொடர்பில் உலக மக்களுக்கே எடுத்துக்காட்டாகத் தமிழக மக்கள் திகழ்கின்றனர். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று சொன்ன வள்ளலாரும், வள்ளுவரும், சொன்னது போல தமிழக மக்களின் எண்ணங்கள் அமைந்திருப்பது உண்மையில் மெச்சத்தக்கது. அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏராளமான பணிகள் செய்யப்பட்டு வருகிற போதி லும், எங்கள் அனைத்து மாவட்டக் கிளைகளுக்கும் தலைமையிலிருந்து சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். அந்தந்தப் பகுதிகளிலுள்ள மஹல்லா ஜமாஅத்துகளுடன் இணைந்து நிவாரணப் பொருட்களையும், நிதியையும் சேகரித்து - பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். இவையனைத்தும் துவக்கப் பணிகள் மட்டுமே. இயன்றளவுக்குத் தொடர்ந்து செய்யப்படும் என்பதையும் அறியத் தருகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் ஒரே இடத்திலிருந்து அனைத்தையும் செய்வதில்லை என்பதால் - இவ்வளவு செய்துள்ளோம் எனத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்ல இயலாது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் - தத்தம் பகுதிகளில் பெறும் நிவாரணப் பொருட்களையும், நிதிகளையும் கொண்டு - தம்மிடம் வைத்துள்ள பாதிக்கப்பட்டோர் பட்டிய லின் படி ஆங்காங்கே வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை ஒரு கட்சிதான் கொடுக்க வேண்டும்; ஓர் அமைப்புதான் செய்ய வேண்டும் என யாரும் இருந்து விடுவதில்லை; அப்படி இருக்கவும் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கெங்கு நிவாரண நிதி களும், பொருட்களும் சேக ரிக்கப் படுகிறதோ அவை யனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அனைத்து அங்கத்தினரும், தமிழகத்தின் அனைத்துப் பொது மக்களும் தாராள மனதுடன் தங்கள் பங்களிப்புகளை நிறைவாக வழங்கி உதவிட வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல்கள்

தமிழகத்தில் என்ன நடக்கி றது என்றே தெரியவில்லை. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் செய்யப் படவில்லை. நகர்மன்றத் தலைவர், ஊராட்சித் தலைவர் கள், உறுப்பினர்கள் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்திருந்தால், நிவாரணப் பணிகள் இன்னும் வேகமாக நடந்திருக்கும். இப்போது ஏற்பட்டுள்ளது போல தொய்வுகள் ஏற்பட்டி ருக்காது. தன்னைப் பாதுகாப்பதற்காக வேனும் அவர்கள் கைகளி லிருந்து பணத்தைச் செல வழித்துப் பணிகளைச் செய்து, பின்பு அரசிடம் கேட்டுப் பெற்றிருப்பர். ஆனால் இப்போதோ யாரும் இல்லாததால், அவையெதுவும் நடக்கவில்லை. அதிகாரிகள் என்ன செய்ய முடியும்? எனவே, இந்த ‘கஜா’ புயலில் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டும் நிவாரணப் பணிகள் தொய் வடைந்திருப்பதற்கு உள்ளாட் சித் தேர்தல் நடத்தாதது மிக முக்கியக் காரணம் என நான் குற்றஞ்சாட்டுகிறேன்.

20 சட்டமன்ற தொகுதிகள்

20 சட்டமன்றத் தொகுதி களுக்கு இடைத்தேர்தல் - உறுப்பினர் இல்லாமல் போன ஆறு மாதத்திற்குள்ளாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் சிலரது வழக்குகள் இன்னும் சில நாட்களில் முடிவுற இருப்பதால், அதுவரை காத்தி ருப்பது போலத் தெரிகிறது. எதையாவது காரணங்கூறி, இந்த இடைத் தேர்தலை 2019 பாராளுமன்றத் தேர்தல் வரை தள்ளிப்போட்டு விடுவார் களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கஷ்மீர் மாநிலம்

கஷ்மீர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டசபையை, மத்திய அரசு ஆளுநரைக் கொண்டு கலைத்திருக்கிறது. இது ஜனநாயக விரோதமான செயல். சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பாரதீய ஜனதா என அனைத்தும் தனித்தனியாகவே போட்டியிட்டன. ஒருவரை யொருவர் நிந்தித்துக் கொண்டு மக்களிடம் வாக்கு களைப் பெற்று, அனைத் துக் கட்சிகளும் சில பல இடங்களைப் பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை அமையாத நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. கர்நாடகத்திலும் இதே கூத்துதான் நடந்தது.

கஷ்மீரில் தற்போது அக்கூட்டணி முறிந்துள்ளது. இதனையடுத்து, மக்கள் ஜனநாயகக் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கப் போவதாகவும், அழைப்பு விடுக்குமாறும் ஆளுநரிடம் அவர்கள் கேட்டுள்ள நிலையில் இந்த ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளது. இதை குதிரை பேரம் என பாஜக சொல்கிறது. அப்படியானால், தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பாஜகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் செய்துகொண்டது என்ன?

ஆக, தன்னோடு கூட்டணி வைத்தால் அல்லது தங்களை ஆதரித்தால் ஆட்சிக்கு வழி விடுவதும், இல்லையெனில் ஆட்சியைக் கலைப்பதும் சிறுபிள்ளைத்தனம். இந்தச் சிறுபிள்ளைத்தனத்தை பாஜக தொடர்ந்து செய்து, தனது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தி வருகிறது. ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து அவர்கள் நீதிமன் றத்தை நாடுவர். நீதிமன்றம் இந்த முடிவைச் செல்லாது என அறிவிக்கும். அப்போது பிரதமர் தன் முகத்தில் கரியைப் பூசிக்கொள்வார்.

எதேச்சதிகாரம்

இந்த நாட்டில் எதேச்சா திகாரமான போக்குகளே நடைபெற்றுக் கொண்டி ருக்கிறன என்பதற்கான அடை யாளமே இது. தமிழகத்திலும் -மத்திய அரசைப் பின்பற்றி - மக்கள் சொல்வதென்ன? எதிர்க் கட்சிகள் சொல்வதென்ன? மக்களின் உணர்வுகள் என்ன என எதைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல், தான் நினைத்ததைச் செய்து முடிக்கும் - சண்டிக்குதிரை போன்ற சர்வாதிகாரப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இதற்கெல்லாம் தீர்வாக, இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டு, 20 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் வென்றால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும். இருக்கும் ஆட்சி கலையும். புதிய ஆட்சி மலரும். அதன் மூலம் மாநிலத்தில் நல்லது நடக்கும். மக்கள் அந்த மாற்றத்தைக் கொண்டு வருவர் என நாங்களும் நம்புகிறோம்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்