இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

2019 மே திங்கள் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சேர்ந்த ஒரு சிலர் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பல்வேறு புனைப்பெயர்களில் விசப் பிரச்சாரம் செய்து வருவது குறித்து தலைமை நிலையத்திற்கு தகவல் வந்துள்ளன.

தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும் செய்திகள் மட்டுமே அதிகாரப் பூர்வமானவை.கட்சியின், கண்ணியம், கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்ட பின் கட்சியின் வேட்பாளரை உரிய நேரத்தில் தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதின் அவர்கள் அறிவிப்பார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
தங்கள் அன்புள்ள 
K.A.M முகம்மது அபுபக்கர் MLA
மாநில பொதுசெயலாளர் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்