Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 18, 2018 9 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<Previous
Tuesday, December 4, 2007
60 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அனைத்து நடைமுறைகளையும் தான்தோன்றித்தனமாக மாற்றிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுஎன்கவுண்டர் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் ‘இன்று நல்ல நாள்’ என கூறிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி மத்தியில் அவல ஆட்சி நீக்கப்பட்டு சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய மாநில உரிமைகளை பாதுகாக்கும் நல்லாட்சி மலர யுவ ஜன யாத்திரா வழிவகுக்கும் கோழிக்கோடு பொதுக்கூட்டத்தில்பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


கோழிக்கோடு, டிச. 04-60 ஆண்டுகளாக பாதுகாக் கப்பட்டு வந்த அனைத்து நடை முறைகளையும் தான் தோன்றித் தனமாக மாற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு என்றும் என்கவுண்டர் கொலைகள் அதிகரித்தும் வரும் நிலையில், ‘இன்று நல்ல நாள்’ என கூறிக் கொண்டிருக்கிருக்கிறார் பிரதமர் மோடி எனவும் மத்தியில் நடைபெறும் இத்தகைய அவல ஆட்சி நீக்கப்பட்டு மக்கள் உணர்வுகள், மாநில உரிமைகளை பாதுகாத்து, சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய நல்லாட்சி மலர யுவ ஜன யாத்திரா வழிவகுக்கும் என்றும் கோழிக்கோடு பொதுக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியான முஸ்லிம் யூத் லீக் கேரள மாநில கமிட்டி சார்பில் பாசிஸத்திற்கு எதிராக யுவ ஜன யாத்திரா நவம்பர் 24-ந் தேதி காசர்கோட்டில் தொடங்கப்பட்டு டிசம்பர் 24-ந்தேதி திருவனந்தபுரத்தை அடைய உள்ளது. கேரளா முழுவதும் சென்றுவரும் இந்த யாத்திரை 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை கோழிக் கோட்டை வந்த டைந்தது. அன்று மாலை கோழிக்கோடு கடற்கரை மைதானத்தில் லட்சக் கணக் கானோர் பங்கேற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள், ஃபெரோஸ் ஆகியோரது ஒருங் கிணைப்பில் இம்மாபெரும் யுவஜன யாத்திரை கேரள மாநிலம் காஸர்கோட்டில் துவங்கி - கண்ணூர், புல் லாண்டி, கோழிக்கோடு உள் ளிட்ட நகரங்கள் வழியாகப் பயணித்து, டிசம்பர் 24 அன்று திருவனந்தபுரத்தைச் சென்றடைகிறது.

மண்ணறையிலிருந்து துஆ

நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னாள் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் அவர்கள் கண்ணூரில் இப்பேரணி கடந்து சென்ற போது அதற்குச் சாட்சி யாக இருந்திருப் பார்கள். சி.ஹெச்.முஹம்மத் கோயா சாஹிப் அவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டவர்களுக்காக துஆச் செய்திருப்பார்கள். நமது பெருந்தலைவர் அப்துர் ரஹ்மான் பாஃபகி தங்கள் அவர்கள், இந்தத் தாய்ச்சபைக்காக உற்சாகத் துடன் உழைத்துக் கொண்டி ருக்கும் இளந்தலைவர்களின் வெற்றிக்காக மண்ணறை யிலிருந்து துஆ செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல; இந்தப் பேரணி குறித்தும், இதை நடத்திக் கொண்டிருக்கும் இளம் தலைவர்களின் உழைப்பு குறித்தும் யாரெல்லாம் கேள்விப் படுகிறார்களோ அத்தனை பேரும் இவர் களுக்காக, இவர்களது வெற்றிக் காகப் பிரார்த்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.கேரளாவில் ஹவுஸ் வளாகத்தில் நின்றவாறு இந்த அழகிய கம்பீரமான பேரணியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை யும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் சொரிந்தது. உடனடியாகக் கீழே இறங்கி வந்து உங்கள் அனைவரையும் கன்னத்தில் முத்தமிட்டுப் பாராட்ட வேண்டும் என்று உள்ளபடியே நான் ஆசைப் பட்டேன்.

