Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, January 20, 2019 13 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, January 12, 2007
அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ உதவும் மீலாது விழா கூட்டங்கள் முத்தலாக் மசோதா போன்ற பிரச்சினைகள் உருவாவதை தடுக்க முஸ்லிம்கள் ஷரிஅத் சட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் தாம்பரத்தில் நடந்த மீலாது விழா கூட்டத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


சென்னை, ஜன. 12- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட சார்பில் நம் உயிரும்மேலான உத்தம நபி (ஸல்) அவர்களின் உதய தின விழா மற்றும் சமய நல்லிணக்க விழா 11-01-2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மேற்கு தாம்பரம் சண்முகா சாலையில் உள்ள பாரதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கவுரவ ஆலோசகரும், எஸ்.டி குழுமங்களின் நிர்வாக இயக்குநருமான கே. நவாஸ்கனி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் எம். எஸ்.அப்துல் வஹாப், மாவட்ட பொருளாளர் எஸ்.எம். முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஹாஜி ஏ. ஷேக் அப்துல் காதர் வரவேற்புரையாற்றினார்.

தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்ஏ., ஆகியோர் உரையாற்றினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் விமரிசையாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நபிகள் நாயகம் பிறந்த நாள் மீலாத் விழா, சமய நல்லிணக்க விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். முத்தமிழறிஞர் கலைஞர்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சொல், செயலை என்றும் நினைவுறுத்தும் வகையில் இங்கே விழாவில் பங்கேற்க வந்திருக்கின்ற சகோதரி கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலை வருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ராஜா உள்ளிட்ட உங்கள் அனைவரையும் துவக்கமாக நான் மனதார வரவேற்கின்றேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்தப் பகுதியில் நபிகள் நாயகம் அவர்களது பிறந்த நாள் விழாவை ஏற்பாடுகளை - இந்த மாவட்டத் தலைவர் அப்துல் வஹ்ஹாப், மாவட்டச் செயலாளர் ஷேக் அப்துல் காதிர், தாம்பரம் ஷாஹுல் ஹமீத், முஸ்தஃபா, ரஃபீ, செய்யித் இஸ்மாஈல் உள்ளிட்ட சகோதரர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். அதற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.

சமய நல்லிணக்க விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இவ்விழா நடத்தப்பட்டாலும் கூட இதை ஓர் அரசியல் மேடையாக நாம் கருதவில்லை. நபிகளார் புகழ் பாடும் விழாவாகவும், சமய நல்லிணக்க விழாவாகவும் மட்டுமே இது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த இடத்தை ஒதுக்கித் தந்துள்ளனர் தமிழக காவல் துறையினர். இதை, தமிழகம் சமூக நல்லிணக்கம் சிறப்பாக உள்ள ஒரு மாநிலம் என்பதை உணர்த்தும் ஓர் அத்தாட்சியாக நான் கருது கிறேன். அந்த வகையில் இந்த இடத்தில் விழா நடத்த அனு மதி தந்த காவல் துறைக்கும் நான் நன்றி சொல்லிக் கொள் கிறேன்.

இதுபோன்ற மீலாத் விழாக்களில் நபிகளாரின் வாழ்க்கை வழிகாட்டல்கள், அவர்களது போதனைகள் எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த விழாவிலேயே சமய நல்லிணக்கம் பின்னிப் பிணைந் திருப்பதால், தமிழக மெங்கும் மீலாத் விழாக் களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. அதன்படி தொடர்ந்து நடத்தப் பட்டும் வருகிறது.

தந்தை பெரியார், அண்ணா, கலைஞர்

தமிழகத்தில் மட்டுமல்ல; உலகம் முழுக்க வாழும் எல்லா மத, இன, மொழி உள்ளிட்ட மாச்சரியங்களைக் கொண்ட மக்களும் - அவரவர் நம்பிக்கை, கலாச்சாரம், வாழ்வியல் நெறிப்படி சுதந்திரமாக வாழ்வதும், அதே நேரத்தில் ஒரு சாரார் மற்ற சாரார்களது உணர்வுகளை மதித்திடுவதுமே சமூக நல்லிணக்கமாகும். இதைக் கற்றுத் தந்தது நபிகள் நாயகம் அவர்கள். இதைத்தான் தமிழகத்தில் பாரம்பரியமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத் தமிழறிஞர் கலைஞர், அவரது வழியில் இன்று திராவிட இயக்கத்திற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின் றனர். இங்கிருக்கும் சகோதரி கனிமொழி அவர்களும் தான் செல்லுமிடங்களிலெல்லாம் திராவிட நெறியைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்

