முக்கிய செய்தி

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
இந்திய முஸ்லிம்களுக்கு அரசியலில் ‘இமாமே ஹிந்த்’ எனப் போற்றப்படுபவர் சையது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள்
எந்த தேர்தலிலும் முஸ்லிம்களை வேட்பாளர் ஆக்குவதில்லை என்ற புதுவகை தீண்டாமையை இந்திய அரசியலில் பா.ஜ.க. உருவாக்கி விட்டது
கேரளாவில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
கோழிக்கோடு, ஜன 03-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் 02-01-2021 அன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் கேரள மாநிலம் கோழிக்கோடு ஈஸ்ட் அவென்யூ ஹோட்டலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில்  நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையுரை யாற்றியதாவது:-
பேரன்புக்குரிய சகாக்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருளும் கிருபையும் கிடைக்குமாக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் நிர்வாகக் குழு கூட்டம், மிகச் சிறப்பாக நடைபெற்றது.  நமக்கெல்லாம் ஆன்மீக ஒளிச் சுடராகத் திகழும் மிகவும் கண்ணியத்திற்குரிய சையது ஹைதர்அலி சிஹாப் தங்ஙகள் அவர்களின் சீர்மிகு முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. எல்லா வகையிலும் சிறப்புக் குரியதாகும். தங்ஙள் அவர்கள் மிகப் பெரும் கல்விக் களஞ்சியம்; அருட் செல்வர்; இந்திய முஸ்லிம்களுக்கு அரசியலில் ‘இமாமே ஹிந்த்’ எனப் போற்றப்படுபவர். சமுதாயமும் இந்த இயக்கமும் அவரின் சீரிய நேரிய வழிகாட்டுதலில் முன்னேற்றப் பாதையில் வெற்றிப் பயணத்தை மேற்கொண்டிருப்பது நாம் பெற்றுள்ள மிகப் பெரும் பேறாகும்.
முதலில், கேரள மாநில முஸ்லிம் லீகிற்கு நமது மனப்பூர்வமான பாராட்டுதல் களைத் தெரிவிப்போம். நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இ.யூ. முஸ்லிம் லீக் அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. முஸ்லிம் லீகின் பலமான பகுதிகள் யாவற்றிலும் இ.யூ. முஸ்லிம் லீக் தனது தனித்துவமிக்க வெற்றியை நிலைநாட்டியிருக்கிறது. தங்ஙகள் அவர்களின் கேரள சிங்கக்குட்டி குஞ்ஞாலிக்குட்டியின் வீரமிக்க செயலாற்றலில், மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பால், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றிகள் குவிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்குக் கேரளம் ஓரு அழகிய முன்மாதிரியாக எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது எனக் கூறி, கேரளத்துக்கு நமது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிப்போம்.
கேரளாவுக்கு நன்றி பாராட்டு
இப்போது இங்கே நடைபெறும் இ.யூ. முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகக் குழு கூட்டத்திற்கான செலவினங்கள் யாவையும் கேரள மாநில முஸ்லிம் லீக் கமிட்டி ஏற்றியிருக்கிறது. தேசிய கமிட்டி கூடடங்களுக்கு ஆகும் செலவுகளை தாராள மனதுடன் ஏற்பது கேரள கமிட்டிக்கு வழக்கமாகிவிட்டது. கேரள முஸ்லிம் லீக் கமிட்டி செய்து வரும் உதவிகளுக்கு நாம் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பது கடமையாகும். அதே சமயம், தேசிய கமிட்டி சகாக்களுக்கு எனது அன்பான வேண்டுகோளையும் இங்கே முன் வைப்பது எனது பொறுப்பாகும். தேசிய கமிட்டியின் நிதி நிலையைப் பெருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. நிதி சேர்ப்பது பற்றித் தீவிரமான கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.
அருமையான சகாக்களே! இந்தக் கூட்டம் இயக்க அமைப்பு மற்றும் பணிகள் பற்றிச் சிந்திக்கவும், நாட்டில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கவும், இந்த ஆண்டில் நடைபெறவுள்ள அஸ்ஸாம், மேற்கு வங்காளம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் பற்றியும், இ.யூ. முஸ்லிம் லீக் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் வியூகங்கள் பற்றியும் ஆய்வதற்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இ.யூ. முஸ்லிம் லீகின் தத்துவம்
இ.யூ. முஸ்லிம் லீகினர், தேசிய ஒருமைப்பாடு, சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை, நாட்டு மக்களின் கலாச்சார அடையாளங்களைப் பேணுதல் போன்றவற்றை மதித்துப் போற்றுவதும், அவற்றை நிலைநிறுத்தப் பாடுபடுவதும் தங்களின் தலையாய கொள்கையாக ஏற்றிருக்கிறார்கள். அதோடு, நமது இயக்கத்தின் தத்துவம் பற்றிய தெளிவு எல்லோருக்கும் இருந்தாக வேண்டும்.