முன்னுதாரணமான பேரணி

சாலைகள் வழியே பல்லாயிரக் கணக்கில் பீடுநடை போட்டு நீங்கள் அணிவகுத்துச் செல்கையில் பல விஷயங்களை உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறீர்கள். சாலையில் எப்படி நடந்து செல்வது; ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும், புரிந் துணர்வுடனும் எப்படி நடந்து கொள்வது; முஸ்லிம் லீக் தலைவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பனவற்றை யெல்லாம் எளிதில் உணர்த்தும் வகையில் உங்களது இப் பேரணி உலகுக்கு ஒரு முன்னு தாரணமாய் அமைந்து விட்டது.

மு.க. ஸ்டாலின்

மாபெரும் பேரணியை தொடர்ந்து இங்கே கோழிக் கோட்டில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற தமிழக அரசியலின் தங்கக்கட்டி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்திருந்தோம். தமிழகத்து தங்கக்கட்டியை இங்குள்ள சிங்கக்குட்டி குஞ்ஞாலிக்குட்டி அவர்களோடு இணைத்துப் பார்க்க ஆசைப்பட்டோம். அது நடந்திருந்தால் என் மாபெரும் பொதுக்கூட்டம் இப்பகுதி வரலாற்றில் ஒரு சிறப் பிடத்தைப் பெற்று இருக்கும். ஆனால் தவிர்க்க முடியாத தனது பணிப்பளு காரணமாக அவர் வர இயலாமல் ஆகி விட்டது.

திருச்சி சிவா

அவருக்குப் பகரமாக திராவிட முன்னேற்ற கழகத் தின் கொள்கை பரப்புச் செயலாளர், பாராளு மன்ற உறுப்பினர், சிறந்த பண் பாளர், நாவலர், திராவிட சிந்தனையாளர், சிறந்த வரலாற்று ஆய்வாளர், எனது மிக நெருங்கிய நண் பர் திருச்சி சிவா அவர் களை இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தளபதியார் அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தான் வர இயலாத நிலையிலும் ஒரு சிறந்த பேச்சாளரை தனக்கு பகரமாக அனுப்பி தந்தமைக்காக தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்வதோடு, அந்த வகையில் இங்கே வந்து மேடையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அன்பு நண்பரை இந்த மாபெரும் பொதுக்கூட்ட ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாக நான் உளமாற வரவேற்கிறேன்.

யூத் லீக்

நம் சமுதாய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைமை களை - குறிப்பாக அதன் தேசியத் தலைமையை வளர்த் தெடுக்கும் சிறந்த பூமியாக இக்கேரள மாநிலமும், அதன் சிறந்த களமாக இங்குள்ள யூத் லீகும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கிருக்கும் குஞ்ஞாலி குட்டி சாஹிப், அப்துல் வஹ்ஹாப் சாஹிப், கே.பீ.அப்துல் மஜீத் சாஹிப், சிறந்த தத்துவ ஞானி சமதானி சாஹிப், மற்றுமுள்ள தேசிய - மாநில - மாவட்டத் தலைவர்கள் எல்லாம் இங்கே இந்த மேடையை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே நான் சொன்னது போல தமது மாணவப் பருவத்தில் மாணவரணி - எம்.எஸ்.எஃப். மூலமும், பின்னர் இளமைப் பருவத்தில் இளைஞரணியான யூத் லீக் மூலமும் மிகப்பெரும் களப்பணியாற்றித்தான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் இன்று என் மாபெரும் பேரணியை நடத்தி முடித்திருக்கும் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள், ஃபெரோஸ் ஆகியோரும் - தாங்கள் வருங்காலத்தில் இந்த மாபெரும் சமுதாயப் பேரியக்கத்தின் மாநில தலைமையை மட்டுமல்ல; தேசியத் தலைமையையும் அலங்கரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம் என்று உணர்த்திக் கொண்டிருக்கிறார் கள்.

முனவ்வர் அலி ஷிகாப் தங்ஙள்

முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் தமது மாணவப் பருவத்தில் மலேசிய நாட்டில் படித்துக் கொண்டிருந்தபோது, நான் அங்கே சென்று சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் மலேசியப் பல் கலைக் கழகத்தின் மாண வர்கள் அனைவரையும் ஒருங் கிணைத்து ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதில் என்னையும் பேச அவர் தான் அழைத்து இருக்கின்றார் என்ற அழகான செய்தியை பின்னர்தான் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற பணிகள்தான் அவரை இப்பொழுது மேலே மேலே உயர்த்தி கொண் டிருக்கிறது.

அஹமது சாஹிப்

அதுபோல நம்முடைய மறைந்த தேசியத்தலைவர் அஹமது சாஹிப் அவர்கள் இங்கிருக்கும் இளவல் ஃபெரோஸ் அவர்களை இளைஞர் அணி - யூத் லீகின் கன்வீனராக நியமித்தார். அவரிடம் இப்பொறுப்பு வழங்கப்பட்ட காலகட்டத்தில் கேரளாவைத் தவிர வேறு எங்கும் யூத் லீக் பெரிய அளவில் கட்டமைக்கப்படவில்லை. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால் பல பகுதிகளில் தாய்ச்சபையே இல்லை என்ற நிலைதான் இருந்தது. அப்படி வெறுங்கை யோடு இவரிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. கைகள்தான் வெறுங்கைகளாக இருந்தனவே தவிர, சிந்தனையோ அரிய பல செயல் திட்டங்களை உள்ளடக்கி யிருந்தது. அச்செயல்திட்டங்களோடு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இடை விடாமல் சென்று, அங்குள்ள இளையோர் - முதியோர் என அனைவரையும் சந்தித்து, இன்று கிட்டத்தட்ட இந்தியா முழுக்க பெரும் பாலும் அனைத்துப் பகுதிக ளிலும் தாய்ச்சபை கட்டமைக்கப்படவும், அதன் இளைஞர் அணியான யூத் லீக் மிக வலுவாகக் கட்டமைக்கப்படவும் அவர் மகத்தான களப்பணியாற்றி இருப்பது மிகுந்த பாராட் டுக்குரியது மட்டுமல்ல; சரியான செயல்வீரரிடம் வலு வான பொறுப்பு அளிக்கப் பட்டுள்ளது என்பதை உணர்த்துவதாகவும் இது அமைந்துள்ளது.

செயல் வீரர்கள்

அப்படிப்பட்ட மகத்தான செயல்வீரர்கள்தான் யுவ ஜன யாத்ரா எனும் மாபெரும் பேரணியும் தளபதிகளாக முன்னின்று நடத்திக் காட்டி யிருக்கிறார்கள். இவர்களது அறிய அழகிய சிறந்த ஊக்கமிக்க செயல்பாடுகளால் இந்த கேரள மாநிலத்தில் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைமையை அலங் கரிக்கப் போகிறவர்கள் இவர்களும், இவர்களைப் போன்றவர்களும்தான். தேசிய ஒற்றுமை, சமுதாய உணர்வு, சிறுபான்மையினரின் கலாச்சாரப் பாதுகாப்பு ஆகிய உணர்வுகளை ஒருசேரப் பெற்றவர்களாகத்தான் இவர் கள் இயங்கிக் கொண் டிருக்கிறார்கள்.

காயிதேமில்லத் சாஹிப்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களும், இந்தக் கேரள மாநிலத்தின் தாய்ச்சபைத் தலைவர்களும் எந்த ஒரு கொள்கைக்காக உழைத்தார் களோ, இன்று நாம் எதற் காகப் பாடுபட்டுக் கொண் டிருக்கின்றோமோ அந்தக் கொள்கை முழக்கத்திற்கு உறுதுணையானவர்களாக திராவிட இயக்கத்தினர் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் - தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், தற்போதைய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட திராவிடத் தலை வர்கள் பல்லாண்டுகளாக நம்மை அரவணைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவற்றின் காரணமாக நாம் அவர்களுக்கு நமது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும், உழைப் பையும் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகி றோம்.