திராவிட நெறி; தமிழ் நெறி என்பது என்ன? ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே; யாவரும் கேமர்’ என்பவைதான் அதன் தத்துவங்கள். எல்லோரும் ஒரே பெற்றோரிலிருந்து பிறந்து, பல்கிப் பரவியவர்கள்; அனைவரும் அண்ணன் தம்பியர்; அனைவரும் உற்றார் உறவினர்; எல்லா ஊர்களும் நமது ஊர்கள்தான்; பிறப்பால் ஏற்றத் தாழ்வு இல்லை; தோளில் பிறந்தது, வாலில் பிறந்தது, காலில் பிறந்தது என்பதெல்லாம் இல்லை; எல்லோரும் மனிதர்களே என்பதுதான் திராவிட நெறியும், தமிழ் நெறியும். இவையனைத்தும் நபிகள் நாயகம் அவர்களது போதனைகளை முற்றிலும் ஒத்திருப்பதால் தான் தந்தை பெரியார், திரு. வி.க., பாரதியார், பாரதிதாசன் போன்றோ ரெல்லாம் நபிகளாரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரை யாற்றுவதைக் கடமை யெனக் கருதிச் செயல் பட்டிருக்கின்றனர். அதுபோன்ற தருணங்களில் அவர்கள் ஆற்றிய உரைகளெல்லாம் தமிழ் நெறி; திராவிட நெறி; இஸ்லாம் கூறும் வாழ்வியல் நெறியை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன. நபிகள் நாயகம் எங்கள் தாயகம்

மறைந்த கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் ஒருமுறை உரையாற்றுகையில், """"இக் கொள்கை முழக்க மெல்லாம் உலகம் தோன்றிய துவக்கத்திலேயே உள்ளவை... இத்தத்துவங்கள் வெறும் தத்துவங்களாகவே இருந்து வந்த நிலையில், நபிகள் நாயகம் அவர்களோ அதற்கு உயிர் கொடுத்து, வாழ்ந்தும் காட்டிச் சென்றுவிட்டார்கள்... எனவே நபிகள் நாயகம் எங்கள் தாயகம் என்று அவர் பெருமை பட்டார். அதை இங்கே நினைவுபடுத்து வது பொருத்த மாக இருக்கும். கொள்கை அடிப்படையிலான உறவு

திராவிட நெறிக்கும், இஸ்லாமுக்கும் சிற்சில இடங் களில் சில வேறுபாடுகள் தென் பட்டாலும், மொத்தத்தில் பார்க்கும்போது இரண்டின் பயிற்றுவிப்பும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. அந்த அடிப்படையில்தான் நாம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொடர்ந்து உறவுடன் இருந்து வருகிறோம். மற்ற அரசியல் கட்சிகள் வைக்கும் உறவுகள் அரசியல், தேர்தல் காரணங்களுக்காக வைக்கப்படுபவை. ஆனால் நமது உறவோ கொள்கை அடிப்படை யிலானது; பாரம்பரியமானது. இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறி

பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னூறுக்கும் அதிகமான மீலாத் விழாக்களில் கலந்து உரையாற்றியிருக்கிறார். அப்படி உரையாற்றுகையில், """"உலகிலுள்ள மற்ற மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமல்ல; இது ஒரு வாழ்வியல் நெறி; வாழ்க்கைப் பாதை; இது உலகத்தார் அனைவருக்கும் சொந்தமானது"" என்று அவர் தொடர்ந்து கூறி வந்திரு க்கிறார். இப்படிப்பட்ட ஒப்புயர்வற்ற ஈடுபாடு தமிழகத்தில் நிறைந்திருப்பதன் காரணமாகத்தான் இந்த மேடையில் சகோதரி கனிமொழி அவர்கள் உரையாற்ற அமர்ந்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொண்டிருக்கும் பாரம் பரியமிக்க இந்த உறவின் தொடர்ச்சி காரணமாகத்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மாநாடு, பொதுக் கூட்டம், திருமண நிகழ்ச்சிகள் என எந்த மேடை யானாலும் அவற்றில் திமுகவின் தலைவர்கள்தான் நிறை வுரையாற்றுவர். அதற்குக் காரணம், இந்தத் திராவிட நெறிதான் தென்னகத்து முஸ்லிம் சமுதாயத்திற்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து கொண் டிருக்கிறது என்பதுதான். அந்த அடிப்படையில்தான் சகோதரி கனிமொழி அவர்கள் இங்கு நிறைவுரை யாற்றவிருக்கிறார்.

