Flash News
|
|
|
வருடாந்திர நிகழ்ச்சிகள் |
| மார்ச் 10 |
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக்கப்பட்ட நாளான மார்ச் 10 அன்று சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, முஸ்லிம் கல்வியாளர் ஒருவர்,முஸ்லிம் இலக்கியவாதி ஒருவர், முஸ்லிம் சமூக சேவகர் ஒருவர் ஆகிய மூவருக்கு விருது வழங்கி கவுரவப்படுத்த வேண்டும். |
| ஜுன் 5 |
காயிதெ மில்லத் பிறந்த தினம் : கண்ணியத்தென்றல் காயிதெ மில்லத் பிறந்தநாளை கல்வி தினமாக அறிவித்து ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்குவதோடு உயர் கல்வி பயில வாய்ப்பில்லாமலிருக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் முஸ்லிம் மாணவர்களுக்கும், முதல் மூன்று இடங்கள் பெரும் முஸ்லிம் மாணவிகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும். இது தவிர மிகச் சிறப்பான சேவையாற்றும் முஸ்லிம் லீகினர் மூவரை தேர்வு செய்து அவர்களுக்கு காயிதெ மில்லத் சமுதாய சேவை விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் அந்த விழாவில் முஸ்லிம் லீக் சம்மந்தமான நூல் ஒன்றும் வெளிவரச் செய்து அதை எழுதியவருக்கு தக்க சன்மானம் வழங்கப்பட வேண்டும். |
| அக்டோபர் 4 |
சிராஜுல் மில்லத் பிறந்த தினம்:சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் பிறந்த நாளை சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவாக ஏற்பாடு செய்து இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய சமயங்களை சார்ந்த மூன்று பெருந்தகைகளுக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கி கவுரவித்து அந்த விழாவை சமய நல்லிணக்க விழாவாக நடத்த வேண்டும். அந்த விழாவில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற நூல் ஒன்றை வெளிவரச் செய்து அதை எழுதியவருக்கு தக்க சன்மானம் அளித்து கவுரவிக்க வேண்டும்.
மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைமையின் சார்பில் நடத்தப்படும். இந்த விழாக்களை தலைமையின் சார்பில் மாவட்டங்களும் ஏற்பாடு செய்யலாம். |
| டிசம்பர் |
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு - சமுதாய ஒற்றுமை மாநாடு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வட்டார அளவில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு - சமுதாய ஒற்றுமை மாநாடு அந்தந்த பகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்துவதோடு அந்நிகழ்ச்சியில் அனைத்து மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையும் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், இமாம்கள் மற்றும் பேராசிரியர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். |
| கோடை விடுமுறை |
பயிற்சி முகாம்:ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை அல்லது அரையாண்டு விடுமுறை நாட்களில் இரண்டு நாட்களை தேர்ந்தெடுத்து மாநில அளவில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும் . அந்த முகாம்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும். இதனை நடத்துவதற்கு மாநில தலைமையின் முழுமையான வழிகாட்டுதலில் மாவட்டங்கள் இந்த பயிற்சி முகாம்களை நடத்தலாம்.
|
|
Our News papers
இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Click Here to read E- Paper |
|
|
|
|
|
|
|