ராகுல் காந்தி

தமிழ்நாடு மாநில அரசியலில் இப்படியொரு நிலை என்றால், இந்திய தேசிய அரசியலில் இந்திய தேசிய காங்கிரஸ் நம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் எண்ணங்களுக்கும், அதன் செயல்திட்டங்களுக்கும் ஒத்த கருத்தில் இணைந்து செயல்பட்டு கொண் டிருக்கிறது. அதன் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் - நேரு குடும்பத்தின் விடிவெள்ளியாய், தற்கால தேசிய அரசியலின் பெரும் புரட்சியாய்த் திகழ்ந்து தனது சீரிய தலைமையின் மூலம் இன்று நாட்டு மக்களுக்கு நல்ல வலுவான நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கின்றார்.ராகுல் காந்தி ஒரு புதிய இந்திய தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டுமன்றி, இந்திய மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தேவையான சிறந்த பாதையையும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். மோடி தலைமையிலான இந்திய அரசு நிகழ்காலத்தில் நடத்தி வரும் தவறான அரசி யல் நடவடிக்கைகளை உடனுக் குடன் சுட்டிக் காட்டி, மறுதலிக்க முடி யாத அளவுக்குக் கேள்வி களை எழுப்பி கொண் டிருக்கிறார். நாட்டு மக்க ளின் எண்ணங்களைப் பிரதி பலிக்கும் வகையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காத நிலையில், ஆளும் பாரதீய ஜனதா அரசின் தவறுகளை நாடு முழுக்கப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார்.

வேற்றுமையில் ஒற்றுமை

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கையின் கீழ் கட்டமைக்கப்பட்ட இந்த நாட்டின் மகத்துவத்தைச் சீர்குலைத்து, இங்குள்ள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திக் குளிர்காய்வதாக இன்று நாட்டை ஆளும் மத்திய அரசின் மீது அவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்.

அரசியல் சாசன சட்டங்கள்

பல்வேறு மத, இன, மொழி, பிராந்திய வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி ஒற்றுமை உணர்வுடன் இந்நாட்டு மக்கள் இயங்கிட வேண்டும் என்ற கவலையை கருத்தில் கொண்டு உருவாக் கப்பட்டது இந்திய அரசியல் சாசன சட்டங்கள். இந்த அழகான கட்டமைப்பைச் சீர்குலைத்து, இந்த நாட்டில் ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி எனும் கொள்கையைத் திணிக்க இன்றைய பாரதீய ஜனதா அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சுருங் கச் சொல்வதானால் இந்துத் துவ கொள்கையை இந் நாட்டு மக்கள் மீது திணிக்க முயற்சித்துக் கொண் டிருக்கிறது அதற்காக எந்த விலையையும் கொடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறது.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இந்திய மக்களை ஒருங் கிணைப்பதை விட்டுவிட்டு, அவர்களை துண்டு துண்டாக பிரித்து ஆள்வதற்கு வலியு றுத்தும் இந்துத்துவா கொள்கையை மக்களிடையே திணிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியத்துவாவை மக்களி டத்திலே வளர்க்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியத்துவா

அது என்ன இந்தியத்துவா? இந்த இந்திய மண்ணில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் சீக்கியர்கள் பௌத்தர்கள் என பல சமயத்தினரும், இந்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், குஜராத்தி என பல மொழி பேசுவோரும், பல ஆயிரம் ஜாதிகளைக் கொண்டவர்களுமாய் இருக் கின்ற போதிலும், இந்த மாச்சரியங்கள் அனைத்தையும் தாண்டி ‘இந்தியன்‘ என்ற ஒரே தலைப்பின் கீழ் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரே கொடியின் கீழ் இயங்குவதுதான் இந்தியத் துவம் ஆகும். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் தாரக மந்திரம் வலியுறுத்துவதும் இது ஒன்றை மட்டும்தான்.

தூய்மைத்தன்மை

இந்த நாடு அரசியல் சாசனத்தில் கட்டமைக்கப் பட்டபோது என்ன தூய்மைத் தன்மை யுடன் இருந்ததோ அதே தூய்மை தன்மையைப் பாதுகாப்பதற்காகவும், அதில் இழக்கப்பட்ட அம்சங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்காகவுமே இந் திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபட்டுக் கொண் டிருக்கிறது. இதே கடமையை இந்திய தேசிய காங்கிரசும் செய்து வருவதால், அந்த இலட்சியத்தை அடைவதற்காக காங்கிரசுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அளவில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உரிமைகள்-தனித்தன்மைகள்

இந்த நாட்டில் அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும், அனைத்து மொழியினரும், அனைத்து மதத்தினரும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் அனைத்து மாநிலங்களின் உரிமைகளும், தனித்தன்மைகளும் பாது காக்கப்பட வேண்டும். இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டங்கள் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் முறையாகப் பேணப்பட வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், இந்திய தேசிய காங்கிரஸும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பரிணமித்து கொண்டிருக்கும் ராகுல் காந்தி, ஒரு புதிய உத்வேகத்துடன் இந்தச் செயல் திட்டங்களை நாட்டில் மீட்டுருவாக்கம் செய்யப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். எனவே அவரோடு இணைந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாசலை இந்தக் கேரள மண்ணில் குஞ்ஞாலிக் குட்டி ஸாஹிப் தலைமையிலான நம் தாய்ச்சபை திறந்து வைத்திருக்கிறது அதன் வெளிப்பாடுதான் தெலுங் கானா மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி - இந்திய தேசிய காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் ஒரே கூட்டணியில் இருப்பதாக வெளிப்படையாகவே அறிவித்து இருக்கிறார்.

அல்லாமா இக்பால்

இன்றைய இந்தியத் திருநாடு எந்த ஒரு தனி மொழியினருக்கோ, தனி மதத்தினருக்கோ, தனி கலாச் சாரத்தினருக்கோ மட்டும் சொந்தமானது அல்ல. மாறாக, இந்த மண்ணில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. இதைத்தான் அல்லாமா இக்பால் அவர்கள் ""ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந் துஸ்தான் ஹமாரா"" என்று பாடியிருக்கிறார். இந்த இந்திய நாடு, உலகின் அனைத்து நாடுகளையும் விட மிக அழகிய இயற்கை வளங்கொழிக்கும் நாடாகும். இந்தியர்கள் அனை வருக்குமான இந்த நாட்டை எந்தப் பிரச்சினைகளும் இன்றி அனைவருக்குமாகப் பாதுகாக்கும் பணியில் - இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், இந்திய தேசிய காங்கிரஸும் இணைந்து பணியாற்றும்.

இந்திராகாந்தி அம்மையார்

இந்திராகாந்தி அம்மையார் இந்நாட்டின் பிரதமராக இருந்தபோது, ராகேஷ் சர்மா அவர்கள் செயற்கைகோள் மூலமாக உலக நாடுகளைப் பார்வையிட்டுக் கொண்டி ருந்தார். அப்போது அவரிடம், ""நம் இந்தியா எப்படித் தெரிகிறது?"" என்று இந்திரா அம்மையார் கேட்டபோது, ""மேடம்! ஸாரே ஜஹான்ஸே அச்சா"" என்று அவர் கூறினார். இந்தக் கவிதை இவருக்குச் சொந்தமானவர்களே முஸ்லிம் கள் என்று இருக்கும்போது, இன்று யார் யாரெல்லாமோ இந்திய முஸ்லிம்களுக்கு நாட்டுப்பற்று குறித்தும், இந்திய தேசிய கட்டமைப்பு குறித்தும் பாடம் நடத்திக் கொண்டிருப்பதும், இந்திய முஸ்லிம்களின் நாட்டுப் பற்றைக் கேள்வி எழுப்பிக் கொண் டிருப்பதும் வேதனை தரும் வேடிக்கையாக இருக் கிறது.

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 27 பேர் என்கவுண்டர் எனும் பெயரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 1500 பேர் என்கவுண்டர் எனும் பெயரால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதை கடந்த 3 நாட்களாக வெளி வரும் ஊடகச் செய்திகள் தெரிவித்துக் கொண்டிருக் கின்றன. இவ்வளவும் நடந்து கொண்டிருந்தும் இந்திய பிரதமர் மோடி, ""இன்று நல்ல நாள்"" என கூறிக் கொண் டிருக்கிறார் ஒவ் வொரு நாளும் மோசமான நாட்களாகக் கழிந்து கொண்டிருக்க, இவர் இப்படி கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதாக உள்ளது.""அனைவரின் மேம்பாட் டிற்காகவே நாம்; எனவே அனைத்தையும் நாம் எடுத்துக் கொள்வோம்!"" என இன்று மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். ""சப் கா சாத்"" என அதற்கு இந்தியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ""சப் கா சாத்"" அல்ல; ""சப் கா மவ்த்""தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று இந்த நாட்டில் எல்லா பகுதிகளிலும் கலவரங்கள், குழப்பங்கள், உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருக் கின்றன.

நீதித்துறை-சி.பி.ஐ.

