முக்கிய செய்தி

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பானக்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பானக்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்
பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முரண்பாடுகள் நிறைந்துள்ளதாக முஸ்லிம் சமுதாயம் அதிருப்தி
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பானக்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்

பானக்காடு, நவ. 12-
பாபரி மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் முரண்பாடுகள் நிறைந்து ள்ளதாக முஸ்லிம் சமுதாயம் அதிருப்தி அடைந்துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பானக் காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைமை செயலக கூட்டம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பானக்காட்டில் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலும் அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் முன்னி  லையிலும், நேற்று 11-11-2019 காலை 11 மணி முதல் பிற்பகல் 2. 30 மணி வரை நடந்தது. 

செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், பேராசிரியர் முனிரூல் மில்லத் அவர்களின் மனைவி ஜி. லத்தீபா பேகம் அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்து கூட்டத்தை துவக்கி வைத்தார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி. வரவேற்புரை ஆற்றினார். தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாபரி மஸ்ஜித் ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகு நாட்டில் நிலவிய சூழ்நிலை பற்றியும் முஸ்லிம் சமுதாயம் கொண்ட உணர்வு பற்றியும் தெரிவி த்தார். 

இதுபற்றி நடந்த விவாதத்திற்கு பிறகு நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

பாபரி மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முரண்பாடுகள் நிறைந்து ள்ளது என இந்திய முஸ்லிம் சமுதாயம் அதிருப்தி கொண் டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் இந்திய நீதித்துறையில் உச்சகட்ட அதிகாரம் கொண்டதாக உள்ளது. அதன் தீர்ப்பை தேசத்தின் சட்டமாக மதித்து போற்ற வேண்டியிருக்கிறது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நிலையில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயமும், சகோதர சமுதாயங் களும் பக்குவமான அணுகு முறையை வெளிப் படுத்தும் வகையில் அமைதி, சுமூகம், நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநிறுத்தி உள்ளதை இக்கூட்டம் மிகவும் பாராட்டுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன் தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி., தேசிய அமைப்பு செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வகாப் எம்.பி., மக்களவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கொறடா கே. நவாஸ் கனி எம்.பி., செய்யது சாதிக் அலி தங்ஙள், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் டாக்டர் முனீர், தேசிய செயலாளர்கள் குர்ரம் அனீஸ் உமர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச். அப்துல் பாசித் ஆகியோர் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

விரைவில் முஸ்லிம் அரசியல் அமைப்பு களுட னும், தேசிய அளவிலான மதச் சார்பற்ற ஒத்த கருத்துடைய இயக்கங் களுடனும் ஆலோசனை மேற்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மூத்த துணைத் தலைவர் அப்துஸ் ஸமது ஸமதானி, தேசிய செய லாளர்கள் சிராஜ் இப்ராஹிம் சேட், நயீம் அக்தர், தேசிய துணைச் செயலாளர் யூனுஸ் குஞ்சு கலந்து கொண்டனர். 

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.எம். மஜீத், தமிழ்நாடு மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், இ.யூ.முஸ்லிம் லீக் கேரள சட்டப்பேரவை துணைத் தலைவர் இப்ராஹிம் குஞ்சு, கேரள மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், ரந்ததானி, முஸ்லிம் யூத் லீக் தேசிய பொதுச் செயலாளர் சி.கே.சுபைர், கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே.பைரோஸ், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய தலைவர் டி.பி.அஷ்ரப் அலி, தேசிய பொதுச் செய லாளர் எஸ்.ஹெச். முஹம்மது அர்ஷத், சுதந்திர தொழி லாளர் யூனியன் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஹ்மத்துல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் என். முஹம்மது நயீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.