முக்கிய செய்தி

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டி

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டி
ஜார்கண்ட் கட்சி - திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில்
ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டி
டெல்லியில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு
புதுடெல்லி, நவம் 19-
புதுடெல்லி கேரள பவனில் நேற்று 18-11-2019 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது  தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ்கனி எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நடைபெறவுள்ள ஜார்கண்ட் சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜார்கண்ட் பார்ட்டி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு கொண்டு கூட்டணி ஏற்படுத்தி தேர்தல் களத்தை சந்திக்கின்றோம். 6 சட்டமன்ற தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட ‘ஏணி’ சின்னத்தில் போட்டியிட செய்வதென முடிவு செய்துள் ளோம்.

மற்ற தொகுதிகளில் கூட் டணி கட்சிகள் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இந் திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்து களப்பணி யாற்றும். ஜார்கண்ட் மாநிலத் தில் காண்டே தொகுதியில் முஹம்மது செய்யது அலம், மாண்டு தொகுதியில் அப்துல் கையூம் அன்சாரி, ராஞ்சி தொகுதியில் சகஜாபா காத் தூன், ஹட்டியா தொகுதியில் அப்துல்லா அத்ஹர் காசிமி, ஜெம்செட்பூர் தொகுதியில் மன்சர்கான், கிரீடி தொகுதியில் முர்ஷித் ஆலம் ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜார்கண்ட் பார்ட்டி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி உரு வாக்கி ஜார்கண்ட் மாநிலத்தில் எதிர்பார்ப்பையும் மதச் சார்பற்ற கட்சிகளையும் சிறு பான்மை சமுதாயத்தினரான முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பழங்குடியினர், ஆதிவாசிகள், வங்கமொழி பேசக் கூடிய வர்கள் என பல்வேறு சமூகங் களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் புதிய மாற்றத் திற்கான அடித் தளத்தை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றோம்.

இவ்வாறு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டியின் போது குறிப்பிட்டார்.