இந்த நாட்டின் நீதித்துறை இன்று பெருங்குழப்பத்தில் உள்ளது. இந்த நாட்டில் பெரும்பெருங் குற்றங்கள் நிகழ்த்தப்படும் போதெல்லாம் அனைத்து அரசியல் தலை வர்களும், சமூக ஆர்வலர்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றுதான் கேட்பர். அப் படிப்பட்ட சிபிஐ துறை இன்று மிகுந்த குழப்பத்தில் உள்ளது. இந்த நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக திட்டங்களை வகுக்கும் திட்ட அமலாக்கத்துறையே இன்று இல்லாமல் ஆக்கப் பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்புகள்

பிப்ரவரி 28 ஆம் நாள் அன்று வெளியிட வேண்டிய பட்ஜெட் அறிவிப்புகள் பிப்ரவரி முதல் நாளுக்கு தன்னிச்சையாக மாற் றப்பட்டுள்ளது. அப்படி நாள் மாற்றப்பட்டு முதலாம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகள் வெளி யிடப்பட்ட போது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஹமது சாஹிப் காலமானார் ஒரு நாள் கழித்து அவரது மரணத்தை இந்திய அரசு அறிவித்தது அடுத்த ஆண்டும், அதற்கு அடுத்த ஆண்டும் பிப்ரவரி முதல் நாளன்று பட்ஜெட் அறிவிக்கப்பட்டபோது, ஒரு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காளமாயினர். வேறு எந்த மாதத்திலும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும்தான் வெறும் 28 நாட்கள் உள்ளன. இதைக் கருத்திற்கொண்டே அந்த மாதத்தின் கடைசி நாள் பட்ஜெட் அறிவிப்பிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலமாக இந்த நாடு வளத்தையும், சுபிட்சத்தையும், அபிவிருத்தியையும் நோக்கி நடைபோட்டுக் கொண் டிருந்தது. குரங்கு கையில் பூமாலை

இந்தியா விடுதலை அடைந்து 60 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அனைத்து நடைமுறை களையும் தான் நினைத்த மாத்தி ரத்தில் மாற்றிக் கொண் டிருக்கிறது இன்றைய மத்திய பாஜக அரசு. ""குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல"" என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப இன்று மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த அரசியல் அறிவோ, முதிர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. ஆக, இன்று ஆளும் பாஜகவினர் சொல்வது போல ""சப் கா சாத்"" அல்ல; ""சப் கா மவ்த்"". ""சப் கா விகாஸ்"" அல்ல; ""சப் கா நாஸ்""தான் இந்த நாட்டில் நடந்து கொண் டிருக்கிறது.அந்த வகையில் இன்று மிகப் பிரம்மாண்டமாக அனைத்து விழிகளையும் விரியச் செய்து நடந்த முடிந் திருக்கக் கூடிய இந்த மாபெரும் யுவ ஜன யாத்ரா பேரணி, இங்கிருக்கும் அரபிக் கடலையே பொங்க வைத் திருக்கிறது. நாளை வங்காள விரிகுடாவையும் பொங்க வைக்கும். பின்னர் இந்து மகா சமுத்திரத்தையும் பொங்கியெழச் செய்யும்.

செங்கோட்டை

இப்பேரணி இன்று வேண் டுமானால் திருவனந்தபுரத்தில் முடியலாம். ஆனால் இதன் தாக்கம் வரும் பாராளுமன்ற தேர்தலில் செங்கோட்டை வரை நீளும். அப்போது, இன்று இருக்கும் அவல ஆட்சி நீக்கப்பட்டு - மக்கள் உணர்வுகளை மதிக்கக் கூடிய, மாநில உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய, சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய, இந்த இந்தியத் திருநாட்டை வளங்கொழிக்கச் செய்கின்ற நல்லாட்சியின் பால் அது நடத்திச் செல்லும். அந்த வகையில் இந்த மாபெரும் பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கின்ற முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள், ஃபெரோஸ் உள் ளிட்ட தளபதிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் மனநிறைவோடு தெரிவித்துக் கொள்வதோடு - எல்லாம் வல்ல அல்லாஹ், இவர்கள் எடுக்கும் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் முழு வெற்றியைத் தந்தருள வேண்டு மென துஆச் செய்து எனது உரையை முடிக்கிறேன் நன்றி.

<<Previous

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்