இ.யூ. முஸ்லிம் லீகின் தனிப் பெரும் தலைவர் களாகத் திகழ்ந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆன்மீகப் பேரொளி அப்துர் ரஹ்மான் பாபகி தங்ஙள் போன்ற மேதைகள், மதவழிப்பட்ட சிறுபான்மையினர் வாழும் பகுதிகளிலேதான் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீர், லட்சத் தீவு போன்றுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்பை விரிவுபடுத்துதல் அவசியப்படாது என்றும் அறிவுறுத்தியிஇருக்கிறார்கள்.
இந்தியாவின் பிற மாநிங்களில் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்பை உருவாக்க முனையும்போது, கேரளாவை முன்மாதிரியாகக் கொண்டே செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
2021 அமைப்புப் பணி ஆண்டு
மாநில சட்டப் பேரவை தேர்தல் நடக்காத மாநிலங்கள் அனைத்திலும் 2021 ஜனவரி முதலே இ.யூ. முஸ்லிம் லீகில் உறுப்பினர் சேர்ப்புப் பணியைத் துவங்க வேண்டும். 2021 இயக்க அமைப்புப் பணிக்கான ஆண்டு எனக் கருத்தில் கொண்டு, பிரைமரி லீகுகள், மாவட்ட லீகுகள், மாநில லீகுகள் என்று அமைக்கும் பணியில் முனைந்து ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இயக்க அமைப்புப் பணி யில் ஈடுபடும் மாநிலங்களில் எடுத்த எடுப்பிலேயே பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலிகளில் போட்டியிடு வதைத் தவிர்த்து, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் முதலில் ஈடுபட்டு, தங் களின் வலிமையையும் திறமையையும் தகுதியையும் நிலைநிறுத்துவதில் முனைப் புக் காட்ட வேண்டும்.
ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும், தனக்கென, ஓர் அலுவலகம் ஏற்படுத்துவதும், அதன் அஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரியப் படுத்துவதும் மிக மிக அவசிய மாகும்.
ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் வங்கிக் கணக்கு தொடங்குவதுடன், அதன் முழு விவரத்தை இ.யூ. முஸ்லிம் லீகின் தலைமை நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநில லீகும், அந்த மாநில தேர்தல் ஆணையத்தில் இ.யூ. முஸ்லிம் லீகைப் பதிவு செய்து, அந்தப் பதிவு எண் பற்றிய தகவலை இ.யூ. முஸ்லிம் லீக் தலைமையகத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
மாநில பொறுப்பாளர் நியமனம்
மாநில அளவில் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்பு மற்றும் பணிகள் மேற்கொள்வதற்கு, இ.யூ. முஸ்லிம் லீகால் நியமிக்கப்படும் மாநில பொறுப்பாளர் மற்றும் துணைப் பொறுப்பாளர் அறிவிக்கப்படுதல் அவசிய மாகும். இந்தப் பொறுப் பாளர்கள், மாநிலங்களில் உறுப்பினர் சேர்ப்பு மற்றும் இயக்க அமைப்புகளுக்கான ஆலோசனைகள் வழங்கு வார்கள். அதோடு, அந்த மாநிலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேர்தல் உறவு, உடன்பாடு கொள்ளத்தக்க வகையில், இ.யூ. முஸ்லிம் லீகின் கொள்கைக்கு உடன்படக்கூடிய பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேர்தல் உடன்பாடுகளுக்கு வழியேற்படுத்தும் பணி களையும் இந்தப் பொறுப் பாளர்கள் செய்வார்கள்.
இ.யூ. முஸ்லிம் லீக் பயிற்சி முகாம்
தேசிய கமிட்டி சார்பில் ஐவர் குழு ஒன்று உருவாக்கப்படுதல் அவசிய மாகிது. இக்குழுவினர் ஒவ் வொரு மாநிலத் தலைநகரிலும் இ.யூ. முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் நடத்தும் பணியை ஏற்றாக வேண்டும். லீகர்கள் பங்கேற்கும் அந்த முகாமில் இ.யூ. முஸ்லிம் லீக் வரலாறு, கொள்கைகள், திட்டங்கள், தேர்தல் அணுகு முறைகள் பற்றிய விரிவான விளக்கங்கள் தரப்படுதல் வேண்டும். தேசியத் தலைவர்களுடன், கல்வியாளர்கள், பத்திரிகை யாளர்கள், மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், ஒத்த கொள்கையுடைய அரசியல் கட்சித் தலைவர்கள் போன்ற வர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்குமாறு செய்திட வேண்டும்.