உத்திரப்பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் 450 சட்ட மன்ற உறுப்பினர்கள், 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுள் ஒரு முஸ்லிம் கூட நிறுத்தப் படவில்லை. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் ஒரேயொரு முஸ்லிமை பாஜக சார்பில் நிறுத்தித் தோற்கடித்து விட்டனர். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’, ‘காந்தி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என அவர்கள் தொடர்ந்து முழங்கி வருவதன் உண்மையான பொருள், ‘இஸ்லாம் - முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்பதுதான்.

காங்கிரஸ் கூட்டணி

காங்கிரஸை இந்தியா விலிருந்து ஒழிக்க முடியாது. அதன் வெளிப் பாடாகத்தான் - """"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் பான்மை இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும்... அதன் தலைவர் ராகுல் காந்தி இந்நாட்டின் பிரதமராவார்... அதை நான் முன்மொழிகிறேன்"" என தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் சென்னையில் கூறினார். இது அவரது தனிப்பட்ட கருத்தல்ல. இந்த நாட்டு மக்களின் ஒட்டுமொத்த முடிவு. பண்டித ஜவஹர் லால் நேருவின் வழி வந்த இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி ஆகியோரெல்லாம் பல்லாயிரக்கணக்கான முட்டுக் கட்டைகளைத் தாண்டியும் எப்படி இந்நாட்டின் அரியணையில் அமர்ந்தனரோ அதுபோல ராகுல் காந்தியும் அமர்வார். அது நிறைவேற இன்னும் மூன்றே மாதங்கள்தான் உள்ளன. அதற்காகப் பாடுபட்டுக் களப்பணியாற்ற வேண்டிய கடமையில் நாம் அனைவரும் இருந்துகொண்டிருக்கிறோம். வானத்திலிருந்து சூரியனை, சந்திரனை, நட்சத் திரங்களை எப்படி நீக்க முடியாதோ அதுபோல இந்தியாவிலிருந்து இஸ்லாமையோ, முஸ்லிம் சமூகத்தையோ அழித்துவிட முடியாது. ‘கர் வாப்ஸி’ என ஒரு முரண்பாடான கொள்கையை முன்வைத்து, இந்நாட்டில் சில அட்டூழியங்களையெல்லாம் செய்தனர்தான். பலருக்கு இதிலுள்ள சூட்சுமங்கள் தெரிவ தில்லை

. ‘அல்லாஹ்’

இயற்கையே உருவான இறைவனை முஸ்லிம்கள் ‘அல்லாஹ்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த ‘அல்லாஹ்’ எனும் சொல் அரபகத்திலிருந்து இங்கு வந்ததல்ல. மாறாக, இங்கிருந்து அங்கு சென்றதுதான். """"ஒரு பெருங்கூட்டம் இறைவனை அல்லாஹ் என்று கூறி வணங்கி வந்திருக்கிறது"" என ரிக் வேதம் சொல்கிறது. இதை, மகாத்மா காந்தியின் வலது கையாகச் செயல்பட்ட பண்டிட் சுந்தர்லால் தனது கூhந ழுநநவாய யனே கூhந ணுரசயn எனும் நூலில் தெளிவாகக் குறிப் பிட்டிருக்கிறார். இது யாரோ சொன்னதல்ல. மாறாக, ஆய்வின் முடிவு. இந்த வகையில் நாம் இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.

பகுத்தறிவுத் தென்றல்

வடக்கிலிருந்து வீசிக் கொண்டிருக்கும் வாடைக் காற்று, தென் தமிழகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், அவர்கள் வழி வந்து இன்று தளபதியார் வீசிக் கொண்டிருக்கும் பகுத்தறிவுத் தென்றல் காற்றைப் பாழாக்கி விடக்கூடாது. தமிழகத்தில் வாழும் 8 கோடி மக்களுடன், இந்தியா முழுக்க வாழும் 15 கோடி முஸ்லிம்களும் இணைந்து, இந்தியா முழுக்க இந்தத் திராவிடப் பண்பாட்டு நேறியை எடுத்துச் செல்ல உறுதிமொழி எடுத்திருக்கின்றோம். அதற் காகக் களப்பணியாற்ற வேண்டியது நமது கடமை. அதுவே இக்கூட்டத்தின் முத்தாய்ப்பாக நான் சொல்ல விரும்புவதுவும்.

