முக்கிய செய்தி

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
சென்னை ஐஐடி மாணவி
பாத்திமா லத்தீப் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சென்னை, நவம் 16-

சென்னை இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலேஜி (ஐஐடி)யில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்ற 09-11-2019 சனிக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார்.  மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை பல்வேறு சந்தேங்களை உருவாக்கி நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மத உணர்வோடு மாணவி பாத்திமா லத்தீபை அவ்வப்போது துன்புறுத்திய தாகவும், தற்கொலைக்கு முன் தனது அலை பேசியில் மாணவி பாத்திமா ஒரு செய்தியை அச்சிட்டு இருந்த தாகவும் ‘தனது கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் காரணம் என குறிப்பிடப் பட்டிருப்பதாக மாணவி பாத்திமாவின் பெற்றோர்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ள னர்.

மாணவி பாத்திமா லத்தீப் பெற்றோர்கள் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து தங்கள் மகளின் தற்கொலையில் மிகுந்த சந்தேகம் அடை வதாகவும், தற்கொலைக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்த வேண்டு மென தெரிவித்தனர்.

கேரள சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற கட்சித் தலைவரும், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான டாக்டர் எம்.கே. முனீர் கோயா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து ‘ மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கும் கேரள மாணவர் களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி பேசினார்’.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும்,  சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.வை கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் டாக்டர் எம்.கே. முனீர் கோயா எம்.எல்.ஏ., கொல்லத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான யூனுஸ் குஞ்சு ஆகியோர் தொடர்புகொண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீப் பெற்றோர் சென்னை வர இருப்பதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறை டி.ஜி.பி., எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்திப்பதற்குண்டான ஏற்பாடுகளை செய்திடவும், மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கிடைத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உரிய நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தினர். தொடர்ந்து தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆலோசனையின் அடிப்படையில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ நேற்று (15-11-2019) சென்னை வந்த மாணவி பாத்திமா தந்தை மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சந்திப்பதற்குண்டான ஏற்பாடுகளை செய்ததோடு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீபை உடன் அழைத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை மனு அளித்தார். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து முதலமைச்சர் காவல்துறை உயர் அதிகாரிகளை கொண்ட விசா ரணைக்குழு அமைக்கப் பட்டிருப்பதையும், அதில் பெண் அதிகாரியையும் இடம் பெறச் செய்திருப்பதையும் தெரிவித்த தோடு, தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி யளித்ததோடு  அப்பொழுதே முதலமைச்சர் இல்லத்திற்கு காவல்துறை டி.ஜி.பி.யை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து திமுக தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வருமான தளபதி மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீபுடன் சென்று சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., துணைத்தலைவர்  கவிஞர் கனிமொழி எம்.பி., நாடாளு மன்ற உறுப்பினர்களான ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மாணவி பாத்திமாவின் தந்தையிடம் அனைத்து விஷயங்களையும் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் விரிவாக கேட்டறிந்ததோடு, திமுக சார்பில் அறிக்கை வெளி யிட்டிருப்பதையும் நடைபெற வுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக சார்பில் மாணவி பாத்திமா மரணம் குறித்து குரல் எழுப்பப்படும் என உறுதியளித்தனர்.

மாணவி பாத்திமா மறைவு குறித்து விசாரணை நடத்த உருவாக்கப்பட்டுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் குழுவுக்கு தலைமையேற் றிருக்கும் ஈஸ்வர மூர்த்தி ஐ.பி.எஸ்ஸை கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ தொடர்பு கொண்டு துரிதமான நடவடிக்கை மேற்கொண்டு மாணவி பாத்திமாவுக்கு நீதி கிடைக்க  வலியுறுத்தினார்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.வுடன் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் பழவேற்காடு எம். அன்சாரி, தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், இணைச் செயலாளர் புளியங்குடி முஹம்மது அல் அமீன், கேரள முஸ்லிம் கல்சுரல் சென்ட்ர் (கே.எம்.சி.சி.) தமிழ்நாடு தலைவர் குஞ்சுமோன், சென்னை பொதுச்செயலாளர் உபைதுல்லா, செயலாளர் அப்துல் ரஹீம், சோழிங்கநல்லூர் பகுதி தலைவர் யூனுஸ் அலி, ஒ.எம்.ஆர். பகுதி தலைவர் அஷ்ரப், வழக்கறிஞர் முஹம்மது அப்பா உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்களவை கொறடா கே. நவாஸ்கனி எம்.பி. நேற்று மாணவி பாத்திமா தந்தை மற்றும் கேரள அசோசியேசன் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய தோடு நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாணவி பாத்திமா மரணம் குறித்து குரல் எழுப்பப்படும் என்று தெரிவித்தார்.

நேற்றிரவு (15-11-2019) சென்னையில் நடைபெற்ற அனைத்து மலையாளி சங்கத்தின் கூட்டத்தில் மாணவி பாத்திமா மரணம் குறித்த நடவடிக்கை காக வேண்டி கே.எம்.சி.சி. தலைவர் குஞ்சுமோன் தலைமையில் கூட்ட நடவடிக்கை குழு உருவாக்கப் பட்டுள்ளது.