முக்கிய செய்தி

புதுடெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

புதுடெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தேசம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து
முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில்  பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த முடிவு
புதுடெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

புதுடெல்லி, நவம் 20-

தேசம் எதிர்நோக்கி யுள்ள பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில், வரும் காலங் களில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கலந்தாலோசனைக் கூட்டம் நடத்துவது என்று புதுடெல்லியில் நடை பெற்ற முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப் பட்டுள்ளது.
புதுடெல்லி லோதி ரோட்டிலுள்ள இஸ்லாமிய கலாச்சார மைய கூட்டரங்கில் 19-11-2019 இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

இம்மாதம் 11ம் தேதி கேரள மாநிலம் பானக்காட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செக்ரடேரியர் கூட்டத்தில் பாபரி மஸ்ஜித் சம்மந்தப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதித்து போற்றுகிறது என்றாலும், முஸ்லிம் சமுதாயத்தின் அமைப்புகள், முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் அந்த தீர்ப்பைப் பற்றி பலத்தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்திய முஸ்லிம் சமுதாயத்தினுடைய கருத்தை ஒருமுகப்படுத்தும் முயற்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் முதற்கட்டமாக டெல்லியில் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புக் களின் தலைவர்களின் கூட் டத்தை 19-11-2019 அன்று கூட்டப்பட்டது. இதற்கான அழைப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி. அனைத்து சமுதாய, அரசியல்  இயக்கங்களின் தலைவர் களுக்கும் அனுப்பினார்.

அதனடிப்படையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதுடெல்லி இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பஷீர் அஹமதுகான் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி. வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செய லாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி, இன்றைய அரசியல் நிலைமை பற்றியும், முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், பாபரி மஸ்ஜித் சம்மந்தமாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்த பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றியும், குளிர்கால நாடாளுமன்ற கூட் டத் தொடரில் விவாதிக்கப்பட இருக்கிற பல்வேறு மசோதாக் களை பற்றியும் விவரித்து உரையாற்றினார்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தேசிய பொருளாளர் ரியாஸ் உமர், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்தின் தேசிய தலைவர் நவீத் ஹமீது, அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய நிர்வாகக் குழு உறுப்பினரும், டெல்லி சிறுபான்மை துறை முன்னாள் சேர்மனுமான கமால் பரூகி, இஸ்லாமிக் பைனான்ஸ் இயக்குனர் ஜெஸில் அப்துல் வாகித், வெல்பர் பார்ட்டி ஆஃப் இந்தியா தேசிய தலைவர் டாக்டர் இல்யாஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையுரையாற் றினார்.

இக்கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

வருங்காலங்களில் பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய கலந்தாலோசனைக் கூட் டத்தை நடத்துவது என்றும், இந்த கூட்டத்தில் தேசிய அரசியலில் அவ்வப்போது ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சினைகள் பற்றியும், முஸ்லிம் சமுதாய பிரச்சினை மட்டுமல்ல, தேசம் எதிர் நோக்கியுள்ள எல்லா பிரச் சினை பற்றியும் அந்த கூட் டத்தில் முடிவெடுத்து, முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து என்ன என்பதை வெளியிடக்கூடிய ரீதியில் அந்த கூட்டத்தில் முடிவுகள் இருக்கும்.

மஜ்லிஸே முஷாவரத்தின் தலைவர் நவீத் ஹமீது இக் கூட்டங்களுக்கு ஒருங் கிணைப் பாளராக  இருப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டது. 

இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ்கனி எம்.பி., இஸ்லாமிய பைனான்ஸ் அஹமது பர்வேஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், டெல்லி மாநில துணைத்தலைவர் மொய்னுதீன், டெல்லி மாநில செயலாளர் நூர் சம்ஸ், எம்.எஸ்.எப். தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், எம்.எஸ்.எப். தேசிய இணைச் செயலாளர் அத்தீப்கான் ஆகியோர் பங்கேற்றனர்.
பாராளுமன்ற மஸ்ஜித் இமாம் மௌலானா முஹி புல்லா நத்வி துஆ ஓதினார்.