மனித இதங்களைப் பிரிப் பதும், உடைப்பதும் நியாயமற்ற, ஏற்கவியலாத ஒரு கொடுஞ் செயல். அதற்குத் தான் இன்றைய மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறது. தமிழ் நெறி; திராவிட நெறி மக்களை மக்களாக மதிக்கிறது. பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அனைத்து மக்களையும் மாச்சரியங்களைத் தாண்டி ஒன்றிணைக்கிறது. அதையே தான் இஸ்லாம் மார்க்கமும் செய்து கொண்டி ருக்கிறது. இதை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் நபிகளாரின் பிறந்த நாளை விடுமுறை நாளாக அண்ணா அறிவித்தார். இடையில் வந்த அரசு அதை மாற்றியது. பின்னர் வந்த கலைஞர் அரசு மீண்டும் விடுமுறையாக அறிவித்தது. பின்பு மத்தியில் ஆட்சிக்கு வந்த வி.பி. சிங், நபிகள் நாயகம் பிறந்த நாளன்று இந்தியா முழுமைக்கும் விடுமுறை என அறிவித்தார். அவ்வாறு செய்ததன் நோக்கம், நபிகளார் பற்றி முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து இந்திய மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

கனிமொழி

இந்தளவோடு மீலாத் விழா தொடர்பான எனது கருத்து க்களை முடித்துக் கொண்டு, பேச வேண்டிய சில நடப்பு அம்சங்கள் பற்றி மட்டும் சுருக்கமாகக் கூறி விட்டு, சகோதரி கனிமொழி அவர்களது உரைக்கு வழி விடுகிறேன். ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி மனை வியை விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறை முஸ்லிம் களால் சிற்சில சூழல்களில் பின் பற்றப்பட்டு வந்தது. அதற்கு உச்ச நீதிமன்றம் ஒட்டு மொத்தமாகத் தடை அறிவித்து விட்டது. அதற்குப் பிறகு ‘முத்தலாக் தடைச் சட்ட மசோதா’ என்று ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து, அவ்வாறு முத்தலாக் விடும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதிப் பதன் நோக்கம் என்ன? அப்படி கணவர் சிறையில் இருந்தால், பாதிக்கப் பட்ட அப்பெண்ணுக்கும், அவரது குழந்தைகளுக்கும் வாழ் வாதாரச் செலவினங்களுக்கு யார் கொடுப்பது? அதற்கான வழிமுறைகள் எதுவும் அச்சட்டத்தில் இல்லை. ஒன்றுக் கொண்டு முரண்பாடாகவே அச்சட்டம் அமைந்துள்ளது. அப்படி முரண்பாடான இச்சட்டம் தேவையில்லை. இதை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, அவர்களது ஆய்வின் நிறைவாகத் தரப்படும் கருத்துக்களைப் பெறுங்கள் என்றுதான் எதிர்க்கட்சிகள் எல்லாம் கூறின. சட்டமே வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும், அதைப் பற்றி எதுவும் சட்டை செய்யாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்று கூறுவது போல இந்தச் சட்டத்தைக் கொண்டு வர இன்றைய மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பது, இந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வது என்ற ஒன்றைத் தவிர வேறெந்தக் காரணத்திற்காகவும் அல்ல.

சட்ட மாற்ற நிகழ்வுகள்

திருமறை குர்ஆனும், நபிகளாரின் வழிமுறையும் தான் முஸ்லிம் களின் ஷரீஅத் சட்டம். அதை முஸ்லிம்கள் சரிவர பின்பற்றாமலிருக்கும் போதுதான் இதுபோன்ற சட்ட மாற்ற நிகழ்வுக ளெல்லாம் நடை பெற்று, அதன் மூலம் முஸ்லிம் கள் அவமானத்திற்குள்ளா கின்றனர். மாசு மருவற்ற இந்த இஸ்லாம் மார்க்கம் பிறரால் அறியாமையில் தவறாக விமர்சிக்கப் படுகிறது. எனவே, திருக்குர்ஆன் - அதன் விளக்கமாக அமைந்துள்ள நபிகளாரின் வாழ்வியல் நெறி அடிப்படையில் முஸ்லிம்கள் தமது வாழ்வை முழுமையாக அமைத்துக் கொண்டாலே யொழிய இதுபோன்ற அவ மானங்களை யாராலும் தடுக்க இயலாது. மற்றபடி, சூரியன் கிழக்கில் உதிப்பதையும், கடலில் அலையடிப்பதையும், உலகில் காற்று வீசுவதையும், வானத்தில் சந்திரன் - நட்சத் திரங்கள் இருப்பதையும் எப்படி மாற்றவியலாதோ அது போல இந்த இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் என்பது இயற்கை யானது, மாற்ற முடியா தது, திருத்தத் தேவையற்றது, நிறை வானது, நிரந்தரமானது.

