Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, December 4, 2007
மேகதாதுவில் அணை கட்டினால் தஞ்சை தரணி மட்டுமல்ல தமிழ்நாடும் பாலைவனமாகக்கூடிய நிலை உருவாகும் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


திருச்சி, டிச. 04- கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய கோரி திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று 04-12-2018 காலை 10 மணிக்கு திமுக, தோழமை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது:-

காவேரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு இங்கே பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு முதலில் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே திரள்வது மட்டுமல்ல தமிழகத்திலே உள்ள பலகோடி மக்களையெல்லாம் ஓர் அணியிலே திரட்டுகிற ஒப்பற்ற தலைவரான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிற பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள்.

கோழிக்கோடு மாநாடு

நேற்றைக்கு முந்திய தினம் கேரள கோழிக்கோட்டிலே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடற்கரையில் பல லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாட்டிலே அருமை சகோதரர் திருச்சி சிவா அவர்களும், நானும் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு கிட்டியது. அந்த கடல் அலை போல் திரண்ட மக்கள் கூட்டத்திலே நான் ஒன்றை சொன்னேன். தமிழகத்திலே அரசியல் ஆற்றல், அரசியல் ஆளுமை, அரசியலில் நேர்மை, அரசி யலில் தூய்மை, அரசியலில் கண்ணியம், கட்டுப்பாடு, ஒற்றுமை, அரசியலிலே சாண க்கியம், அரசியலிலே சாதுர்யம், அரசியலிலே சமயோஜிதம், அரசியலிலே சாதனை, அரசியலில் உருவாக்கக்கூடிய சரித்திரம் இவை அனைத்துக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

கலைஞரின் மறுஉருவம்

மு.க ஸ்டாலின்

அந்த கலைஞருடைய மறு உருவமாக இருப்பவர் எங்களது தமிழ்நாட்டை சேர்ந்த தங்கக்கட்டி என்று நாங்கள் வர்ணிக்கிற தளபதி மு.க ஸ்டாலின் என்று நான் சொன்னேன். அப்படி தமிழகத்திற்கு தலைமையேற்று வழி நடத்தக்கூடிய அற்புத மான தளபதியின் கீழ் ஆர்ப் பாட்டம் இங்கே நிகழ்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திலே தமிழகத்திலே உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் அத் தனையும் ஒன்று சேர்ந்து உங்களையெல்லாம் இங்கே அழைத்து இந்த ஆர்ப் பாட்டத்திலே பங்கேற்க வைத்திருக்கிறார்கள். இங்கே கோஷங்கள், முழக்கங்கள் எழுப்ப இருக்கிறார்கள்.

காவிரி நதிநீர் ஆணையம்

நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒன்றை நான் கேட்கிறேன். இந்த நாட்டிலே தமிழ்நாடு மற்ற மாநிலங்களைப் போல ஒரு மாநிலம் தானே. இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை காவிரி பிரச்சினையாக கொண்டு அதனை தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் மூலமாக உருவாக்கப்பட்ட காவேரி நதிநீர் ஆணையம் என்று வைத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம்

அதிலே சொன்னார்கள் 15 ஆண்டு காலத்திற்கு எந்த விதமான மாற்றத்தையும் இந்த உச்சநீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பிலிருந்து யாரும் அது தமிழ்நாடாக இருந்தாலும், கர்நாடகவாக இருந்தாலும் மத்திய அரசாக இருந்தாலும் யாரும் இந்த தீர்ப்பில் குறுக்கிட முடியாது. இந்த தீர்ப்பில் 15 ஆண்டு காலத்திற்கு எவ்விதமான மாற்றமும் இல்லாமல் செல்ல வேண்டும். அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

மேகதாது

அந்த தீர்ப்பை ஏற்றுத்தான் தீர்ப்பாயத்துக்கு பதிலாக வந்த ஆணையத்தையும் தமிழ்நாட்டிலே உள்ள தளபதி தலைமையிலான இந்த கூட்டணி கட்சிகள் ஏற்றன. ஆனால், இப்பொழுது மேகதாது என்று ஆடு தாண்டும் பாலம் என்று சொல் கிறார்களே அப்படிப்பட்ட ஆடு தாண்டும் பாலமாக இருக்கக்கூடிய காவேரி கரையில் அந்த காவிரியை தடுத்து அணையை கட்டி தங்களுக்கென்று அணைகளை கட்டி நீரை தேக்கிய கர்நாடக அரசு அதையோடு இதையும் சேர்த்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு முயற்சி மேற்கொள்கிற போது அந்த முயற்சிக்கு அங்கீகாரம் பெறக்கூடிய அளவிற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். பர்மிஷன் கேட்கிறார்கள். பர்மிஷன் கேட்டால் மத்திய அரசு நியாயமுள்ள அரசு நடு நியாயமாக விளங்கக்கூடிய நடுவண் அரசு நீதியை நிலை நிறுத்தக்கூடிய அரசு எல்லா மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

மத்திய அரசு

15 ஆண்டுகளுக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி எந்த மாற்றமும் செய்ய கூடாது. இந்த ஆணையின்படி இதிலே நீங்கள் அணை கட்ட வேண்டும் என்று சொன்னால் ஆணையத் திடம் போங்கள். நீங்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து அவர்கள் அனைத்து மாநிலங்களுடைய ஒப்புதலை பெற்று உங்களுக்கு பர்மிஷன் கொடுத்தால் அதற்கு பிறகு நீங்கள் யோசிக்கலாம் என்று சொல்லியிருக்க வேண்டும். அது தான் அறிவுள்ள, ஞானமுள்ள, நியாயத்தை நிலைநிறுத்தக்கூடிய மத்திய அரசினுடைய நிலைபாடாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்திருப்பது என்னவென்றால் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு, உடனடியாக அணை கட்டுகிற வரைபடத்திற்கு பர்மிஷன் தருகிறது. இப்பொழுது தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு போகிறார்கள். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறன். உச்சநீதிமன்றத்திற்கு முன்பு தீர்ப்பாயத்தை எதிர்த்து போன போது ஸ்கீம் என்றார்கள். ஸ்கீம் என்று சொன்னபொழுது What is mean by Scheme என்று திரும்ப உச்சநீதிமன்றத்திற்கு போனார்கள். அதே பாலிசியில் இப்போது பர்மிஷன் கொடுத்திருப்பது What is meaning of permission என்று உச்சநீதிமன்றத்திற்கு போய் கேட்கக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டு உரிமை

ஆக உச்சநீதிமன்றத்திலே இப்பொழுது இழுத்தடிக்கக் கூடிய காரியத்தை தமிழ்நாட்டு உரிமையை காலிலே போட்டு மிதித்து மதிக்காத ஒரு போக்கினை ஏற்படக்கூடிய நிலை இன்று இருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. இல்லையென்று சொன்னால் இன்று கஜா புயலில் இந்த தஞ்சை தரணியில் நெற்களஞ்சியமாக இருக்கக்கூடிய அந்த பூமி இன்று பாலைவனம்போல காட்சியளித்துக் கொண்டி ருக்கிறது.

ஆக அங்கே பாலைவனப்புயல் அடித்து பாலைவனமாகிறது. காவிரியில் வரக்கூடிய தண்ணீரையும் தடுத்து நிறுத்தி மேகதாது அணையை கட்டுவார்களே யேனால் கொஞ்சம் நஞ்சம் வந்து கொண்டி ருக்கக்கூடிய நீரும் வராமல் இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டு தஞ்சை தரணி பாலைவனமாக மட்டுமல்ல தமிழ்நாட்டையும் பாலைவனமாக்கக் கூடிய ஒரு நிலையை உருவாக்கி விடுவார்கள்.

இந்த நிலையிலிருந்து தடுத்து நிறுத்துவதற்குத்தான் இப்படை இங்கே தளபதி தலைமையிலே கூடியிருக்கிறது. இந்தப்படை நிச்சயமாக வெல்லும், இப்படை தோற்கின் இந்தியாவிலே எப்படையும் வெல்ல முடியாது. இந்த படை செல்லுகிற இடங்களெல்லாம் வெல்லும் என்பதிலே எந்த சந்தேகமும் கிடையாது.

கர்நாடக அரசு ஆக மத்திய அரசுக்கு சரியான புத்தியை புகட்ட வேண்டும் என்று சொன் னால் கர்நாடக அரசை தான்தோன்றித் தனமாக தனக்கென அணை கட்டுகிற போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால், தமிழ்நாட்டிலே உள்ள அனைத்து சமுதாய மக்களும், அனைத்து தரப்பினரும், அனைத்து கட்சியினரும் இந்த தளபதியினுடைய தலைமையிலே ஒன்று திரண்டு ஒரு பாடத்தை கற்பிக்கக்கூடிய ஒரு காட்சி தான் இந்த காட்சி. அதுதான் இந்த மேடை.. அதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம். உழவர்கள் இல்லையென்றால் நாடு இல்லை. உழவர் பெரு மக்கள், தலைவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய ஏர் நடக்கும் எனில் இயல், இசை, நாடகம் நடக்கும். சீர் நடக்கும். திறம் நடக்கும். திருவரங்க செயல் நடக்கும். பார் நடக்கும். படை நடக்கும். பசி நடக்க மாட்டாதே என்று தமிழ்நாட்டு புலவர் பாடினார். தமிழ்நாட்டிலே உள்ள பசியை போக்குகிற இடம் இந்த தஞ்சை தரணி. திருச்சியை ஒட்டி ஓடுகிற நடந்தாய் வாழி காவேரி என்கிற இந்த காவேரி தாய் தான் பசியை போக்குகிற பார் அமுதை ஊட்டக்கூடிய தாயாக திகழ்ந்து கொண்டிருக்கிறாள். அந்த தாயுடைய பாலூட்டும் மார்பை அறுத்து கொடுக்கிற தாய்ப்பாலை நிறுத்தி தமிழ்நாட்டு மக்களையெல்லாம் பசி, பட்டினியால் வாட செய்கிற ஒரு நிலைமை இன்று மத்திய அரசு கூட்டாக சேர்ந்து கொண்டு சதி வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்றால் இப்படிபட்ட நிலையி லிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த பெரியார் மண்ணிலேயிருந்து, பேரறிஞர் அண்ணா வாழ்ந்த இந்த மண்ணிலிருந்து, கலைஞர் போட்டுக்கொடுத்த பாதையில் தளபதி செல்லுகிற இந்த ராஜபாட்டையிலே சென்றால் தான் இந்த நாட்டை பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையிலே நாடு முழுவதிலும், ஜனநாயகத்தை பாதுகாக்க, சமதர்மத்தை பாதுகாக்க, சமூக நீதியை பாதுகாக்க, இந்த நாட்டிலே நல்லாட்சியை நிலைநிறுத்த, அனைவருடைய நலனை நிலைநிறுத்த, ஜனநாயக முறையிலே சட்டஆட்சியை நிலைநிறுத்த தளபதி மு.க ஸ்டாலின் தலைமையிலான இந்த அணி தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழு வதிலும் செல்லும். வெல்லும். அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்று கூறி நன்றி தெரிவித்து நிறைவு செய்கிறேன். நன்றி.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்