2021 ஆம் ஆண்டு முழுவதும் இயக்க அமைப்பு மற்றும் இயக்கக் கொள்கைப் பரப்புரைக்காக ஒதுக்கிச் செயல்படுத்துவதில் இ.யூ. முஸ்லிம் லீகின் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல் நிலைமை
இன்றைக்கு இந்தியாவில் நிலவும், அரசியல் சூழ்நிலை பற்றி ஆய்வோமானால், நாடு ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று சந்தேகத்திற்கிடமின்றி கூறி விடலாம்.
மத்தியில் ஆளும் கட்சி யால், ஜனநாயகக் குடியரசுக்கு ஆபத்து தொடர்வதாகவே தெரிய வருகிறது.
நாட்டில் தொன்று தொட்டு வழக்கத்தில் நீடித்து வரும் கலாச்சார வேற்றுமைகள், அரசியலில் நிலவும் பன்முகத்தன்மை, மதச்சார்ப்பற்ற மாண்புகள், சமூகங்களுக்கிடையில் நிலவி வரும் சுமூக ஒன்றிணைவு போன்ற வற்றுக்கு பா.ஜ.க. அரசால் ஏற்பட்டுள்ள ஆத்திர மூட்டும் நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கூட்டாட்சித் தத்துவம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்துள்ள மேதைகள், இந்தியாவை ‘மாநிலங்களில் ஒன்றியம்’ என்றே வருணித்துள்ளார்கள். இந்த வருணனை மூலம், இந்தியா ஒரு வலிமைமிக்க கூட்டாட்சி அமைப்பாகத் திகழும் என்பதையே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், மத்தியில் ஆளும் அரசு வகுத்துள்ள கொள்கைகள், நிறைவேற்றிய சட்டங்கள், வெளியிடும் சீர்திருத்தங்கள் போன்றவற்றை நோக்கும்போது, பா.ஜ.க. அரசு, தனது மறைமுகத் திட்டத்தை, இரகசியமான முறையில் நடைமுறைக்கு கொண்டுவந்து, இந்தியாவை இந்துதுதுவக் கொள்கையில் இயங்கும் விதமாக, ஒரு பாசிஸ மேலாண்மைமிக்க அரசியல் சர்வாதிகாரத்தின்  கீழ் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருவதாகவே தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது.
சிறுபான்மைக்கு எதிரான அழிவு சக்தி
மேலும், நாட்டில் உள்ள மொழி வழி, மத வழி, இனவழி மற்றும் கலாச்சார வழிப்பட்ட சிறுபான்மையினர்மீது, தனது எஜமானத்துவ ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாகவே பா.ஜ.க. அரசின் கொள்கை முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மத்தியிலும், மாநிலங்க ளிலும் உள்ள பா.ஜ.க. அரசு கள், குறிப்பாக, முஸ்லிம் சிறு பான்மையினருக்கு எதிரான அழிவு சக்திகளாகவே இயங்கத் துவங்கியிருக்கின்றன.
இந்தியாவில் வாழும் 22 கோடி முஸ்லிம்களை ஒதுக்கி, ஓரங்கட்டி, அந்நியப்படுத்தி, காலப் போக்கில் அழிவுக்கு உள்ளாக்கிவிடலாம் என்னும் தீய நோக்கடன் பா.ஜ.க. அரசின் கொள்கைகள் உரு வாக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க. சார்பில் எந்தத் தேர்தலிலும் முஸ்லிம்களை வேட்பாளர் ஆக்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு இந்திய அரசியலில் ஒரு புதுவகை தீண்டாமையை பா.ஜ.க. உருவாக்கிவிட்டது. அதைத் தொடர்ந்து, இஸ் லாம் பற்றிய தவறான பிரச்சாரங்களை உள் நாட்டலும் அயல்நாடுகளிலும் நடத்தினர்; கர்&வாபஸி கொள்கையை வகுத்து, முஸ்லிம்களை மிலேச்சர்கள் எனவும், அயல்நாட்டினர் எனவும், வந்தேறிகள் எனவும், இந்திய கலாச்சாரத்தை அழித்தவர்கள் எனவும், அபாண்டப் பழிகளைச் சுமத்தி, முஸ்லிம்களை தாய் மதமான இந்து மதத்திற்குத் திருப்பும் பணியைச் செய்வதாக அறிவித்து, கர்வாபஸி விழாக்களையும் நடத்தினர். கௌரக்ஷா இயக்கம் என்று தொடங்கி, நூற்றுக்கணக்கில் தலித் மற்றும் முஸ்லிம்களை கும்பல் கொலை செய்தனர்; இது தேசத்தின் பல பகுதிகளிலும் நடந்தது. தற்போது பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள், ‘லவ் ஜிஹாத்’ தடுப்புச் சட்டம் என்ற பெயரால், குடும்பங்களில் உள்ள அமைதியைக் குலைத்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முன்னரே, முத்தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்றினர்; குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலிருந்து முஸ்லிம்களை நாடு கடத்தும் கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இவற்றை உன்னிப்பாக நோக்கும்போது ஒரு தெளிவான உண்மை புலப்படவே செய்யும். மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் பா.ஜ.க.வினர், சிறு பான்மை முஸ்லிம்களை விரோதிப்பதில் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்திய அரசியல் அரங்கில் பா.ஜ.க. தன்னை சிறு பான்மையினரின் உறுதியான அரசியல் எதிரி என்னும் செய்தியை வெளியிட்டு வருகிறது என்பது உண்மை யாகி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பரம எதிரி யார் என்பது பற்றியும் அந்த எதிரக்கு எவரெல்லாம் நேசர்களாக இருக்கிறார்கள் என்பதையும், அந்த எதிரியின் எதிரிகளாக யார் யார் இருக்கிறார்கள் என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டியவர்களாகிறோம். இத்தகையவர்களுடன் இ.யூ. முஸ்லிம் லீக் அனுசரிக்க வேண்டிய அணுகு முறைகள், வியூகங்கள் பற்றி தீர்மானிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும் தீர்க்கமான முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

முஸ்லிம் லீகர்களாகிய நாம், ஏகத்துவ இறைக் கோட்பாட்டிலும், மானி டரின் உலகளாவிய சகோத ரத்துவத்திலம், சமுதாயங் களுக்கிடையிலான புரிந் துணர்வுமிக்க கூட்டு வாழ்க்கை யிலும் ஆழமான நம்பிக்கை கொண் டிருக்கிறோம். எந்தவொரு சமுதாயத்தையும் தேசத்திலும், உலகிலம், ஒதுக்கி, ஓரங்கட்டி ஒழிக்கத் துணியும் அரசியல் தத்துவத்தை இ.யூ. முஸ்லிம் லீக் ஒருபோதும் ஊக்குவித்தது இல்லை. மனித சமுதாயத்தின் பகிரங்க எதிரி சைதான் என்று நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். அரசியலில் நிரந்தரப் பகை வரும் இல்லை; நிரந்தர நேசரும் இல்லை என்று பொதுவாகச் சொல்லப்படுவதை அறிந் திருக்கிறோம். இங்கே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் கூறியதை நினைவு கூறலாம். இ.யூ. முஸ்லிம் லீகின் தேர்தல் கூட்டணி பற்றிக் குறிப்பிடும்போது, மைனாரிடிகளுக்கு எதிராகப் பின்பற்றும் விரோத, வெறுப்பு, பகைமைக் கொள்கையை ஜனசங்கம் விட்டுவிடுமானால், குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் அக்கட்சியுடனும் கூட்டு சேர இ.யூ. முஸ்லிம் லீக் தயங்காது என்று கூறினார்.
அதேபோல, கேரளாவில் இ.யூ. முஸ்லிம் லீக் கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டணி சேர்ந்த நேரத்தில் சையது அப்துர் ரஹ்மான் பாபகி தங்ஙள் அவர்களிடம் புனேயில் பத்திரிகையாளர் வினா எழுப்பியபோது, மைனாரிடி விரோத, வெறுப்புப் போக்கை இந்த மகாசபை கைவிடுமானால், அதனுடன் சேர்ந்து கூட ஜனநாயகத் தேர்தலில் பங்கு பெறுவதை மகிழ்ச்சியோடு செய்வோம் என்று கூறியுள்ளார்.
இத்தகைய வரலாற்று நிகழ்வுகள் மூலமாக, எல்லோருடனும் இணக்க மாகவும் யாருடனும் பிணக்கம் இல்லாமலும் செல்லும் கொள்கையை இ.யூ. முஸ்லிம் லீக் தொடர்ந்து பின்பற்றி வருவதை உணர முடிகிறது.
இ.யூ. முஸ்லிம் லீக் பின்பற்றி வரும் எல்லோரையும் அரவணைப்பதும் யாரையும் அந்நியப்படுத்தாமல்  இருப் பதுமான கொள்கைதான், காலத்தால் சோதிக்கப்பட்டு, உவந்து தேர்ந் தெடுக்கப்பட்டு மைனாரிடிகள் பின்பற்றத் தக்கதான அரசியல் பயணப் பாதையாக அமைந்திருகுகிறது. புதிய நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் எழுச்சி யுடனும், ஒற்றுமையுடனும் முன்னேறுவோம்; சமயச் சார்ப்பற்ற ஜனநாயகத்தை அமைக்க உழைப்போம்; சமாதானம், ஒற்றுமை, ஆனந்தமயமான கூட்டு வாழ்க்கை ஆகியவற்றில் அழகிய முன்மாதிரியாகத் திகழுமாறு நமது தாயகத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசி யுள்ளார்.