தொழுகை - திருமணம்,

தொழுகை, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, கணவன் - மனைவி உறவு, குழந்தை வளர்ப்பு என இஸ்லாம் கூறும் எந்தச் சட்டமானாலும் அவை தெள்ளத்தெளிவானவை; முற்றிலும் பின்பற்றப் படத்த க்கவை. நமக்கு வேண்டுமானால் சில நேரங்களில் சில புரியாமல் இருக்கலாம். அவ்வாறான தருணங்களில் அதை ஆய்ந்தறிந்து புரிந்துகொள்ள முனைய வேண்டுமேயல்லாது, மேம்போக்காக நுனிப்புல் மேய்ந்துவிட்டு, அரைகுறை யாக மண்டையில் ஏற்றிக் கொண்டு, அச்சட்டத்தைக் குறை சொல்ல வருவது குறை மதியாளர்களின் செயலே அன்றி வேறில்லை.

ஷாபானு

ஷாபானு வழக்கில் பெண்ணுரிமையைப் பற்றி பாராளுமன்றத்தில் பிரச்சினை வந்தபோது, ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் தனி நபர் மசோதா கொண்டு வந்து, 17 மணி நேரம் உரையாற்றினார். அதன் நிறைவில், """"இந்த இஸ்லாமிய சட்டத்தை இந்நாட்டுப் பெண்கள் தெளிவுறத் தெரிந்து கொண்டால், இச்சட்டம் தான் எங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் கேட்பார்கள்"" என ராஜீவ் காந்தி கூறினார். இது வரலாற்றுப் பதிவு. இதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வதற்காக நான் சொல்லவில்லை. இஸ்லாமிய சட்டம் இயல்பானது, இயற்கை யானது, மாசு மருவற்றது, திருத்தத்திற்கு அவசிய மில்லாதது, அனைவராலும் முற்றிலும் ஏற்றுப் பின்பற்றத் தகுந்தது என்பதை உணர்த் துவதற்காகத்தான். இஸ்லாமிய சட்டங்கள்

இந்தியாவில் நீதிமன்றம், நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்த மன்றமாக இருந்தாலும் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அவ்வப்போது முரண்பட்ட கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அவற்றை யெல்லாம் ஓரங்கட்டி விட்டு, ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் - இஸ்லாமை நன்கு கற்றுத் தேர்ந்த மார்க்க அறிஞர்களான உலமாக்கள் சொல்லக் கூடிய சட்ட விளக்கங்களையும், அகில இந்திய அளவில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சொல்வதைக் கேட்டு, அதன்படி நடந்தோமானால், இந்நாட்டில் நமக்கு எந்தப் பிரச்சினையோ, குழப்பமோ வராது என்று கூறி, எல்லாச் சமுதாய மக்களும் இணக்கத் துடன் வாழ இதுபோன்ற மீலாத் விழா கூட்டங்கள் பயன் படட்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் தி.மு.க தாம்பரம் நகர செயலாளர் எஸ்.ஆர். ராஜா எம்.எல்.ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்கள் எச். அப்துல் பாசித், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர்கள் ஆப்பனூர் ஆர். ஜபருல்லா, எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி, மௌலவி டி.எஸ்.ஏ. அபுதாஹிர், தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் எஸ். முஹம்மது பேக், வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல்ஆப்தீன், தென் சென்னை மாவட்ட தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் காயல் அஹமது சாலிஹ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் அல்லாஹ் பக்ஸ், எம்.எஸ்.எஃப் மாநில தலைவர் பழவை அன்சாரி, முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச்செயலாளர் எஸ். அன்சாரி மதார், விழா ஒருங்கிணைப் பாளரும் தாம்பரம் மாவட்ட துணைச் செயலாளருமான தாம்பரம் எஸ். ஷாகுல் ஹமீது மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகி களான பனையூர் யூனூஸ், பாலவாக்கம் ஹசன், எஸ். அப்துல் அலீம், கே. அப்துலூ ரஹ்மான் சேட், எம்.ஏ. காஜா, கமுதி காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழக வக்ஃபு வாரிய உறுப்பினர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர் நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்