முக்கிய செய்தி

சோனியா காந்தியை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு

சோனியா காந்தியை  பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் இன்று 20.11.2019 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ் கனி எம்.பி., தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் நேரில் சந்தித்து மகஜர் கொடுத்தனர். அப்போது தேசம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும், பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படக்கூடிய மசோதாக்கள் பற்றியும் தேசிய அளவில் ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தையும் காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது